ஞாயிறு, 24 டிசம்பர், 2023

உன்னைச் சுடுமோ -16

 இரண்டு மணிக்கு நிருதி பாரில் உட்கார்ந்து பியர் குடித்துக் கொண்டிருந்தபோது கிருத்திகாவிடம் இருந்து போன் வந்தது. 


எடுத்துப் பேசினான்.


“ஹாய் கிருத்து டார்லிங் ”


“ஹாய்.. வொர்க்கா?” மெல்லக் கேட்டாள்.


“ஏன்ப்பா?”


“சும்மாதான்.. என்ன கசகசனு ஒரே சத்தம்?”


“இன்னிக்கு ஒர்க் இல்ல.. ஸோ..”


“ஸோ.. ?”


“வீட்டுக்கு போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்னு…”


“ரெஸ்ட் எடுக்கலாம்னு.?”


“லைட்டா ஒரு பீர்…”


“என்னது.. பீரா? பார்லயா?”


“ம்ம்”


“யார்கூட?”


“பிரெண்டோட. ஆளுக்கு ஒண்ணு அடிச்சிட்டு போய் நல்லா தூங்கி எந்திரிக்கலாம்னு..”


“ஏன்.. நைட்ல தூங்கினா என்னவாம்?”


“நைட்ல எங்க தூங்க முடியுது?”


“என்ன கேடு? ”


“ஒரு கட்டழகி வந்து டெய்லி தூங்க விடாம டார்ச்சர் பண்றா என்னை”


“லொள்ளு?”


"உண்மைபா.."


"ஒதை வாங்குவீங்க"


"வாங்கினா கெடக்குது"


“நெஜமா.. ஒதைதான்..”


“ஐ மிஸ் யூ கிருத்து.."


"இருக்கட்டும்"


"என்னை ரொம்ப பீல் பண்ண வெக்கற நீ”


"அய்ய.. அதெல்லாம் வேண்டாம்”


“எது.. பீல் பண்ண வேண்டாமா?”


“அதில்ல.. குடிக்க வேண்டாம்”


“ஏன்?”


“நீங்க.. என்னை மிஸ் பண்றீங்கள்ள?”


“ஆமா..”


“குடிக்கலேனா.. என்னை மிஸ் பண்ண மாட்டிங்க”


“என்னது?”


“குடிக்காதீங்க.. ஓகேவா?”


“ஏய்..”


“…….”


“கிருத்து..”


“குடிக்காம வீட்டுக்கு போங்க.. ஓகேவா.. இட்ஸ் மை ஆர்டர்”


“ஐய்யய்யோ..”


“என்ன?”


“ஓபன் பண்ணி உன் கிட்ட பேசிட்டே வாய் வெச்சிட்டேனே?”


“பரவால. அதை தூக்கி வீசிட்டு கிளம்புங்க..”


“காசு குடுத்து வாங்கிட்டேன். அதை வேஸ்ட் பண்ணாம இந்த ஒரு தடவை குடிச்சிக்கறேன். இதான் லாஸ்ட்.. ஓகேவா?”


“என் பேச்சை கேக்க மாட்டிங்களா?”


“இந்த ஒரு தடவை மட்டும்ப்பா.. ஓகே?”


“........"


“ப்ளீஸ் கிருத்துமா.. ப்ளீஸ்”


“ஓகே.. ஒண்ணே ஒண்ணுதான்”


“தேங்க்ஸ்..”


“உடனே கிளம்புங்க”


“ஓகே. லவ் யூ”


“ம்ம்..”


“நீ எப்போ வருவ?"


“எங்க?”


“வீட்டுக்கு? ”


“எதுக்கு? ”


“உன்ன மீட் பண்ணனும்”


“மீட் பண்ணி?”


"சும்மா.. பாத்து பேசி.."


"பாத்து பேசி..?"


“கிஸ்ஸடிக்கனும்”


"அலோ.. நான் ஒண்ணும் உங்க வொய்ப் இல்ல"


"ஆமா.. என் லவ்வர்.. ஒய்ப்னா இப்படி கேட்டுட்டிருக்க மாட்டேன்.."


"ஒதை கிடைக்கும் பாத்துக்கோங்க.."


“பரவால.. ஆனா எனக்கு கிஸ் வேணும்”


“எப்படி,? உங்க வொய்ப் இருப்பாங்கள்ள?”


“நீ ஓகே சொல்லு. அது மட்டும் போதும்"


“ம்ம்.. ஓகே.. போதும்ல?"


“ஓகே தேங்க் யூ.. இது போதும்.. உன் லிப்ஸை ரெடியா வெச்சிக்க"


“அய.. ஆளை பாரு.." சிரித்தாள்.


"உன் லிப்ஸ் எனக்கு அவ்ளோ புடிக்கும்"


"ம்ம்.. அது ஏன்? மத்ததெல்லாம் புடிக்காதா?"


