புதன், 1 நவம்பர், 2023

நீலவானப் பறவை -5

 வருண் தன் மனைவி ஆனந்தியை அழைத்து, டாக்டர் சொன்னதையெல்லாம் அவளிடம் சொன்னான்.


 ஆனந்தி மௌனத்தைக் கலைத்து அவனிடம் கேட்டாள்.


"வருண்.. இப்ப என்ன செய்ய போறதா ஐடியா?"


வருண் தலையை வருடினான். பதில் சொல்வதற்கு முன், அவளே அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

"டிஸ்சார்ஜ் ஆனப்பறம் எங்க போவான்?"


அவனும் ஆரம்பத்திலிருந்து அதையேதான் நினைத்துக் கொண்டிருந்தான்.


"அதான் எனக்கும் புரியல பேபி.. ஆனா அவனுக்கு போறதுக்கு வேற எடம் எங்கயும் இல்லேனு எனக்கு தோணுது" வருண் கவலை தோனியில் பேசினான். 

"நான் அவனை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு நெனச்சேன். ஆனா இது நல்ல யோசனையா.. இல்ல கெட்டதானு தெரியல "


மறுமுனையில் ஒரு நிமிட மௌனம். அதன்பின் ஆனந்தி ஒரு நம்பிக்கையுடன் பதிலளித்தாள்

 "சரி, இப்ப வேணா கூட்டிட்டு வா.. பாவம்.. சின்னப் பையன்தான்.. யாருமில்லாத அனாதை வேற.. அப்பறமா அவனை என்ன பண்றதுனு யோசிப்போம்" 


  ஆனந்தி அவர்கள் வீட்டின் ஸ்டோர் ரூமை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். 


ஒரு வருடம் முன்பு வரை அவளது அம்மா பயன்படுத்திய ஸ்டோர் ரூம் அது. ஆனால் அம்மாவின் மறைவுக்குப் பின்னர் துக்கம் காரணமாக அந்த அறையை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தாள். 


இப்போது அந்த அறையைப் பயன்படுத்துவதற்கான நேரம் என்று நினைத்தாள்.


சுத்தம் செய்து முடித்தபோது காலிங் பெல் அழைத்தது. அவள் சென்று கதவைத் திறந்தாள். 


வருண் முதலில் வந்தான். அந்தப் பையன் மிகவும் சோர்வுடன் அவனுக்குப் பின்னால் நுழைந்தான்.


"இவள் என் மனைவி ஆனந்தி" வருண் அவளை அந்தப் பையனிடம் அறிமுகப் படுத்தினான். 

"இவதான் நீ ஓரமா அடிபட்டுக் கிடந்ததைப் பாத்துட்டு காரை நிறுத்தச் சொன்னா.. அப்பறம்தான் உன்னை ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேத்தோம்"


அவள் சிரித்து தலையசைத்து வரவேற்றாள்.

"வணக்கம், உங்க பேர் என்ன?" ஆனந்தி மரியாதையாகக் கேட்டாள்.


"விஜய்"  சற்று வெட்கத்துடன் திணறல் குரலில் பதிலளித்தான் அவன்.


"நீங்க ரெண்டு பேரும் ப்ரெஷ் அப் பண்ணுங்க, அதுக்கு அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்" என்றாள்.


விஜய் வலது கையில் கட்டுடன் இருந்தான், அதனால் வருண் அவனை பாத்ரூம் அழைத்துச் சென்று அவனுக்கு உதவி செய்தான்.


தனது டி-ஷர்ட்டையும் பேண்ட்டையும் விஜயிடம் கொடுத்தான். 

"இப்போதைக்கு இதைப் போட்டுக்கோ"


ஒல்லியான உடம்பில் அவனது உடைகள் தளர்ந்திருந்தன.


விஜய் தயக்கத்துடன் காலை உணவை இடது கையில் கரண்டியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.


வருண் தன் தட்டில் இருந்த டிபனை முழுவதுமாக முடித்தான்.


"சாப்பிடறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா?" ஆனந்தி விஜயிடம் கேட்டாள்.


அவள் கேள்வியால் திகைப்படைந்தவன் போல, குழப்பமாக வருணை பார்த்தான்.


"டேஸ்ட்டா இல்லையா?" அவள் மீண்டும் கேட்டாள்.


வார்த்தைகளைத் தேடி விஜய் பதிலளித்தான். 

"இல்ல.. நல்லாருக்கு"


"என்ன வருண்? அப்படியா? நீங்க ஒன்னும் சொல்லலையே" என்று வருணிடம் கேட்டாள் ஆனந்தி.


"ஐயோ கண்ணே, நீ செய்றதை எல்லாம் சாப்பிடற அளவுக்கு எனக்கு பயிற்சி இருக்கு, ஆனா விஜய்க்கு அது இல்லையே.." எனறு வருண் கிண்டல் புன்னகையுடன் சொன்னான்.


