அவனது தவறு அப்போதுதான் அவனுக்கு புரிந்தது.
கமலியுடன் கொஞ்சம் அந்தரங்கமாகப் பேசியதில் மூடாகிப் போனவன், அவள் சொன்னதை மீறி தன் ஆசையைச் சொல்லி விட்டான். அது அவளைக் கோபப் படுத்தி விட்டது.
'ஓ ஷிட்'
உடனே கால் செய்தான். ரிங் போனது. ஆனால் அவள் எடுக்கவே இல்லை.
மீண்டும் மீண்டும் முயன்று பலனின்றி மனம் வருந்தினான்.
தன்மீதே அவனுக்கு சினமும் கவலையும் எழுந்தது.
அதன்பின் மாலைவரை நான்கைந்து முறைகளுக்கு மேல் கால் செய்து ஏமாந்தான்.
அவள் தவறாக நினைத்து அவன் தொடர்பை துண்டித்துக் கொள்ள முடிவு செய்து விட்டாளோ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டான்.. !!
அன்று இரவும் அவள் அவனுக்கு பதில் அனுப்பவில்லை.
ஏமாற்றத்திலும், முன்தின இரவில் அவளுடன் பேசியதை நினைத்ததிலும் அந்த நாளும் தூக்கத்தை இழந்தான்.. !!
திங்கள் கிழமை. மிகவும் சோர்வுடன் வேலை செய்தான். காலையில் வழக்கம் போல அவளுக்கு குட்மார்னிங் அனுப்பினான். ஆனால் பதில் இல்லை.
அன்று தன் மொபைல் அடித்த ஒவ்வொரு முறையும் அவளாக இருக்குமோ என்று ஆவலுடன் எடுத்துப் பார்த்து ஏமாந்தான்.
அன்று மாலை, வேலை முடிந்து வந்தபோது அவள் அலுவலக வளாகம் வெறிச்சோடிக் கிடந்தது.
அவள் வீட்டுக்கே போனால் என்ன என்று ஒரு வேகம்கூட வந்தது. ஆனால் அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும் என்பதால் சோகத்துடன் அடங்கிக் கிடந்தான்.. !!
மூன்று நாட்கள் கடந்தன.
கமலி தன்னுடன் பேசுவாள் என்றிருந்த அவனது நம்பிக்கை அவனை ஏமாற்றியதை உணர்ந்து மிகவும் வேதனைப் பட்டான்.
அவள் அவனை நேசிக்காவிட்டாலும் இந்த சில நாள் பழக்கத்தில் அவன் அவளை ஆழமாக நேசித்திருந்தேன்.
நேரில் ஒரு முறை மட்டுமே பார்த்து பழகியிருந்தாலும் அவளுடன் போனில் பேசிப் பழகிய பழக்கமே அவனை அவள் மீது ஆழமாய் ஆசை கொள்ள வைத்திருந்தது.
அந்த ஆசை அவனது எண்ணச் சிதறல்களின் ஒவ்வொரு துளியும் பரவியிருப்பதை உணர முடிந்தது.
அவன் எண்ணங்கள் கற்பனைகள் காட்சிகள் கனவுகள் அனைத்திலும் அவளேதான்.
இது காதலா, காமமா என்கிற போராட்டம் ஒரு பக்கம், அவள் மணமானவள் எனக்குரியவள் அல்ல என்கிற நியாய தர்மம் மறு பக்கம் என எந்த நிலையிலும் நிலைக்க முடியாமல் தடுமாறித் தவித்தான்.
பெண் பித்து என்பது எவ்வளவு பெரிய வலை என்று கலங்க வைத்தது..!!
அத்துடன் கடைசி நாள் இரவு அவளுடன் போனில் பேசியது, உச்சம் தொடடு அடங்கியது எல்லாம் அவன், அவளுடன் நேரடியாக உறவு கொண்டு அவளுடன் வாழ்ந்து விட்ட உணர்வையே அவனுக்குள் ஏற்படுத்தியிருந்தது.
அந்த உணர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அவன் மிகவும் நொருங்கிப் போனான் என்றே சொல்லலாம்.. !!
