திங்கள், 6 நவம்பர், 2023

நீலவானப் பறவை -6

 தனது அறையில் விஜய் படுக்கையில் படுத்திருந்தான். இதுபோல அவன் வாழ்க்கையில் இதுவரை எதுவுமே நடந்ததில்லை. 


அறிமுகமே இல்லாத, இரண்டு பேரின் இந்த திடீர் கவனிப்பு, அவனுக்கு மிகுந்த நெகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.


அனாதையான, அடிபட்டுக் கிடந்த தன்னை அழைத்து வந்து, வீட்டிலேயே தங்க இடமும் கொடுத்த அவர்களின் அன்பும் கவனிப்பும் அவனுக்கு கண்களில் ஈரம் படரச் செய்தது. 


உயிருள்ளவரை இந்தக் குடும்பத்துக்கு நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டான்.


நெஞ்சம் நிறைந்த நன்றியில் மூழ்கிய அவன், போர்வையில் தன்னை மூடிப் படுத்துக் கொண்டான்.


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. அதனால் ஒரு சோம்பலான காலையாக அது விடிந்தது. பரபரப்பாக எழுந்து காலை வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை.


ஆனந்தி கண்விழித்தபோது உடம்பில் உடை இல்லாமலிருப்பதை உணர்ந்து வழக்கம்போல இன்றும் லேசாக வெட்கப் பட்டாள். 


அவள் கணவன் வருண் அவளின் மார்பகங்களுக்குள் முகம் புதைத்து அவள் இடுப்பில் காலைப் போட்டபடி தூங்கிக் கொண்டிருந்தான். 


இரவில் மோகமும், வேகமும் இருவரிடமும் சற்று அதிகமாக இருந்தது. அதனால் இருவரும் இரவில் சரியாக தூங்கவில்லை. 


தூக்கம் வரும் முன் அவளுக்கு இடுப்பிலும் முதுகிலும் வலி கண்டது நினைவில் வந்தது.


இரவு ஏன் அப்படி ஒரு வேகமும் மோகமும் வந்தது என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அப்படி நடந்து கொண்டது இன்பமாகத்தான் இருந்தது.


தன்னைத் தழுவிக் கிடந்த கணவனை முத்தமிட்டுப் பிரித்து விலகி எழுந்தாள். கீழே வந்து சுருண்டு கிடந்த தன் நைட்டியை எடுத்து உதறி தலைவழியாக அணிந்தாள். 


பாத்ரூம் சென்று வந்து வருணையும் எழுப்பினாள். 


"வருண்.. வருண்.. எந்திரி"


புரண்டான், "எதுக்கு இப்ப..?" சலித்துக் கொண்டான்.


"மணி எட்டாச்சு.. எந்திரி"


"இன்னிக்கு என்ன நாள்?"


"என்ன நாள்?"


"சன்டே.."


"அதனால?"


"அதனால பத்து மணிவரைகூட தூங்கலாம்.." அவளை இழுத்து மேலே போட்டுக் கொண்டான்.


அவனைக் கட்டிக்கொண்டு சொன்னாள்.

"சன்டேனா பசிக்காதா?"


"ம்ம்ம்.."


"சமைக்கணும்ல?"


"விடு.. ஹோட்டல்ல ஏதாவது வாங்கிக்கலாம்"


"எனக்கொண்ணும் இல்லபா"


"அப்ப பேசாம படு" என்று அவளை இறுக்கிக் கொண்டான். 


அவளும் அவனுடன் இணைந்து கொண்டாள். ஆனால் தூக்கம் இல்லை.. !!


அந்த சிறிய வீட்டில் இருந்த அந்த மூன்று பேரும் அன்று தாமதமாகவே எழுந்தனர்.


ஹோட்டலில் வாங்கி வந்த காலை உணவுக்கு பின் வருணும் விஜய்யும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தனர். ஆனந்தி சமையலறையில் இருந்தாள்.


"விஜய், இப்படி சோம்பேறித்தனமா  ஞாயித்துக் கிழமை காலைல ரிலாக்ஸா உக்காந்து டிவி பார்க்கறது நல்லாத்தான் இருக்கு. என் பாக்கியம் என் மனைவி ஆனந்தி என்னை ஒரு வேலையும் செய்ய விடமாட்டா" என்று வருண் சொல்லி முடிப்பதற்குள், ஆனந்தி அவனிடம் வந்து ஒரு பையை நீட்டினாள்.


"கறிக் கடைக்குப் போய் ஒரு கிலோ சிக்கன், அரை கிலோ மட்டன் வாங்கிட்டு வாங்க’’ என்று உத்தரவிட்டாள்.


சொன்னபின் அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் சமையலறைக்குச் சென்று விட்டாள். 


