வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

மாறுதல் சில நேரங்களில் -1

 


“ஹாய் தியாகு..” எனக் குரல் கேட்டு சட்டெனத் திரும்பிப் பார்த்தார் தியாகு.


புடவையிலிருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்து உடனே மலர்ந்தார். 

“ஹாய் மேகா.. வாட் எ சர்ப்ரைஸ்.. எப்படி இருக்க? பாத்து ரொம்ப நாள் ஆச்சு?”


“ஆமா. ஆபீஸ்லயும் வீட்லயும் கொஞ்சம் டைட் ஒர்க். உன்னை எப்போ.. நாலு வருசத்துக்கு முன்ன பாத்தது. எந்த மாற்றமும் இல்லை உன்கிட்ட. அப்படியேதான் இருக்க. வழுக்கை.. தொப்பை.. என்ன மேன்?”


அட்டகாசச் சிரிப்புடன் அருகில் வந்து செல்லமாக அவர் வயிற்றில் ஒரு குத்து விட்டாள்.


“ஹா.. ஆமா மேகா. ஆனா உன்கிட்ட நல்லா மாற்றம் தெரியுது. எளைச்சிருக்கே. சடனா அடையாளம் தெரியல. எப்படி பாடி இப்படி ஃபிட்டானே?”


“ஃபிட்டாகிட்டேனா?”


“அப்படித்தான் தெரியற? ஜிம் போனியா என்ன?”


“கலர்ஸ் போனேன். தர்ட்டி கே கேட்டான். குடுத்தேன். இப்ப பாரேன் எப்படி இருக்கேன்?”


“அமேஸிங். நம்ப முடியல. எத்தனை கிலோ குறைஞ்சிருக்கே”


“சொன்னா நம்ப மாட்டே. மொத ஹண்ட்ரட் ப்ளஸ் கேஜி இருந்தேன். இப்ப செவண்ட்டிகிட்ட  வந்துட்டேன். இன்னும் குறைக்கணும்”


“வாவ்.. கிட்டத்தட்ட தர்ட்டி கேஜி குறைச்சிருக்கியா? அமேஸிங். எப்படி சாத்தியமாச்சு இது?”


“எல்லாம் கலர்ஸோட மகிமை. பயங்கர டயட்.. பயற்சி.. விடா முயற்சி. காட் இட். நீ எங்க இந்தப் பக்கம்?”


“ஒரு வேலையா வந்தேன். நீ எங்க?”


“நானும்தான். என் வேலை முடிஞ்சுது. உன் வேலை?”


“முடிஞ்சுது. பையன் எப்படி இருக்கான்?”


“ஃபைன். அவன் ஸ்டேட்ஸ்ல இருக்கானு தெரியுமில்ல?”


“அடே.. தெரியாது. நைஸ்.. எப்ப போனான்?”


“அவன் போய் டூ இயர்ஸ் ஆச்சு. டெக்ஸாஸ்ல இருக்கான். போன ஜூலைல நாங்ககூட போய்ட்டு வந்தோம்.  என்ன ஊர்ங்கறே? சொர்க்கமா தெரிஞ்சுது.! மறுபடி போகணும். அங்க என் பையனுக்கு நல்ல சம்பளம். கம்பெனி கார் எல்லாம் உண்டு. உன் பொண்ணு என்ன பண்றா?”


“அண்ணா யுனிவர்சிட்டில பி யூ சி பண்ணிட்டிருக்கா”


“அலையன்ஸ் வருதா?”


“ஒத்திப் போட்றுக்கோம். இன்னும் ரெண்டு வருசம் படிக்கணும். அப்பறம் பாத்துக்கலாம்னுட்டு”


“அவ போட்டோ இருக்கா உன்கிட்ட?”


“இருக்கே ஏன்?”


“என் பையனுக்கு தேடிட்டிருக்கேன். நம்ம ஊர் பொண்ணுதான் வேணும்னு ஒத்தைக்கால்ல நிக்கறான். எனக்கு தெரிஞ்சவரை சரியா அமைய மாட்டேங்குது. முக்கியமா அவனுக்கு பிடிக்க மாட்டேங்குது. உன் பொண்ணு போட்டோவையும் குடேன். எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுர்றேன்”


“என்ன மேகா.. திடுதிப்னு இப்படி கேக்கற?” சற்றே வியந்து போய்க் கேட்டார்.


“கட்டாயமில்லை. ஏன் உன் பொண்ணுக்கு வேற ஐடியா ஏதாவது இருக்கா என்ன?”


“நத்திங். அதெல்லாம் இல்ல. அவ படிப்பை முடிச்சுட்டு அப்பறம்தான்”


“அது ஒரு பக்கம் நடக்கட்டுமே? சும்மா ஒரு பேச்சுதானே? என் பையன் ஸ்டேட்ஸ்ல இருக்கறது உங்க சைடுல ஏதும் பிரச்சினையா என்ன?”