ஐந்தாவது நாள், வியாழக்கிழமை மாலை ஏழு மணிக்கு மொபைலில் பார்த்தபோது கமலி ஆன்லைனில் இருந்தாள்.
அவனுக்குள் குப்பென ஒரு பரவசம். அவள் பேசுவாளா மாட்டாளா என்கிற கேள்வியையும் தான்டி உடனே அவளுக்கு மெசேஜ் அனுப்பி விட்டான்.
'ஹாய் '
அவளிடமிருந்து பதில் இல்லை. ஆனால் படித்து விட்டாள்.
'ஹலோ மேடம். எப்படி இருக்கீங்க? '
அதற்கும் பதில் இல்லை.
'நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிருங்க ப்ளீஸ் '
அதைத் தொடர்ந்து அவன் அனுப்பிய மெசேஜ்களுக்கும் பதிலே இல்லை. ஆனால் ஒவ்வொன்றையும் படித்து விடுகிறாள் என்பது தெரிந்தது.
அவள் படிக்கவில்லை என்றால்கூட அவன் மெசேஜ் செய்வதை நிறுத்தி விடுவான். ஆனால் படிக்கிறாள் என்று தெரிந்த பின் அவனால் நிறுத்தவே முடியவில்லை.. !!
அரைமணி நேரம் கழித்து அவளிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது.
'நான் கோபமா இருக்கேன்'
'வெரி ஸாரி. பட் என்ன கோபம்?'
'ஏன் தெரியாதா?'
'ப்ளீஸ் சொல்லுங்க? '
'உனக்கே தெரியும்'
'என்னை மன்னிச்சிருங்க. ப்ளீஸ். கெஞ்சி கேட்டுக்கறேன். உங்க கோபம் எனக்கு புரியுது. நான் வேணும்னு எந்த தப்பும் பண்ணல. ஆனா.. அன்னிக்கு ஒரு ஆர்வக் கோளாறுல அப்படி நடந்து போச்சு. இந்த நாலஞ்சு நாளா நீங்க என்கூட பேசாம நான் நானாவே இல்ல. சரியா தூங்கல, சாப்பிடல, சரியா வேலை செய்ய முடியல, கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரன் மாதிரி ஆகிட்டேன்
'தப்பு'
'சரி.. தப்புத்தான். ஆனா என்னால உங்ககூட பேசாம இருக்க முடியல. வெரி வெரி ஸாரி'
'முடியணும். நான் இன்னொருத்தர் ஒய்ப்'
'அறிவுக்கு புரியுது. மனசுக்கு புரியல'
'அப்ப அனுபவிக்க வேண்டியதுதான்'
'நோ.. நோ.. என்னால தாங்க முடியாது. என்கிட்ட பேசாம இருக்காதீங்க'
'டேக் கேர் நிரு.. பை' ஆப்லைன் போய் விட்டாள்.
'அலோ.. ஸாரி. கமலி..' அவன் மெசேஜ்களை அதன்பின் அவள் பார்க்கக்கூட இல்லை.. !!
அன்றைய இரவும் அவனுக்கு பாழானது. தூக்கமே பிடிக்கவில்லை. கண்ணை மூடிப் படுத்தாலும் கமலியின் கிசுகிசுப்பான மெல்லிய குரல்தான் அவன் காதில் ஒலித்தது.
சிரிப்பு நிறைந்த குரல், காதல் வழியும் குரல், காமம் கசியும் குரல். அரை விழிப்பில் வரும் கனவில்கூட அவள் குரலே ஒலித்தது.
அதன் அவஸ்தைகள் தாளாது அவள் தன்னை இப்படி திடுதிப்பென கழற்றி விட்டு விட்டாளே என்று மனதுக்குள் நிறைய அழுதான்.. !!
அடுத்து வந்த ஒவ்வொரு நாளும் அதே நிலை. தொடர்ந்து ஒரு வாரம் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானான்.
உணவும், உறக்கமும் தொலைத்து, மனதை வருத்தி நோயுற்றவன் போலானான். பின்னர் அவனாகவே தன் மனதை மாற்ற முயற்சி செய்தான்.
