வியாழன், 22 ஆகஸ்ட், 2024

மாறுதல் சில நேரங்களில் -2

 காலிங் பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது லேசாக வியர்த்தது. உள்ளுக்குள் ஒருவித படபடப்பு. 


கர்ச்சீப்பை எடுத்து முகத்தை ஒருமுறை துடைத்துக் கொண்டான் நிருதி.


பெண் எப்படி இருப்பாள்? 


"பேரு ஸ்ரீகலா. வயசு இருபத்தியாறு. ஒரே பொண்ணுதான். படிச்சிருக்கு. சொத்து பத்துனு பெருசா இல்ல. ரெண்டு வீடு இருக்கு. ஒரு வீட்டை வாடைகைக்கு விட்றுக்காங்க. இன்னோரு வீட்ல அவங்களே குடியிருக்காங்க. அந்தம்மா படுத்த படுக்கையா இருந்து போன வருசம்தான் தவறிட்டாங்க. இப்ப அப்பாவும் மகளும் மட்டும்தான். அப்பா ரிடையராகி பென்ஷன் வாங்கிட்டிருக்காரு. பொண்ணு ஒரு நகைக் கடைக்கு சேல்ஸ் கேர்ளா போயிட்டிருக்கு. கல்யாணமாகி மூணு மாசத்துல புருஷன் சரியில்லேனு விட்டுட்டு வந்துருச்சு. பொண்ணு கொஞ்சம் கலரா இருக்கும். ஒடம்பு மட்டும் கொஞ்சம் ஒல்லியாதான் இருக்கும். போய் பாருங்க. பேசுங்க. அப்பறம் உங்க முடிவை சொல்லுங்க. நீங்க இந்த மாதிரி வரீங்கனு அவங்களுக்கு போன்ல சொல்லியிருக்கேன்"


புரோக்கர் சித்ரமுத்து சொன்ன தகவல்கள் எதுவும் அவனுக்கு மறக்கவில்லை.


வீதியில் பார்த்தான். ஞாயிறின் முற்பகல், காய் கறி மார்க்கெட் சமாச்சாரங்களுக்காக வண்டி வாகன அலைச்சல்களை அதிகப் படுத்தியிருந்ததைப் போலத் தெரிந்தது. இன்னும் சிலர் இன்றுதான் ஒய்வு நாள் என்று வீதிக்கு வந்து எதிர்ப்படுபவர்களுடன் வெட்டி அரட்டையில் இருப்பதாகத் தோன்றியது.


“க்ளக்” சத்தம் ஒலிக்க, கதவு திறந்தது. 


ஆர்வமாய் நேரானான்.


தலை நரைத்த பெரியவர் ஒருவர் கதவைத் திறந்தார். கண்ணாடி போட்டிருந்ததால் முகத்தை மேலே தூக்கிக்கொண்டு அவனைப் பார்த்தார். மூக்கு நீண்டிருந்தது.


"ஸ்ரீகலா வீடுதானுங்களே?"  


"தம்பி யாரு?" என்றார். 


காது மந்தமோ என்று தோன்றியது. 

"சித்ரமுத்து சொல்லியனுப்ச்சார். பாத்துட்டு போலாம்னு வந்தேன்" சிறிது குரலை உயர்த்திச் சொன்னான். 


"சித்ரமுத்து சொன்ன ஆளா? வாங்க.. உள்ள வாங்க.." அவருக்கு காது நன்றாகத்தான் கேட்கிறது. 


கதவை விரியத் திறந்து கரை படிந்த பற்களைக் காட்டி உள்ளே அழைத்தார். 


தயங்கிவிட்டு உள்ளே போய் ஓரமாக செருப்பைக் கழற்றி விட்டான்.


வீட்டுக்குள் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. 


பெண் பிள்ளை வேலைக்குப் போய்விட்டதோ என்று  நினைத்தான். அப்படிச் சொல்லவில்லையே இன்று லீவ் போட்டுக்கொண்டு வீட்டில்தானே இருக்கும் என்று சொன்னார் சித்ரமுத்து.


