புதன், 24 ஏப்ரல், 2024

சாலையோரப் பூக்கள் -5

 லாவண்யாவும்.. நிம்மியும்.. அவர்கள் ஏரியாவில் பிரிந்தனர்.


''ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..'' என நந்தாவைப் பார்த்துச் சொன்னாள் நிம்மி.


''ஹேய்.. இதுக்கெல்லாம் எதுக்குப்பா தேங்க்ஸ் சொல்ற..?'' எனக் கேட்டாள் விழிமலர்.


''பாவம்க்கா அந்தண்ணா.. என்னால தனியா உக்காந்து சினிமா  பாத்தங்கள்ள..? அப்றம் டிபன் வாங்கிக் குடுத்தாங்க..? ஒரு தேங்க்ஸ் சொல்றதுல நான் என்ன கொறஞ்சா போயிருவேன்..?'' என்றாள் நிம்மி.


''ஆமா.. நந்து..! நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லிக்கறேன்..!'' என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் லாவண்யா.


அக்கா தங்கை இருவரும்  விடை பெற்றுப் போக... நந்தாவின் கை விரலைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் மலர்.


''உன்ன நெனச்சாதான்டா எனக்கு பாவமா இருக்கு..'' என்றாள்.


''எதுக்கு..?''


''அந்த காக்கா மூக்கிய.. உனக்கு வேற புடிக்காது..! ஆனா.. அவ என்னடான்னா.. உன்கிட்ட நெருங்கி நெருங்கிப் பேசறா..!'' எனச் சிரித்தாள்.


''அதுக்கு நிம்மியே பரவால்ல..'' என்றான் நந்தா.


''அவள நீ கரெக்ட் பண்ணிருக்கலாம்..''


''அவ என்னமோ.. மூச்சுக்கு முன்னூரு தடவ.. அண்ணா.. அண்ணாங்கறா..? அப்பறம் எங்க.. அவள போய் கரெக்ட் பண்றது..?''


''லாவண்யாளுக்கு மூக்கு ஒன்னு மட்டும் நல்லாருந்தா உனக்கு ஓகேவாடா..?'' எனக் கேட்டாள்.


''அப்படித்தான் நெனைக்கறேன்.! மத்தபடியெல்லாம்.. ஆளு இப்ப கொஞ்சம்.. நல்லாதான் இருக்கா..! அந்த மூக்கு ஒன்னுதான்.. கண்ண உறுத்தது..! ஆமா.. நீ ஏதாவது அவகிட்ட சொன்னியா..?''


''என்ன..?''


''நான் அவள காக்கா மூக்கினு.. சொல்றேனு..?''


''சே.. சே..! என்னடா நீ.. இதெல்லாம் போய் நான் அவகிட்ட சொல்வனா..? ஆனா அத இப்படி வேணா.. மாத்தி சொன்னேன்..!'' என்றாள்.


''எப்படி..?''


''என் தம்பிக்கு.. உன் மூக்கு ரொம்ம்ம்ம்ப புடிச்சிருக்குனு சொன்னான்டினு..'' எனச் சொல்லி விட்டு அவள் வாய் பொத்திச் சிரித்தாள்.


''அடிப்பாவி..!!'' என்றான் நந்தா, ''அதானா..?''


லாவண்யாவின் பார்வை.. பேச்சு.. நடவடிக்கைக்கு எல்லாம் இப்போது அர்த்தம் புரிந்தது..!


''என்ன அதானா..?''


''ஒன்னுல்ல.. விடு..!! ஆமா.. அதுக்கு என்ன வயசு..? உன்னோட வயசா..?''


''என்னைவிட.. மூனு மாசம் என்னவோ சின்னவடா..! ஏன்டா.. அவள கரெக்ட் பண்றியா..?''


''அட.. ச்சீ... அவளப் போயி.. அதுக்கு நிம்மிய கேட்டின்னாக்கூட ஒரு நியாயம் இருக்கு..! இவ உன் பிரெண்டு வேற.. என்னைவிட.. வயசுலயும் பெரியவ..!!''


''ஆனா.. அவளப் பாத்தா அப்படி தெரியாதுடா.. ஒடம்ப சிக்குனுதான வெச்சிருக்கா..?''


''அட... ச்சீ... அடங்கு..! வேற எவளாவத பத்தி பேசு..!!'' என்றான் நந்தா..!!


ஆனாலும்.. லாவண்யாவின் தொடை இடுக்கில்.. அவன் விரல் பட்டு அழுந்திய இடம் மெத்து மெத்து என்று இருந்ததை.. இப்போதும் உணர்ந்தான் நந்தா..!!


அவர்கள் வீடு போனபோது.. வீட்டில் யாரும் தூங்கியிருக்கவில்லை. 


டிவி முன்னால் உட்கார்ந்திருந்த அம்மா கேட்டாள்.