"ஹே.. டார்லிங்." என்று திணறி வருண் ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.


 சமையலறையில் இருந்து "எலும்பில்லாத துண்டுகளா பாத்து வாங்கிட்டு வாங்க" எனக் குரல் மட்டும் வந்தது. 


"சே.." என்று சலித்துக் கொண்டான். "ம்ம்.. சரி வா விஜய் நாம போலாம், நீயும் இதெல்லாம் கத்துக்கோ.. எதிர் காலத்துல பயனுள்ளதா இருக்கும்" என்று சிரித்தபடி விஜய்யுடன் வெளியே நடக்க ஆரம்பித்தான்.


ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடை மிகவும் கூட்டமாக இருந்தது. 


வருண் அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலரை ஸ்டாலில் சந்தித்துப் பேசிவிட்டு வீட்டிற்கு சென்றான்.


அவனுடன் இருக்கும் புதிய பையனைப் பற்றி அவர்கள் கேட்டனர்.


“அவன் என் உறவினன்.. தம்பி, தூரத்து உறவினர்” என்று வருண் எல்லோரிடமும் பொய் சொன்னான்.


அன்று ஆனந்தி மிக நன்றாக சமைத்திருந்தாள்.


 வழக்கம் போல் உணவு சுவையாகவும் வாயில் நீர் ஊற வைப்பதாகவும் இருந்தது. மதிய உணவுக்கு மட்டன் கிரேவியுடன் பிரியாணியும் செய்தாள்.


உணவு மேஜையில், பிரியாணியை தட்டில் வைத்து வருணுக்கும் விஜய்க்கும் பரிமாறினாள் ஆனந்தி.


சாப்பிடும்போது ​​விஜய் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்றான், ஆனால் அதில் தோல்வியடைந்தான். அவன் கண்களில் கண்ணீர். ஒரு துளி அவன் கன்னத்தில் வழிந்தது.


"என் வாழ் நாள்ல இப்படி யாரும் என்கிட்ட அன்பும் கருணையும் காட்டினதில்ல, ஒருமுறை கூட எனக்கு இப்படி சாப்பாடு பரிமாறினதில்ல" என்று நடுங்கும் குரலில் சொன்னான் விஜய்.


வருண் அவன் முதுகில் மெதுவாக தட்டினான்.

"இதை உன் வீடுனே நினைச்சுக்கோ"


  மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். 


மாலையில் அவர்கள் ஷாப்பிங்கிற்காக வெளியே சென்றனர். விஜய்க்கு உடுத்த மாற்று உடைகள் இல்லாததால் சிலவற்றை வாங்கினார்கள்.


முதலில் அவன் நிறைய மறுத்தான். ஆனால் ஆனந்தியும் வருணும் வற்புறுத்திய பிறகு சம்மதித்தான். 


அவனது பழைய போனை, அவனை தாக்கியவர்கள் அடித்து நொறுக்கி விட்டதால் அவனுக்கு இப்போது புதிய செல்போனையும் வாங்கி கொடுத்தனர்.


இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினர். 


 அந்த மாலைப் பொழுது விஜய்யைப் பொறுத்தவரை அவன் வாழ்வில் மறக்க முடியாத ஒரு புதிய அனுபவம்..!


மறுநாள்,


 திங்கட்கிழமை காலை, வருண் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது அவன் மொபைல் அழைத்தது.  


ஆனந்தி வந்து போனை எடுத்துப் பேசிவிட்டு அவனிடம் கொடுத்தாள். 

"போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து கூப்பிடுறாங்க வருண்"


வருண் வாங்கிப் பேசினான். விஜய் அடிபட்டபோது ஆஸ்பத்ரியில் வந்து அவனது காயங்களை குறிப்பெடுத்துக் கொண்ட காண்ஸ்டபில் பேசினார். 

"வருண். அந்த பையன் விஜயை தாக்கினவங்க ரெண்டு பேரை பிடிச்சிருக்கோம். நீங்க விஜையை கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு வரணும்"


"வர்றேன் சார்" எனச் சொல்லிவிட்டு தன் அலுவலக எச் ஆருக்கு போன் செய்தான் வருண்.


வார முதல் நாள் என்பதால் அவர் அவனைத் திட்டினார். அதன்பின் பர்மிசன் வாங்கிக் கொண்டு விஜையை அழைத்து விபரம் சொன்னான்.


வருணும் விஜயும் அப்பகுதி காவல் நிலையம் சென்றனர்.


ஸ்டேஷன், குற்றவாளிகள், பொதுமக்கள், போலீசார் என நிரம்பி வழிந்தது. அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தனர்.


அவர்கள் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும், தன் நண்பர்கள் இருவரும் ஒரு மூலையில் சட்டையின்றி மண்டியிட்டுக் கொண்டிருப்பதை விஜய் கவனித்தான்.