டிவி ஓடிக் கொண்டிருந்தது. கூடி கும்மாளமடிக்கும் டிவி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பேன் மிக  மெதுவாக சத்தியத்துக்குக் கட்டுப் பட்டதைப்போல ஓடிக் கொண்டிருந்ததது.


வீட்டுக்குள் அவ்வளவு செழிப்பு இல்லை. 


ஹாலில் போட்டிருந்த சேரைக் காட்டினார். 

"உக்காருங்க"


உட்கார்ந்ததும் மீண்டும் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.


அவரிடம் என்ன சொல்லிக் கேட்பது என்பது சரியாகப் பிடிபடாமல் அவர் முகத்தைப் பார்த்தான். 


அவர் பக்கத்தில் இருந்த ஒரு அறைக்குள் போனார். 

"வாம்மா.. வந்து பாரு வா"


அவர் முன்னே வர அவருக்குப் பின்னால் அந்தப் பெண் வந்தாள். சுடிதார் போட்டிருந்தாள். கையில் காபித் தட்டு வைத்திருந்தாள். அதில் பிஸ்கெட் இருந்தது.


அவனைப் பார்த்து ஒரு புன்னகை காட்டிவிட்டு காபித் தட்டத்தை நீட்டினாள்.


உண்மைதான், பெண் ஒல்லியாக இருந்தாள். கொஞ்சம் நிறமாக இருந்தாள். 


காபியை எடுத்துக் கொண்டான். அவள் தன் அப்பாவுக்கும் கொடுத்தாள். அவர் சற்றுத் தள்ளி உட்கார்ந்துகொண்டார். 


அந்தப் பெண்  ஸ்ரீகலா அப்பாவுக்குப் பக்கத்தில் ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.


காபியை உறிஞ்சியபோது அந்தப் பெண், "பிஸ்கெட் எடுத்துக்கோங்க" என்றாள்.


குரல் மெலியதாக இருந்தது. 


"பரவால்லைங்க" 


அந்தப் பெண்ணை நேராகப் பார்த்தான். அவள் கொஞ்சமே கொஞ்சம் வெட்கப் பட்டதைப் போலிருந்தது. 


அவன் கண்ணோடு கண் பார்த்து அவள் சிரித்தபோது அதில் சேல்ஸ் கேர்ளின் வசீகரம் தெரிந்தது.


சிறிய கண்கள், கூர்மையான மூக்கு, சிவந்த  மெல்லிய அதரங்கள். சதைப் பிடிப்பில்லாத கன்னங்கள். கழுத்து. மார்புகூட மிகச் சிரியவைதான். மெலிந்த இடுப்பு. அளவான உயரம். இறுக்கிப் பிடித்தால் உடைந்து போய்விடுவாள் போலிருந்தது.


அந்தப் பெண்ணைப் பிடித்தது. இவள் போதும் என்றிருந்தது. 


வயசு முதிர்ச்சி பெறாத சின்னப் பெண் போலிருக்கிறாள். இவளுக்கு முதல் திருமணம் நடந்து சில மாதங்கள் கணவோடு கூடி வாழ்ந்திருக்கிறாள் என்று சொனனால் நம்புவது கொஞ்சம் கஷ்டம்.


"அம்மாவும் வரதா சொன்னாங்க?" என்றார் பெரியவர்.


"வரதாத்தாங்க நேத்து சொன்னாங்க. இன்னிக்கு காலைல இருந்தே கொஞ்சம் ஒடம்பு முடியாம ஆகிருச்சு.  மாத்திரை போட்டுட்டு படுத்துட்டாங்க. அதனால சொன்ன காரியம் நிக்க வேண்டாம்னு நான் மட்டும் வந்தேன்.  நான் பாத்துட்டு போயி மத்ததெல்லாம் அம்மாவை விட்டு பேசிக்கலாம்னுட்டு.."


அவர் தலையை ஆட்டிக்கொண்டு அமைதியாக, அவன் காபியைக் குடித்தான். 


மூவர் மட்டுமே இருப்பதால் பேச்சை எடுத்துக் கொடுக்கக் கூட ஆள் இல்லை என்று தோன்றியது.