செல்லமாகச் சிணுங்கி அவனை அடித்தாள் ஆனந்தி. 


 காலை உணவைச் சாப்பிட்ட பின், வருண், விஜயை அறைக்கு அழைத்துச் சென்றான்.


" இனிமே இதான் உன் ரூம்.. நல்லா ரெஸ்ட் எடு" என்று விஜய்யிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தான். 


"ஓகே பேபி.. நான் ஆபீஸ் கிளம்பறேன். பையனை நீ கவனிச்சிக்கோ.. ஒண்ணும் பிரச்சினை வராது. அப்படி ஏதாவதுனா எனக்கு ஒடனே கால் பண்ணு" எனத் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு அவளிடம் விடைபெற்று அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பினான்.



***


ஆனந்தி வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அந்த பையனைப் பற்றி நினைத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றாள். 


கதவைத் தட்டும் முன் ஒரு நிமிடம் காத்திருந்தவள், அவனைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று எண்ணி மனம் மாறினாள்.


 அமைதியாகத் திரும்பினாள்.


 மணி மூன்று ஆகிவிட்டது, மதிய உணவு நேரம் முடிந்தும் அந்த பையன் கதவைத் திறந்து வரவில்லை. 


இந்த முறை ஆனந்தி நேராகச் சென்று கதவைத் தட்டினாள். பதில் வராததால் மெதுவாக கதவைத் தள்ளித் திறந்தாள்.


பையன் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் முகம் சோகத்தின் சோர்வால் நிறைந்திருந்தது. தூக்கத்தில் கூட நெற்றியில் சுருக்கம்.


 இதைப் பார்த்த அவளின் மனதில் அவன் மீது ஒரு பரிவு உண்டானது.


அவன் அனுபவிக்கும் கஷ்டங்கள் அவனது வயதுக்கு அதிகமாக இருப்பதாக அவள் உணர்ந்தாள். ஆழ்ந்த மூச்சு விட்டாள்.


 பிறகு சோபாவின் அருகில் இருந்த சிறிய மேஜையில்  உணவுப் பாத்திரத்தை வைத்துவிட்டு அமைதியாக வெளியேறினாள்.


அன்று மாலை வருண் வீடு திரும்பினான். உள்ளே வந்ததும் ஆனந்தியை கட்டிக் கொண்டான். லிப்லாக் செய்து முத்தம் கொடுத்தான். 


விலகி, "நம்ம வி ஐ பி என்ன பண்றார்?" எனக் கேட்டான்.


"தெரியல. ஆள் வெளியவே வரல. கதவை. தட்டிட்டு நானே உள்ள பாய் பாத்தேன். சோபால படுத்து நல்லா தூங்கிட்டிருந்தான். டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு சத்தமில்லாம சாப்பிட வெச்சுட்டு வந்தேன்.  ஆனா மதிய லஞ்ச் சாப்பிடலேனு நெனைக்கறேன்."


"அப்படியா? பாக்கறேன்" என்றுவிட்டு நேராக ஸ்டோர் ரூமுக்கு சென்றான். 


வருணின் பிரவேசத்தை அறியாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். 


அவன் ஜன்னல் வழியாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தான், அவனுடைய வயதுடைய இளைஞர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


டீனேஜ் வயதைக் கடந்த ஒரு மனிதனாக, வருணால் அவனின் உணர்வுகளை உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. 


விஜயின் முகத்தில் விரக்தியைப் பார்த்ததும் அவன் உள்ளம் நெகிழ்ந்தது.


ஆனந்தியும் அவனுக்குப் பின்பாக உள்ளே வந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


"விஜய் இன்னிக்கு எப்படி இருந்துச்சு.? இப்ப எப்படி பீல் பண்ற?" வருண் மெதுவாகக் கேட்டான். 


எங்கோ யோசனையில் ஆழ்ந்திருந்த விஜய் இந்த திடீர் குரலில் திடுக்கிட்டான்.


“ம்ம்.. பரவாயில்லை” என்று அதே தாழ்ந்த குரலில் பதிலளித்தான்.


"வலி எப்படி இருக்குது?" வருண் மீண்டும் கேட்டான்.


"அதிகம் இல்லை" என்று பதிலளித்தான் விஜய்.


கிண்ணம் தொடப்படாமல் இருப்பதைக் கண்ட ஆனந்தி, அதற்குப் பதிலாக மாலை நேர சிற்றுண்டியைத் தட்டில் வைத்துவிட்டு, கணவனிடம் தலையசைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.


இரவு, 


"நாம அவனுக்கு ஏதாவது செய்யணும்," என்றபடி ஆனந்தி வந்து வருணின் அருகில், அவர்கள் படுக்கையறையில் அமர்ந்தாள்.


வருண் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு லேப்டாப்பை மூடினான். அருகில் நெருக்கமாக அமர்ந்திருந்த தன் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான். 