கான்ஸ்டபிள் அவர்களை சப்- இன்ஸ்பெக்டரிடம் அழைத்துச் சென்று  அறிமுகப்படுத்தினார். 


சப் - இன்ஸ்பெக்டர் விரைப்பாக இருந்தார். அவர் முகம் ஏனோ கடுகடுவென இருந்தது. 


"உக்காருங்க " அவர்களை உட்காரச் சொன்னார் எஸ்.ஐ.


அவர் விஜையை மேலும் கீழும் பார்த்தார், அவனது காயங்களையும் கவனமாகக் குறிப்பிட்டார். சில சம்பிரதாயமான கேள்விகளுக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை விஜயிடம் சம்பவம் பற்றி விசாரித்தார்.


வருணின் விவரங்களையும், அவன் எப்படி இந்த வழக்கில் சிக்கினான் என்பதையும் கேட்டறிந்தார்.


பிறகு சொல்ல ஆரம்பித்தார்.


“லுக் மிஸ்டர் வருண், அவங்க நாலஞ்சு ப்ரெண்ட்ஸ்ல இப்ப ரெண்டு பேரை மட்டும் பிடிக்க முடிஞ்சுது. மத்தவங்க எஸ்கேப்பாகிட்டாங்க. விஜயோட தொழில் போட்டினால பொறாமை பட்றுக்காங்க அதுதான் காரணம். அதைத் தவிர பெரிய உள் நோக்கம் எதுவும் இல்லை. அவன்கிட்டருந்து அவங்க எடுத்த பணத்தை எல்லாம்  செலவு பண்ணிட்டாங்க. அவங்கள்ளாம் டீன் ஏஜ் பையன்கள்ங்றதால அவங்க வயச நினைச்சு எப் ஐ ஆர் போடல. ஆனாலும் கடுமையா எச்சரிக்கை பண்ணி அவங்கள ரிலீஸ் பண்ணலாம்னு நெனைக்கறேன். இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?"


"........" யோசித்தனர்.


"இவங்களை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போய் கேஸ் நடத்தினா நீங்கதான் ஒவ்வொரு தடவையும் மெனக்கெட வேண்டி வரும்.  இந்தச் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு உங்களுக்கு நேரமில்லேனு நினைக்கிறேன். நீங்க பிஸியா இருக்கீங்க, அதைச் சமாளிக்க உங்களுக்கு நேரமிருக்குமா." அவர் கரடுமுரடான தொனியில் கேட்டார். 


அருணும் விஜய்யும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


விஜய் தலையசைக்க அருண்,

 “உங்க ஆலோசனைக்கு நாங்க சம்மதிக்கிறோம்" என்றான்.


"சரி, பிரச்சனை தீர்ந்துருச்சு. இதை எங்ககிட்ட விட்றுங்க. இனி நாங்க பாத்துக்கறோம். ஒரு கையெழுத்து போட்டுட்டு நீங்க போகலாம்" என்றார் எஸ் ஐ.


இருவரும் நன்றி கூறி கையெழுத்துப் போட்டு விட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர்.


வீட்டிற்கு வரும் வழியில், இன்ஸ்பெக்டரிடம் தனக்கு கிடைத்த மரியாதை வருணால் தான் என்பதை விஜய் உணர்ந்தான், 


“என்னால உங்களுக்கு பிரச்சனை வந்துருச்சு” என்றான் விஜய் கவலையான தொனியில்.


"ஏய், பரவாயில்ல" என்று வருண் சிரித்தபடி சொன்னான். "கவலைப்படாதே."


"நான் வெளிய போய் எனக்கு ஒரு வேலை கிடைச்சுதுனா உங்களை தொந்தரவு செய்யாம என் வாழ்க்கையை வாழ்ந்துருவேன்” என்றான் விஜய்.


வருண் அவனையும் அவனுடைய கைக் கட்டையும் பார்த்தான்.

"இப்ப உன் கூட யார் இருக்கா? எங்க போய் என்ன செய்வ? ரொம்ப யோசிக்காத. இதை கடந்துவரவரை அமைதியா இரு. அப்புறம் முடிவெடுக்கலாம்” வருண் விஷயத்தை முடித்துவிட்டு சாலையில் கவனம் செலுத்தினான்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

முடிந்தால் இக்கதையையும் உங்கள் பாணியில் எழுதவும் நிருதி.. உங்கள் தளத்தில் வேறொரு சாயலில் கதை படிக்க சற்று நெருடலாக உள்ளது.. - பார்த்தி

நிருதி.. !! சொன்னது…

அப்படி எழுதினா அடிப்படையே மாத்தணும் நண்பா.. பார்ப்போம்.. !!

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!