''எங்கடி போன..? அவனக் கூட்டிட்டு.. சினிமா போனியா..?''


''நான் ஒன்னும் அவன கூட்டிட்டு போகல.. அவன்தான் என்னைக் கூட்டிட்டு போனான்..'' என்றாள் விழிமலர்.


''திருந்தவே மாட்டேடி.. நீ மட்டும்..! தறுதலைகளா..! சரி.. சாப்பிட்டு.. சாப்பாடு மிச்சமான தண்ணி ஊத்தி வெச்சிரு..'' என்றாள் அம்மா.


''நாங்களாம் சாப்பிட்டாச்சு..! நீயே தண்ணி ஊத்தி வெச்சிரு.. போ..!!''


''எங்கடி சாப்பிட்டிங்க..?''


''கடைல.. நந்தா செலவு..''


நந்தாவைப் பார்த்தாள் அம்மா.

''ஏன்டா.. இப்படி கடைல திண்ணு அழிக்கற காச.. கொஞ்சம் வீட்டுக்கும் தரக்கூடாதா..?''


''நீயும் உன் புருஷனும் சம்பாரிக்கற காசுக்கெல்லாம் என்ன வேலைனு வேண்டாமா..? உன்கிட்டருந்து புடுங்கலேனு சந்தோசப்படு..'' என்று விட்டு அறைக்குள் போனான்.


விழிமலர் ''பேசாம போம்மா.. அவன் செலவு பண்றதே பெருசு.. நீ அதையும் இதையும் பேசி.. அதையும் கெடுத்து வெச்சிராத..'' என்று அம்மாவிடம் சொன்னாள்.


''ஆமாடி.. உங்களையெல்லாம் பெத்து வளத்துனேன் பாரு..! என்னை போடனும் மொத செருப்பால..!!''


''அப்படியா..? செருப்பு வேணுமா..? யாரு செருப்பு..? சின்னு.. அம்மா கேக்கற செருப்ப எடுத்துட்டு வா..! நம்மள பெத்ததுக்கு.. நாம அதுகூட செய்யலேன்னா.. நல்லாருக்காது..'' என்று அவள் தங்கையைப் பார்த்துச் சொன்னாள்.


தங்கை அசுவினி சிரித்தாள்.

''எந்த செருப்பு வேணும்மா..?''


''அப்பா செருப்புதான் கரெக்ட்..! அதுதான் ரொம்ப பிஞ்சு போன செருப்பு..!'' எடுத்துக் காட்டினான் சின்னத் தம்பி மதி.!


ஆக மொத்தம்.. உடன் பிறப்புகள் எல்லாம் சேர்ந்து.. அம்மாவை ஓட்ட... அவர்களைத் திட்டிக் கொண்டே அம்மா எழுந்து படுக்கையறைக்குள் போய்விட்டாள்..!!


''ஏன்டி.. யாரும் தூங்கலையா..?'' தங்கையைக் கேட்டுக் கொண்டே.. நந்தா சோபாவில் வந்து உட்கார.. அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள் அசுவினி.


''அக்காள மட்டும்தான் சினிமா கூட்டிட்டு போவியா..?''


''படிக்கற புள்ளைக.. ஓவரா சினிமா பாக்கக் கூடாது..'' என்றான்.


''இந்த கதையெல்லாம் சொல்லாத. நான் படிச்சிக்குவேன்.. என்னையும் சினிமா கூட்டிட்டு போ..'' என்று சிணுங்கினாள்.


விழிமலரைப் பார்த்தான் நந்தா.

''பாத்தியா.. இப்ப இவளும் கூட்டிட்டு போகச் சொல்றா..''


''அதெல்லாம் எனக்கு தெரியாது..! நீயாச்சு.. அவளாச்சு..'' என்றாள் விழிமலர், ''ஓகேடா.. நான் போய் படுக்கறேன்..!'' பக்கத்தில் இருந்த அறைக்குள் போய் விட்டாள்.


நந்தாவின் கையைப் பிடித்தாள் அசுவினி.

''நாளைக்கு போலாமா நந்துண்ணா..?''


''அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்..''


''அதெல்லாம் முடியாது.. நாளைக்கு கூட்டிட்டு போ..'' என்றாள்.


''மூடிட்டு போடி..! உன்ன சினிமாக்கே கூட்டிட்டு போக மாட்டேன்..!'' என்றான்.


மெதுவாக ''சரி.. பணம் குடு நானே போய்க்கறேன்..'' என்றாள்.


''பணமும் இல்ல..''


''ப்ளீஸ்ஸ்.. நந்துண்ணா...'' அவள் கெஞ்சினாள்.


''அம்பது போதுமா..?'' எனக் கேட்டான்.


''நூறு குடுண்ணா..'' என்றாள்.


நூறு ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தான் நந்தா......!!!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!