நான் மெதுவாக எழுந்தேன். அந்த நேரத்திலும் ஒரு ஆர்வம் என் கண்களில் தொக்கி நின்றது.
“நான் தூங்கறேன். டென்ஷனாகாம நீயும் போய் தூங்கு” சட்டெனச் சொல்லிவிட்டு என் அறையை நோக்கிப் போனேன்.
சில நொடிகளில் கிரிஜாவின் குரல் கேட்டது.
"டேய்.."
"என்ன கிரி..?"
"நில்லு?"
நின்று அவளைப் பார்த்தேன்.
"என்ன?"
"என்கூட படுக்கறியா..?"
எனக்குள் குப்பென ஓர் அதிர்வு. அவளை திகைப்புடன் பார்த்தேன்.. !!
நான் மிரண்டு போனேன்.
‘என்கூட படுக்கறியாவா?’
‘எப்படி படுக்க? எந்த மாதிரி படுக்க? ஒண்ணாவா? பக்கத்துலயா? கீழயா மேலயா..?’
‘ச்ச.. ரொம்ப யோசிக்காதடா மடையா. மொத அவ என்ன சொல்றானு தெளிவா கேளு..’
"எ.. என்ன கிரி?" தடுமாற்றத்துடன் கேட்டேன்.
"என்கூட படுக்கறியா?" மீண்டும் அதே கேள்வி.
"உன் கூட படுக்கறதா.. ?"
"ம்ம்.. நீ என்கூட படுத்துக்கோ.. நாம ஒண்ணா படுத்துக்கலாம்.."
"ஒண்ணாவா..?" கேட்டுக்கொண்டே அருகில் சென்று அவளைப் பார்த்தேன்.
என்னை ஓர் ஆழப் பார்வை பார்த்தாள்.
"ம்ம்.. ரெண்டு பேரும் ஒண்ணா படுத்துக்கலாம்"
"ஒ.. ஒரே கட்டல்லயா..?
"ஆமா.. ஏன் என்கூட படுக்க மாட்டியா?"
அவள் எந்த அர்த்தத்தில் கேட்கிறாள் என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
"அ.. அப்படி இல்ல.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா.. ஒரே கட்டல்ல.." தடுமாறினேன்.
"ஏன்டா.. என்கூட படுக்க உனக்கும் புடிக்கலியா.?" என்று கேட்டாள்.
"சே.. என்ன கிரி.."
"உனக்கு கூடவாடா என்னைப் புடிக்கல..? நான் ஒரு பொண்ணா பொறந்ததே தப்புடா.. ச்ச.." சட்டெனப் பொங்கி, ஒரு பெருமூச்சு விட்டாள்.
எனக்கு பக்கென்று ஆனது.
"அய்யோ.. என்ன கிரி நீ..? உன்னை ரொம்ப புடிக்கும் எனக்கு.."
“சொல்லிக்க வாய்ல மட்டும்”
“இல்ல கிரி, நெசமாத்தான் புடிக்கும்”
"என்னை புடிக்கும்தான?"
"புடிக்கும் புடிக்கும்.."
"அப்ப.. வா..! என்கூட படுத்துக்க.. என்னால இந்த டார்ச்சரை தாங்க முடியல. தனியா படுத்தா.. தூங்காம யோசிச்சு யோசிச்சே எனக்கு பைத்தியம் புடிச்சிரும். பயங்கர மெண்ட்டல் டார்ச்சரா இருக்கு"
அவள் முகம் மீண்டும் சோகத்தை அப்பிக் கொண்டது.
இது நான் எதிர்பார்த்ததைப்போல உடல் சுகத்தின் தேடலுக்கான படுக்கை அல்ல.
அன்பான, நட்பான, ஆதரவான படுக்கை. அரவணைப்பு தேடும் படுக்கை.
தன் மன உளைச்சலைத் தாங்க முடியாமல் அருகில் ஆள் தேடும் படுக்கை.
அவள் சட்டென எழுந்து என் பக்கத்தில் வந்தாள். என் தோள் மீது கை வைத்துக் கேட்டாள்.
"நீ எனக்கு ஆதரவா இருப்பதான?"
"நான் உனக்கு ஆதரவாத்தான் இருக்கேன்"
"எப்பவும் நீ எனக்கு மட்டும்தான் ஆதரவா இருக்கணும்"
"எப்பவும் உனக்கே ஆதரவா இருப்பேன்.. போதுமா..?"
"நான் உன்னை நம்பறேன்" எனச் சொன்னவள் மெல்ல என்னை அணைத்தபடி கேட்டாள்.
"அப்ப நாம காலைல போயிரலாமா?"
"எங்க..?"
"ஊருக்குத்தான். இதுக்கு மேல நாம இங்க இருக்க வேண்டாம். ஊரு பக்கமே போயிரலாம்.. சரியா..?"
அவளைத் திகைப்பாகப் பார்த்தேன்.
“இதுக்கு மேல என்னால தாங்க முடியல. ஒண்ணு நான் கொலைகாரியா மாறணும் இல்லேன்னா இந்தாளை விட்டு போய்த் தொலையணும். இங்க இருந்தா பைத்தியம் புடிச்சு செத்துருவேன்”
"சரி.. நீ சொன்னா சரி.. போயிரலாம். நான் இங்க வந்ததே உன்னாலதான். நீ இல்லாத எடத்துல எனக்கு மட்டும் என்ன வேலை..? அந்தாளு என்னையும்தான போகச் சொன்னாரு..?"
"அப்படி ஊருக்கு போயிட்டா.. நீ என்கூட எப்பவும் ஆதரவா.. துணையா இருக்கணும்"
"இருக்கேன்.."
"அது போதும்.." குரல் பிசிறடிக்கச் சொல்லி, "இனி அந்தாளு சாவகாசமே வேண்டாம்"
"ஆனா ஊருக்கு போனதும் ஏன் வந்துட்டேனு காரணம் கேப்பாங்க.."
"சொல்லிரலாம். ஒண்ணு விடாம எல்லாம் சொல்லிரலாம். உனக்கும் எல்லாம் தெரியுமில்ல..? நீயும். சாட்சிதான?"
"சரி.."
சட்டென நெகிழ்ந்து போய் என்னைக் கட்டிக் கொண்டாள்.
அவளின் மெத்தென்ற அணைவு என் நெஞ்சில் கலந்து என்னை இன்ப வானில் மிதக்க வைத்தது.
கண்கள் நீர் கோர்க்க என் முகத்தைப் பார்த்தாள்.
"நான் தோத்துட்டேன் இல்ல..?"
"ச்ச.. அப்படி இல்ல கிரி.."
"ஆமாடா.. ஒரு பொண்ணா நான். தோத்துதான் போயிட்டேன். என்னால ஒரு கொழந்தைய பெத்துக் குடுக்க முடியலேனுதானே அந்தாளு வேற ஒருத்தியை செட் பண்ணிட்டான்.."
"...." நீர் நிறைந்த அவள் கண்களைப் பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. இதற்கு என்ன ஆறுதல் சொல்வது என்றுகூட எனக்குத் தெரியவில்லை.
"சரி.. அழாத கிரி.." என்று மட்டும்தான் சொல்ல முடிந்தது.
"முடியலைடா.." என்னைக் கட்டிக் கொண்டு மெல்ல விசும்பினாள் கிரிஜா.
என் கைகள் ஆதரவாக அவளைத் தடவிக் கொடுத்தன.. !!