மவுனமாக காபியைக் குடித்துவிட்டு கப்பை கீழே வைத்தான்.


அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு பெரியவரைப் பார்த்தான்.


"என் பேரு நிருதி. முழு பேரு நிருதிலிங்கம். தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போயிட்டிருக்கேன்"


அப்பா வாயைத் திறக்கும் முன்,

"சொன்னாங்க" என்றாள் அந்தப் பெண்.


அவளைப் பார்த்தான். 

"இன்னிக்கு கடை லீவு வீட்ல இருப்பிங்கனு முத்து சொன்னார். நேத்தே போன் பண்ணி இன்னிக்கு வரோம்னு வேற சொல்லிட்டோம். அதான்.."


குறுக்கிட்டு, "ஒரு நிமிசம்" என்றாள். "நீங்க என்னை பொண்ணு பாக்க வந்ததுல ஒரு தப்பும் இல்லை. எனக்கு நீங்க வரப் போறீங்கன்ற விசயத்தையே இப்ப ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் அப்பா என்கிட்ட சொன்னார். இதெல்லாம் அப்பா செஞ்ச ஏற்பாடு. முன்னாடியே எனக்கு தெரிஞ்சுருந்தா உங்களை வர வேண்டாம்னு சொல்லியிருப்பேன். ஸாரி.. வந்தது வந்துட்டிங்க. அதனாலதான்.. தப்பா நெனைச்சுக்காதீங்க. எனக்கு.. இப்ப இந்த கல்யாணத்துல உடன்பாடு இல்ல. உங்களை புண்படுத்தியிருந்தா ஸாரி கேட்டுக்கறேன். எங்களை மன்னிச்சிருங்க"


அவன் முகம் சுருங்கிப் போனது.  சட்டென பெரியவரைப் பார்த்தான்.


"மன்னிச்சிருங்க தம்பி. தப்பு என்னோடதுதான். நேத்துவரை இவ என்கிட்ட எதுவும் சொல்லல. நானும் அதை நம்பி சித்ரமுத்துகிட்ட உங்களை வரச் சொல்லிட்டேன். நான் நேத்து ஒரு விசசேத்துக்குப் போனவன் அங்கயே தங்கிட்டு காலைலதான் வீட்டுக்கு வந்தேன். நீங்க இப்படி பாக்க வரப் போறீங்கன்றதை சொன்னதும்தான் என் தலைல குண்டைத் தூக்கிப் போட்டுட்டா" என்றார். 


"அப்பா" என்று அதட்டி விட்டு அவனைப் பார்த்தாள். "ஸாரிங்க. இதுல உங்க தப்பு எதுவும் இல்லை. நான்தான் தப்பு. உங்ககிட்ட உண்மையை சொல்லிர்றேன். இப்ப சில நாளா நான் கடைல கூட வேலை செய்ற ஒருத்தரை விரும்பறேன். அவரும்  என்னை கல்யாணம் பண்ணிக்கறதா வாக்கு குடுத்திருக்கார். இதெல்லாம் அப்பாக்கு தெரியாது. நேரம் கூடி வரப்ப சொல்லிக்கலாம்னு இருந்தேன். இவரு இப்படி ஒரு ஏற்பாடு செய்வாருனு தெரியல. அதனால இன்னிக்கே சொல்ல வேண்டியதாப் போச்சு"


நிருதி எழுந்து கொண்டான். புன்னகை காட்டி, "அப்ப நான் வரங்க. வாழ்த்துக்கள்ங்க" எனச் சொல்லிவிட்டு காலில் செருப்பை அணிந்துகொண்டு விறுவிறுவென வீட்டைவிட்டு வெளியேறி பைக்கை எடுத்தான்..  !!


மாறுதல் சில நேரங்களில் -9

என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!



சனி, 17 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம் பூ -5

 கிரிஜா தளர்வான நடையில் உள்ளே வந்தாள். 