“நத்திங். அதெல்லாம் இல்ல”


“உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா போட்டோவைக் குடு. நம்ம ரெண்டு  பேருக்கும் நம்ம பசங்களைப் பத்தி ரொம்ப நல்லாத் தெரியும். ஸோ.. அவங்களுக்குப் புடிச்சா ஓகே பண்ணிரலாமே”


“சரி. உன் வாட்ஸ் அப் நெம்பர் சொல்லு?”


சொன்னாள் மேகவாணி. உடனே தனது பெரிய மகளின் சில போட்டோக்களை அவளது நெம்பருக்கு அனுப்பினார் தியாகு.


போட்டோ பார்த்து வியந்தாள்.

“அட.. உன் பொண்ணா இது? இவ்ளோ அழகா இருக்கா. உன் மாதிரியே இல்லையே?”


“அவ அம்மா மாதிரி”


“அம்மா..? ம்கூம். அம்மா குண்டு ஒடம்பாச்சே.  இவ ஸ்லிம்மால்ல இருக்கா? மாடலிங் ஏதாவது பண்றாளா என்ன?”


“நத்திங். நாட் அட் ஆல்”


“அழகாருக்காளே. எனக்கு ஓகே.  இவளை மட்டும் என் பையனுக்கு புடிச்சிட்டா உன் பொண்ணுதான் என் வீட்டு மருமக” என்று சிரித்தாள்.


“உன் மகனுக்கு புடிக்கும்ங்கற?”


“நம்பிக்கை இருக்கு. பாப்போம். ஒடனே அனுப்பி கேட்டுர்றேன்”


டெக்ஸாஸில் இருக்கும் தன் மகனுக்கு உடனே அவரது மகளின் படங்களை அனுப்பினாள் மேகவாணி.


“பாத்துட்டு சொல்லிருவான். காபி சாப்பிடுவோமா?”


“வித் ப்ளஷர். நீ எதுல வந்த?”


“ஸ்கூட்டி. நீ?”


“பைக். கார் என்னாச்சு?”


“அவர் எடுத்துட்டு போய்ட்டார்”


“எப்படி இருக்கார் இப்போ?”


“அப்படியேதான்” முடியை ஒதுக்கிக் கொண்டு சிரித்தாள். 


இருவரும் அருகிலிருந்த காபி ஷாப் போய் உட்கார்ந்தனர். மதியம் கடந்த மாலை நேரம் என்பதால் நிறையப் பேர் காபி குடிக்க வந்திருந்தனர். 


ஒரு டேபிளில் எதிரெதிரே அமர்ந்து கொண்டனர். காபி ஆர்டர் செய்தனர்.


“என்னப்பா.. என்னைவே அப்படி பாக்கற?”


“மேகா.. யூ ஆர் ப்யூட்டிஃபுல்”


“ஈஸிட்” சிரித்தாள். 


“இப்போ நீ வெய்ட் லாஸ் பண்ணி ஸ்லிம்மா.. க்யூட்டா.. ஆகிட்டே. வியப்பா  இருக்கு. பாக்க முப்பது வயசு பொண்ணு மாதிரி இருக்க. எனக்கே பொறாமையா இருக்கு”


“என்ன பொறாமை?”


“யங்கா இருக்கியே? அதான் பொறாமை. என்னைவிட ஒரு ரெண்டு வயசு என்னமோதான் நீ சின்னவ. ஆனா இப்ப எவ்ளோ பெரிய டிஃப்ரன்ஸ் நமக்குள்ள?”


அவள் கர்வத்துடன் சிரித்துக் கொண்டாள்.

“உண்மைய சொன்னா.. நீ தலை வழுக்கை போட்டு.. தொப்பை போட்டு.. ரொம்ப ஏஜ் ஆகிட்டேனு நல்லாவே தெரியுது”


“உண்மைதான். பிஃப்டி போட்டாச்சே. இன்னும் என்ன சேட்டைனு வேண்டாமா?”


“இது சேட்டை இல்ல தியாகு. செல்ப் கான்பிடென்ஸ்.  எவ்ளோ ஆக்டிவா இருக்கேன் தெரியமா நான் இப்போ.? ஆனா என் ஹஸ்பெண்ட் உன்னை மாதிரிதான். சொங்கி ஆகிட்டார்” சட்டென கண்ணடித்தாள். 

“அந்த விசயத்துல கூட”


“யூ மீன் எக்ஸ்ல?”


“நம்ம வயசுக்கு எவ்வளவோ பாத்தாச்சு. இன்னும் என்ன எக்ஸ் ஒய்னுட்டு..? செக்ஸ்னு ஓபனாவே பேசலாம்”


காபி வந்தது. மேகவாணி எடுத்து லிப்ஸ்டிக் தீற்றிய உதடுகளுக்கு நடுவில் வைத்து காபியை உறிஞ்சினாள்.


“நீ இன்னும் ஆக்டிவா இருக்கியா மேகா??”


“ஆமா. இப்போதான் முன்னைவிட ஆக்டிவா இருக்கேன். ஹேப்பியா பீல் பண்றேன். காரணம் என்ன தெரியுமா? இந்த பாடி ஃபிட்னெஸ்தான்”


“வாவ்.. எவ்ளோ கேசுவலா பேசறே நீ..? கேக்கவே வியப்பா இருக்கு”


“மாறிட்டேன்ல?”