அவளை வாசம் பிடித்தபடி கேட்டான்.

"என்ன செய்றது?"


அவனது அணைப்புக்குள் அடங்கிய ஆனந்தி,

"அவன் பாக்க நல்ல பையனாகத்தான் தெரியறான். தப்பா எதுவும் தெரியல. நல்ல கேரக்டர்தான். அதிகம் பேசறதும் இல்ல"


 “ஒருவேளை இந்த வயசுல அவன் பட்ட கஷ்டங்களும் துரோகங்களும் அப்படி அவனை மாத்தி இருக்கலாம்” என்றான் வருண் சிந்தனை தொனியில்.


"அவன் நைட் டிபனும் நல்லா சாப்பிடல" கவலைப்பட்டாள்.


"அவன் சீக்கிரம் மாறுவான். அப்பறம் அவனுக்கு ஏதாவது உதவி செய்வோம்"


"ம்ம்.." மெல்ல படுக்கையில் சரிந்தாள். "கண்டிப்பா செய்யணும்.."


"உனக்கு எப்படி? அவன் ஒண்ணும் தொந்தரவு இல்லையே..?"


"சே.. ரொம்ப நல்ல பையன்.. அமைதியா இருக்கான்.. பொதுவாவே எனக்கு இப்படி அமைதியா இருக்கறவங்களை ரொம்ப பிடிக்கும். அது ஆணோ பெண்ணோ.. யாரா இருந்தாலும்.."


வருண் ஆர்வமாக தன் மனைவியைப் பார்த்தான். 

"நான் உன்னை நெனைச்சுதான் கவலைப் பட்டேன்.. நீயும் வீட்ல தனியா இருக்கியா.."


"சே.. அவன் அப்படிப்பட்ட பையனே இல்ல. அவன் என் முகத்தை கூட நிமிர்ந்து பாக்கறதில்ல.. அவ்வளவு கூச்சம்.."


"போகப் போக பழகிருவான்"


"என்ன இருந்தாலும்.. தனியா.. அனாதை ஆஸ்மரத்துல வளந்தவன் இல்ல..? பாவம்.. அவனுக்கு தாய் தந்தை பாசமோ சொந்த பந்த பாசமோ தெரியாதுல்ல.."


"ம்ம்.. வெளிச் சமூக மக்கள் எப்படி பழகுவாங்கனுகூட அவனுக்கு இன்னும் சரியா தெரியாமதான் இருக்கும். அவனுக்கு கற்பிக்கப் பட்டதெல்லாம் மத்தவங்ககிட்ட அன்பா இருக்கணும்.. கருணையா நடந்துக்கணும்.. இப்படித்தான் இருக்கணும்.." அவள் மீது சரிந்தபடி சொன்னான். 


"ஆமா.."  அவள் புன்னகை காட்டி, தன் நெஞ்சம் நிறைந்த காதல் கணவனை தன் மீது இழுத்துக் கொண்டாள். 


"ஸோ.. இப்போதைக்கு நாமதான் அவனுக்கு சொந்தம் பந்தம் எல்லாம்"

வருண் மெல்ல அவள் மீது படர்ந்து அவளை உதட்டில் முத்தமிட்டான். 

"அவனை நம்ம குடும்பத்துல ஒருத்தனா பாத்துக்க வேண்டியதுதான்"


அவளுக்கு அடுத்துப் பேச வேண்டியது தோன்றவில்லை. காரணம் அவன் கை அவளின் நைட்டியைத் தூக்கி உள்ளே புகுந்து அவளின் தொடையிணைவை நோக்கி வரத் தொடங்கி விட்டது. 


அவளும் அவனுக்கு இசைவாக தன்னைத் தயார் படுத்தினாள். 


மெல்ல மெல்ல தன் அழகிய இளம் மனைவியை ஆக்கிரமிக்கத் தொடங்கினான் அருண். 


அவர்களின் இரவுப் பயணம் இனிய முத்தங்களுடன் துவங்கியது.


அந்த முத்தம் மிக ஆழமாகவும், முழு அன்பின் வெளிப்பாடாகவும் இருந்தது. உண்மையான அன்பும் காதலும் எதையும் அள்ளி அள்ளிக் கொடுக்கும். 


 அவள் தன் காதல் கணவனுக்காக அனைத்தையும் அள்ளிக் கொடுக்க எப்போதும் தயாராகவே இருந்தாள். அதைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் அவனும் குறைவில்லாதவனாகவே இருந்தான்.. !!




2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இக்கதையின் எழுத்துநடை வழக்கமான உங்கள் எழுத்து நடையிலிருந்து சற்றே வேறுபடுவது போல எனக்குத் தோன்றுவது ஏன் நிருதி அவர்களே?? -- பார்த்தி

நிருதி.. !! சொன்னது…

ஆமாம் நண்பா. இது ஒரு மொழிமாற்று கதை. அதனால்தான்.

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!