அவள் முந்தானை இப்போது இன்னும் கீழே இறங்கி சரிந்த நிலைக்குப் போயிருந்தது. வலது மார்பு வடிவம் காட்டியது. தாலியும் கொடியும் பிணைந்த நிலையில் கழுத்தில் தொங்கி தனங்களுக்கு மேலாக ஊசலாடியது.


பேனைப் போட்டுவிட்டு கட்டிலை நெருங்கினாள். 


"நீ வரப்ப கடைலயா இருந்தான் அந்தாளு?"


"ஆமா.."


"சோறு திங்க வருவானா?"


"தெரியல.."


கட்டிலில் உட்கார்ந்து, தலையணைகளை அடுக்கி அதன் மேல் சாய்ந்தாள். கீழே தொங்கிய கால்களை எடுத்து கட்டிலில் நீட்டி வைத்தாள். 


"இப்படி பக்கத்துல உக்காந்து தேச்சு விட்டுட்டு போ.. நான் அப்படியே தூங்கிருவேன்"


"ரொம்ப வலிச்சுதுனா ஆஸ்பத்ரி போலாமில்ல?"


"அதெல்லாம் வேண்டாம். நீ தேயி"


மூடியைத் திறந்து ஐயோடெக்ஸை எடுத்தபடி அவளை நெருங்கி உட்கார்ந்தேன். 


அவள் என்னைப் பார்க்கவில்லை. கண்களை மூடிக்கொண்டாள். 


மூக்கில் மூக்குத்தி, காதில் கம்மல், கழுத்தில் தாலி, முந்தானைச் சரிவில் திமிறி எழுந்த அழகுகள், கொஞ்சம் தடித்து விரிந்த உதடுகள்.


உயரமாகத் தலையணை வைத்து கால்களை நீட்டி வைத்திருக்கும் அவளின் தோற்றத்தைப் பார்த்த என்னால் அவளை விகல்பமாகப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 


பட்டுப்போன்ற அவள் கன்னத்தைத் தொட்டு மிருதுவாக வருடினேன்.


அடிபட்ட அவளின் கன்னத்துக்கு ஐயோடெக்ஸ் தடவும் போது என்னையும் மீறிய ஒரு மெல்லிய கிளர்ச்சியுணர்வு எழத்தான் செய்தது.


 அவளின் அடிவாங்கிய ஆப்பிள் கன்னத்தை.. ஆசையோடும்.. மெலிதான மோகத்தோடும் தடவினேன்.


நான் தேய்த்ததில் அவளுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது போல் தோன்றியது.


என் கையைத் தடுத்துப் பிடித்து,

"போதும்டா.." என்றாள்.


"ஏன் கிரி..?" 


"என் கன்னம்.. என்னத்துக்குடா ஆகறது.. இத்தனை நேரம் தேச்சா..?" கிண்டலாக ஒரு புன்னகை சிந்தினாள்.


"ஐயோடெக்ஸ்தானே தேய்க்கறேன்?"


"போதும்.. ரொம்ப வேண்டாம்.."


"சரி.. நான் கிளம்பறேன்"


"போறியா?"


"ஏன் கிரி?"


"எனக்கு மனசே செரியில்லடா..  என்னடா வாழ்க்கை இதுனு இருக்கு. வாழவே புடிக்கல. செத்துட்டாத்தான் நிம்மதிபோல"


"யேய்.. பிரச்சினை இல்லாத குடும்பம் எங்க இருக்கு? மனச விடாத கிரி.."


"ப்ச்.. போடா.." சட்டென கண் கலங்கினாள்.


"சரி நீ தூங்கு.. நான் கடைக்கு போறேன்"


"எங்க தூங்கறது?" முந்தானையால் மூக்கைத் துடைத்து உறிஞ்சிக் கொண்டாள்.


"ஏன்?"


"கண்ணை மூடினா கண்டதெல்லாம்ததான் நாபகம் வருது"


நான் பரிதாபமாக அவளைப் பார்த்தேன்.

“கண்டதுன்னா..?”


பெருமூச்சு விட்டாள்.


"சரி. நீ கதவை சாத்திட்டு போயிரு.. நான் இப்படியே தூங்கறேன்"


"கதவை வந்து தாழ் போட்டுக்க"


"ஏன்டா..?"