ஆனாலும் அடிக்கடி அவள் நினைவில் அவனது மனது துவளத்தான் செய்தது.
பெரும்பாலும் அவள் அவனுடன் போனில் பேசிய வார்த்தைகள் அவன் காதுகளில் ரகசியமாக ஒலித்துக் கொண்டே இருந்தன.. !!.
அதன்பின் ஒரு நாள் எதேச்சையாக கமலியைப் பார்த்தான்.
வழக்கம் போல வேலை முடிந்து வந்த சமயம் அவளும், அவளது தோழியும் அப்போதுதான் அவர்களின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பஸ் ஸ்டாப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தனரர்.
பைக்கில் சென்ற அவன் அவர்களைக் கடக்கும் சமயம்தான் அது அவள்தான் என்பதையே கவனித்தான்.
படக்கென்றிருந்தது. ஆனாலும் உடனே பிரேக் போட்டு சிறிது முன்னால் போய் நின்றான்.
அவன் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் கமலி சட்டென அவனை அடையாளம் கண்டு பிடித்து விட்டாள்.
அவனைப் பார்த்தவள் திடுக்கிட்டு தட்டென ஒரு கணம் நின்று விட்டாள். பின் உடனே சுதாரித்துக் கொண்டு அவனைத் தெரியாதவள் போலவே ரோட்டுக்கு மறுபக்கம் சென்று அவன் பக்கம் கூடத் திரும்பாமல் அவனைக் கடந்து போய் விட்டாள்.
அவனை யார் என்று அவள் தோழிக்கு தெரியவில்லை. இவள் சொல்லியிருக்க மாட்டாள் என்று புரிந்தது.
அவளிடம் வலியப் போய் பேசலாம் என்று நினைத்தான். ஆனால் கூடவே அவள் தோழி இருப்பதால் மனசு விட்டுப் பேச முடியாது என்று புரிந்தது.
புறக்கணித்து விட்டுச் செல்பவளிடம் போய் பேசினாலும் மதிப்பிருக்கப் போவதில்லை.
அவனைப் பார்த்தும் பார்க்காததைப் போல போகிறாள் என்றால் அவள் அவன் நட்பை விரும்பவில்லை என்று அர்த்தமாகிறது
இருப்பினும் அவன் அவளுக்கு போன் செய்தான்.
ரிங்கான மொபைலை பேகில் இருந்து வெளியே எடுத்துப் பார்த்து விட்டு காலை கட் பண்ணி விட்டாள் கமலி.
மீண்டும் கால் செய்தான். அதையும் கட் பண்ணி விட்டாள். அவனுக்கு வெறுப்பாய் வந்தது.
'ச்ச.. போடி. நல்லாரு' என்று ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு அதே கோபத்துடன் வண்டியைக் கிளப்பி வேகமாகப் போய் விட்டான்.
மீண்டும் அவளைக் கடந்தபோது அவளைப் பார்க்கக் கூட இல்லை.. !!
அன்றிரவு அவனுக்கிருந்த வெறுப்பில் அவளைப் பற்றி நினைக்கவே விரும்பவில்லை. ஆனால் ஆச்சரியமாக அவன் கனவில் வந்து அவனது அரைகுறை தூக்கத்தையும் கெடுத்துத் தொலைத்தாள்.. !!
அதன்பின் அந்த வாரத்தில் இரண்டு முறை இடைவெளி விட்டு விட்டு அவளை அதேபோலப் பார்த்தான்.
அவன் ஆபீஸ் விட்டு வரும் சமயம் அவள் ரோட்டில் நடந்து கொண்டிருப்பாள், வழக்கம் போல அவள் தோழியும் கூடவே இருப்பாள்.
இவளை விட்டு இவள் தோழியை கரெக்ட் பண்ணி விடலாமா என்று கூட ஒரு கோபம் வந்தது அவனுக்கு. ஆனால் வெறுப்பின் உச்சத்தில் இருந்த அவன் அந்தளவுக்கெல்லாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.. !!