"புடிக்குமே.. எல்லாமே.."


"ஓகே.. பை.."


"ஏய்.. இரு.."


"இல்ல.. பிரெண்டு கால் பண்றா.. பேசணும்.."


"ஓகே.."


"பை.."


"பை.."


அவன் உற்சாக மிகுதியில் ஒன்றுக்கு இரண்டு பியர்களாகக் குடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான்.. !!


மதியத்துக்கு மேல் கிருத்திகாவின் அம்மாவும் பக்கத்து ஊரில் இருக்கும் தெரிந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் பத்திரிக்கை கொடுக்கப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனாள்.


அம்மாவும் போனபின் அவளுக்கு மனது மிகவும் அலை பாய்ந்தது. உடம்பும் மனசும் துறுதுறுவென்றிருந்தது. 


தனது வருங்கால கணவனை அழைத்துப் பேசலாம் என்று ஆசைப்பட்டாள். ஆனால் தானே வழியப் போய் பேசினால் அலைவதாக நினைத்து விடுவானோ என்று தோன்றியது. 


தன் மனதில் இருப்பதை பேசவும், கிண்டல் கேலி செய்யவும் நிருதிதான் சரியான ஆள் என்று தோன்றியது.


உடனே நிருதிக்கு போன் செய்தாள். ரிங் போனது. அவன் எடுக்கவில்லை. அவளுக்கு கோபமாக வந்தது. மீண்டும் அழைத்தாள். அப்போதும் எடுக்கவே இல்லை.


வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்த நிருதியின் போன் விடாமல் அழைத்து தூக்கத்தில் இருந்து விழிக்க வைத்தது.


 போனை எடுத்துப் பார்த்தான். 


கிருத்திகாவின் அழைப்பு. ஆனால் உடனே கால் கட்டானது.


 கண்களை நன்றாக திறந்து போனைப் பார்த்தான். டிஸ்ப்ளே எட்டு மிஸ்டு கால்கள் என்று காட்டியது. 


அவன் போன் லாக் எடுக்கும் முன் மீண்டும் கால் வந்தது. அவள்தான்.. !!


“ஹலோ?” தூக்கக் கலக்கத்துடன் பேசினான்.


“ஹலோ.. என்ன தூக்கமா?” கிருத்திகாவின் கோபமான குரல்.


“ம்ம்.. ஆமா கிருத்து. ஏன்?”


"என்ன தூக்கம் இப்ப?"


"சொன்னேன்ல? லைட்டா பீர்.."


"போதும் தூங்கினது.."


"சரி.."


“தூக்கத்தை கெடுத்துட்டேனா?” சட்டென கொஞ்சலாகப் பேசினாள்.


“ஆமா ”


“ஆமாவா? இப்படி கேட்டா இல்லேனு சொல்லணும்”


சிரித்தான். 

“அப்படியா? சரி.. இல்ல..”


“லொள்ளு?”


“ம்ம்”


“என்ன ம்ம்..? எவ்ளோ நேரமா கால் பண்றேன் தெரியும்மா?”


“தெரிய்யலப்பா. எவ்ளோ நேரமா பண்ற?”


“ஒன் அவரா கால் பண்ணிட்டே இருக்கேன். எடுக்கவே இல்ல”


“அப்படியா? ஸாரிப்பா.. நான்தான் தூங்கப் போறேனு சொன்னேன் இல்ல?”


“பீரு குடிச்சிட்டு”


“ஆமா.. பீர் குடிச்சிட்டு..”


“அப்போ என் பேச்சை மதிக்கல?”


“மதிச்சதுனாலதான் அந்த ஒரு பீரை கூட முழுசா குடிக்காம வந்து படுத்தேன்”


”நம்பிட்டேன்”


“நெஜமாப்பா”


“இப்பவும் மப்புதானா?”


“சே.. பீருக்கெல்லாம் மப்பு ஏறாது”


“வேற எதுக்கு மப்பு ஏறும்?”


“ஹாட்.. சரக்கு அடிச்சாதான் மப்பு ஏறும்”


“ம்கூம்..”


“ம்ம்”


“எனக்கு கடுப்பே ஆகிருச்சு”


“ஏன்?”


“ஒன் அவரா கால் பண்ணிட்டே இருக்கேன். எடுக்கவே இல்ல”


“ஒன் அவரா பண்றியா?”


“பின்ன? போனை பாருங்க தெரியும்”


“இப்பதான்ப்பா எனக்கு தூக்கம் கலைஞ்சுது. ஸாரி”


“நல்லா தூங்கினீங்க”


“சரி.. நீ எங்க இருக்க இப்ப?”


“வீட்ல”


“வீட்லயா? ஏய்.. எப்ப வந்த நீ?”


“நான் எப்பவோ வந்துட்டேன். பேசலாம்னு உங்களுக்கு கால் பண்ணிட்டேதான் இருக்கேன்”


“அப்போ… வொர்க்?”