"எதுக்கும் ஒரு சேப்டிதான்.."


"என்னை வந்து எவனாவது ரேப் பண்ணிருவான்னு நெனைக்கறியா?"


“சொல்ல முடியாதுல்ல? எதுவும் நடக்கலாம்”


“ஆமா.. அப்படியே என்னைப் பாத்து மயங்கிப் போயித்தான்.. போவான்ல போக்கத்தவன்..”


"உனக்கு என்ன குறை? பாக்க ஆளு நல்லா கும்தலக்கவாதான் இருக்க.."


"இருக்கேன் மயிரு மாதிரி.. அதையம் மீறி வந்து எவனாவது என்னை ரேப் பண்ணி.. அதனாலயாவது எனக்கு குழந்தை ஆச்சுனா அது எனக்கு சந்தோசம்தான்டா.." கரகர குரலில் சொன்னாள்.


"ஏய் லூசு.. என்ன பேசுற நீ..?"


"பின்ன என்ன? ஒரு கொழந்தை இல்லாம எவ்வளவு மானக்கேடா இருக்கு? இப்படி ஒரு வாழ்க்கை வாழவே புடிக்கலடா.. ஒரே வெறுப்பா இருக்கு"


"ஏய்.. என்ன கிரி இது.. மறுபடியும்.."


"சரி.. நீ போ. நான் கதவை சாத்திக்கறேன்" கண்களில் தேங்கிய மெல்லிய நீர்த் தேக்கத்துடன் கண்களை மூடிக் கொண்டாள் கிரிஜா. 


“கண்டதையும் நெனச்சு மனசை போட்டு குழப்பிக்காத” எனச் சொல்லிவிட்டு தளர்வான நடையில் வீட்டிலிருந்து கிளம்பினேன்.. !!


ஒரு பக்கம் ஆற்றாமை.. இன்னொரு பக்கம் இயலாமை என்கிற நிலையில் நான் இருப்பதாக எனக்குத் தோன்றியது.. !!


இதில் நான் யார் பக்கம் நிறபது? அல்லது எதற்காகப் பேசுவது? என்று ஒன்றும் புரியவில்லை.. !!


மதிய நேர வெயில் சுள்ளென்றிருந்தது. நடக்கும் போது மூச்சு வாங்கி லேசாக வியர்த்தது.


கீழே வரிசையாகக் கடைகள். டூ வீலர் ஒர்க்ஷாப், ஒரு ஸ்டேஷனரி மார்ட், ஒரு பேக்கரி, சீனுவின் எலக்ட்ரானிக்ஸ் என்று கீழே இருக்க, மேலே கம்ப்யூட்டர் சென்ட்டர், டெய்லர் கடை என்று இருந்தது.


கிரிஜாவின் கணவர் சீனு, கடையில் இருந்தார். போன் பேசிக் கொண்டிருந்தார்.


  என்னைப் பார்த்ததும் போனைக் கட் பண்ணிவிட்டுக் கேட்டார்.


"கிரி என்ன பண்றா?"


"படுத்துட்டிருக்கு"


"சாப்பிட செஞ்சாளா?"


"ம்ம்.. போய் சாப்பிட்டு வாங்க"


"இல்ல. வீட்டுக்கு போனா சண்டைதான் போடுவா. நிம்மதியா சாப்பிடக்கூட முடியாது." என்றவர் எழுந்து "ஹோட்டல்ல போய் சாப்பிட்டு வரேன். பாத்துக்க" என்றுவிட்டு கிளம்பிப் போனார். 


ஆயாசமாக இருந்தது. கணவன் மனைவி உறவு என்பது என்ன? அது ஏன் இப்படி இருக்கிறது? தாலி கட்டி ஒன்றாக வாழ்ந்தாலும் விட்டுக் கொடுத்தலோ புரிதலோ இல்லாமலே போய் விடுகிறதே. பிறகெதற்கு இந்த திருமண பந்தம்? அதற்கு என்னதான் அர்த்தம்.. ??



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!



விரும்பிப் படித்தவை.. !!