“நெறைய”


“இப்பதான் லைஃபை என்ஜாய் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. முடிஞ்சவரை அனுபவிக்கறேன். அந்த அழுகாச்சி வாழ்க்கையை விட்டாச்சு. அதால நோ யூஸ்”


“குட்”


“பட் அவராலதான் எனக்கு கம்பெனி குடுக்க முடியாம தெணறுவார். லைப்லயும் பெட்லயும்”


“ஏஜ் ஆகிருச்சுல்ல?”


“என்ன ஏஜ்? என்னை விட அஞ்சு வருசம்தான் பெரியவர். உடம்பை குறைக்கச் சொன்னா கண்டுக்காம பிஸினஸ் பிஸினஸ்னு பணத்து பின்னால ஒடறார். அவருக்கு பணம்தான் முக்கியம். பொண்டாட்டி இல்ல. ஆமா நீ எப்படி.. ஐ மீன் பெட்ல?”


ஒரு நொடி திகைத்து தடுமாறிச் சொன்னார். 


“ஷ்யூரா என்னைத் திட்டுவே மேகா நீ ”


“அடப்பாவி.. அப்போ நீ அவுட்டா?”


“அவுட்னு இல்ல.. பட்.. சுகர் வந்து..”


“சுகர்? ஓ காட்.. சுத்தமாவே முடியாதா?”


“முடியும் ஆனா… பவர் இல்லை”


“பவர் இல்லேன்னா?”


“ப்யூ மினிட்ஸ்..”


“ஏய்ய்.. நெஜமாவாடா சொல்ற?”


“ஆமா மேகா. உன்கிட்ட என்ன பொய் வேண்டிக் கிடக்கு”


“அப்போ உன் வொய்ப்?”


“கஷ்டம். சில சமயம் வேணும்னு கேப்பா. ஆனா.. நோ.. மோர்” உதட்டைப் பிதுக்கினார்.


“அப்போ.. உன் வொய்ப் ஒரு அஃபயர் வெச்சுக்கறது தப்பே இல்லை. உன்னையெல்லாம் டிவோர்ஸ் பண்ணிட்டாலும் தப்பில்லை”


“இதுக்கு மேலயா? கிண்டல் பண்ணாத மேகா ”


“கிண்டல் இல்லை.. ஏன் பொண்டாட்டி சரியா ஒத்துழைக்கிறதில்லேனு நீங்கள்ளாம் இன்னோரு பொண்ணை செட் பண்ணிக்கறதில்ல? டிவோர்ஸ்வரை கூட போறதில்லை?”


“ஒருவேளை நீ அப்படித்தானோ?”


“யா.. எனக்கு அஃபயர் உண்டு”


“அடிப் பாவி..”


“வாயை மூடு. கொன்றுவேன். நான் இப்படி வெய்ட் லாஸ் பண்ணி ஸ்லிம்மானதுக்கு காரணமே என்னோட பாய் பிரெண்டுதான்”


“என்ன ஏஜ் அவனுக்கு?”


“சொல்ல மாட்டேன். சொன்னா நீ பொறாமைல பொசுங்கிருவே”


“நீ ரொம்ப மாறிட்டே மேகா.. ரொம்ப மாறிட்ட”


“யா.. அதுலென்ன டவுட்.? உன் வீட்டுக்கு வரேன். உன் வொய்ப்பையும் மாத்தறேன்”


சிரித்தார். “அவ அப்படிப்பட்ட பொண்ணில்லை. அவள்ளாம் மாறமாட்டா”


“ஏன் மாறமாட்ட? சேலஞ்ச் பண்ணாத. நான்தான் உன் புருஷன் லவ் பண்ண பொண்ணு. என்னை ஹோட்டல்ல ரூம் போட்டு நல்லா என்ஜாய் பண்ணியிருக்கான்னு சொன்னா போதும். அவ நிச்சயமா மாறிருவா”


“அடிப்பாவி.. என் வீட்டுப் பக்கமெல்லாம் வந்துராதே நீ..”


“பாரு.. ஒரு நாள் இல்ல.. ஒரு நாள் வரேன். உன் குட்டை உடைச்சு.. ஆமா உன் வொய்ப் இப்பவும் குண்டுதானே?”


“மாறவே இல்லை. நைன்ட்டி கேஜிக்கு குறையாம இருக்கா”


“உனக்கு செக்ஸ் பீலிங் குறைஞ்சு போனதுக்கு அவ ஒடம்பும் ஒரு காரணம் இல்லையா?”


“உண்மைதான். தவிர கணவன் மனைவி உறவுல அவ்வளவு ஈர்ப்பு இல்லை. எல்லாம் செத்தே போகுது”


“எக்ஸாக்ட்லி. இந்த விசயத்துல என் கருத்தும் அதான்." என்றாள் மேகா.. !!


மாறுதல் சில நேரங்களில் -9

என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!