“இன்னிக்கு நான் வேலைக்கு போகவே இல்ல”


“அப்பறம்.. ?”


“கொஞ்சம் ஷாப்பிங்லாம் பண்ண வேண்டியிருந்தது. மார்னிங்கே போயிட்டு மத்தியானம் வீட்டுக்கு வந்துட்டேன்”


“சொல்லவே இல்ல”


“ஏன் சொல்லணும்?”


“சரிதான்.. சரி.. சாப்பிட்டியா?”


”ம்ம்.. நீங்க ”


“வந்து சாப்பிட்டுதான் படுத்தேன்”


“பீரு குடிச்சிட்டு தூங்கிட்டிங்க?”


“கோபமா?”


“ம்ம்”


“ஏய்.. ஸாரிமா”


“நானும் தூங்க போறேன்”


“இப்பயா?”


“ம்ம்.. ஆமா”


“என்னை தூக்கத்துலருந்து எழுப்பி விட்டுட்டா?”


“ஹா.. ஹா.. எனக்கு தலை வலிக்கற மாதிரி இருக்கு”


“ஏன்?”


“அலைச்சல்.. ”


”டயர்டா இருக்கா?”


“ம்ம்.. ம்ம்”


“சரி.. இப்ப நீ என்ன பண்ற?”


“ம்ம்.. பேசிட்டிருக்கேன். போன்ல?”


“கடிக்காத.. படுத்துட்டியா?”


“ம்ம்.. ஏன்?”


“உங்கம்மா இருக்காங்களா?”


“இல்ல. நான் மட்டும்தான்”


“அம்மா எங்க போனாங்க?”


“அப்பாவும் அம்மாவும் முக்கியமானவங்களுக்கு பத்திரிக்கை வெக்க போயிருக்காங்க”


“அப்போ நீ யாரு கூட ஷாப்பிங் போன?”


“என் வுட்பியோட..” என்று சிரித்தாள்.


”வாட்?”


“என் கழுத்துல தாலி கட்டி என்னை பொண்டாட்டி ஆக்கிக்கப் போறவரோட போனேன்”


“அவ்ளோ தூரம் வந்துருச்சா?”


“ம்ம்.. ம்ம்.. ஏன் பொறாமையா இருக்கா?”


“பொறாமையா..? வேகுது. இன்னும் நாலு பீரு எறக்கினாலும் கூலாகாது”


“கொன்றுவேன். இனி பீரு குடிச்சா”


“பாவி.. ஒண்ணா போயி என்ன பண்ணீங்க?”


“ச்சீ.. தப்பா பேசாதிங்க.. ஒண்ணுமே பண்ணல. கொஞ்சம் ட்ரஸஸ், இன்னர்ஸ், செப்பல்ஸ், பேன்சி ஐட்டம்ஸ்னு எடுத்துட்டு ஹோட்டல்ல போய் சாப்பிட்டு என்னை வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாரு”


“ஏய்.. கிருத்து..”


“சொல்லுங்க? ”


“எனக்கு… உன்னை பாக்கணும் போலருக்குப்பா?”


“எதுக்குபா?”


“ச்சும்மாப்பா.. வாயேன் ப்ளீஸ்”


”இப்பயா.. ??”


“எஸ்..”


“எனக்கு ஒரு மாதிரி இருக்கு”


“ஏன்ப்பா?”


“எப்படி வரது?”


“ஏன்.. நீ இதுக்கு முன்ன என் வீட்டுக்கு வராதவளா என்ன?”


”அப்ப வேற..”


”இப்ப.. ?”


“இப்ப.. !!”


“சொல்லு.. ??”


“இப்ப…”


”மை ஸ்வீட் ஹார்ட்”


“ம்ம்..”


“வாயேன் ஸ்வீட்டி.. ப்ளீஸ் ”


“ஈவினிங் வரேனே?”


“நோ.. எனக்கு இப்பவே உன்னை பாக்கணும்”


“பாக்க மட்டும்தான்”


“சரி..”


“என்னை தொட்டெல்லாம் பேசக் கூடாது”


“கிஸ் தரேன்ன?”


“அது பீரு குடிக்காம இருந்தா”


“ஏய்.. நான் லைட்டாதான்ப்பா குடிச்சேன்”


“குடிச்சீங்கதான? ஸோ.. நோ கிஸ். சும்மா பேச வரேன். அவ்வளவுதான்”


“சரி..”


“ஓகே.. வரேன். கதவை ஓபன் பண்ணி வெய்ங்க..”


“தேங்க் யூ”


எழுந்து பாத்ரூம் போய் வாய் கொப்பளித்து முகம் கழுவி வந்து கதவைத் திறந்து வைத்தான். 


டிவியைப் போட்டு விட்டு தலைவாரி சோபாவில் உட்கார்ந்தான்.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!