செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

மென் மோகம் -7

 நிருதி ஒரு 'ஹாய்' சொன்னான். 


அவள் உடனே பதில் அனுப்பவில்லை. சில நிமிடங்கள் கழித்து,

'ஹாய்' சொன்னாள். 


'ஹவ் ஆர் யூ?' 


'பைன் வாட் அபவுட் யூ?'


'குட்'


அப்படியே பேச்சு வளர்ந்தது. 


'பையனுக்கு இப்ப எப்படி இருக்கு?' என்று கேட்டான். 


'பரவால. நடக்கறான்' 


'ஸ்கூல் போறானா?'


'எஸ், போறான்'


'உங்க அத்தை வந்துட்டாங்களா?'


'இல்ல.. வரல'


'உங்க ஹஸ்பண்ட்?'


'அவர் வரதுக்கு டென் ஓ க்ளாக் ஆகும்'


'ஓஓ..'


'உங்க வொய்ப் என்ன பண்றாங்க?' என்ற அவள் கேள்வியில் திடுக்கிட்டவனாகச் சற்று தடுமாறினான். 


'என்னதூ.. என் வொய்ப்பா? அடிப்பாவி. நான் கல்யாணம்  ஆனவன் என்றா நினைத்தாய்? ஹூம்.. !!'


'அலோ.. என் வொய்ப்பா? அது யாருங்க?'


'என்ன இப்படி கேக்கறீங்க. உங்களுக்கு மேரேஜ் ஆய்ருச்சில்ல?'


"நல்லா கேட்டிங்க போங்க. ஐ ஆம் ஸ்டில் பேச்சிலர்ங்க..'


'மை காட்.. ஸாரி.. வெரி ஸாரி.  நான்  உங்களுக்கு  மேரேஜ் ஆகிருக்கும்னே நெனைச்சேன்'


'ஏன் அப்படி நெனைச்சிங்க?'


'தெரியலே. மனசுல அப்படித்தான் தோணுச்சு. அப்போ உங்களுக்கு  இன்னும் மேரேஜ் ஆகலையா?'


'ப்ராமிஸ்ங்க'


'பாத்துட்டிருக்காங்களா? இல்ல.. உங்க சைடுல லவ் கிவ் ஏதாவது...?'


'லவ்லாம் இல்லீங்க. பாத்துட்டிருக்காங்க'


'ஓகே ஸாரி'


'பரவால விடுங்க'


'இப்ப ப்ரீயா இருக்கீங்களா?'


'ப்ரீதான். ஏங்க?'


'மெசேஜ் டைப் பண்ண லேட்டாகுது. கால் பண்ணி பேசலாமா?'


'ஷ்யூர். நானே கால் பண்றேன்'


'ஓகே' என்றாள். 


அவன்  உடனே கால் செய்தான். இரண்டாவது ரிங்கிலேயே பிக்கப் செய்தாள். 


"ஹலோ" என்றான்.


"ஸாரிங்க" என்றாள் மிகவும் மெல்லிய குரலில்.


"பரவால்லீங்க"


"நெஜமா.. என் மனசுல உங்களுக்கு  கல்யாணம்  ஆகியிருக்கும்னுதான் தோணுச்சு"


"ஏங்க அப்படி தோணுச்சு? நான்  என்ன அவ்ளோ ஏஜ்டாவே இருக்கேன்?"


"ஹையோ அப்படி இல்லங்க. எனக்கு  ஏன் அப்படி தோணுச்சுனே தெரியல"


"உண்மைய சொல்லணும்னா எனக்கு  இப்ப இருபத்தியெட்டு வயசுதாங்க ஆகுது"


"ஓஓ" சிரித்தாள். "நம்பறேன்.. நம்பறேன்..! ஸாரி..! நீங்க கல்யாணம்  ஆனவர்னு நெனைச்சிட்டுதான் நான்  உங்களுக்கு போன் பண்ணக்கூட யோசிச்சிட்டிருந்தேன்"


"அதனால என்னங்க..."


"இல்ல.. சப்போஸ் நான் போன் பண்றப்ப உங்க மிஸஸ் இருந்து  அவங்க எடுத்து பேசினா என்னாகும்னுதான்.. ஸாரிங்க"


"நல்லா காமெடி பண்றீங்க.."


"ஸாரிங்க.."


"ம்ம்.. சரி விடுங்க"


"ஓகே.  சாப்பிட்டிங்களா?"


"இல்லீங்க இனிமேதான். நீங்க? "


"ம்ம். சாப்பிட்டாச்சு"


"குழந்தைங்க?"


"குழந்தைகளும் சாப்பிட்டு படுத்தாச்சு"


"குழந்தைங்க எப்பயும் இப்படி நேரத்துலயே தூங்கிடுவாங்களா?"


"அப்படியும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாதிரி"


"நீங்களும் அப்படித்தானா?"


"ம்ம்.."


"அப்பறம்.."


"சொல்லுங்க..?"


"உங்க பிரெண்டு நல்லாருக்காங்களா?"


"எந்த பிரெண்டு?"


"அன்னக்கி உங்க கூட இருந்தாங்களே? நாம மூணு பேரும் ஒண்ணா வந்தமே?"


''ஓஓ.. வானதியா?" சிரித்தாள்.


"வானதியா அவங்க பேரு?"


"ம்ம்.."


"ஆமா.. அவங்கள ஏன் கேட்டிங்க?"


''சும்மா.." என்றான்.


அரைமணி நேரம் பேசினர்.  மேலோட்டமாக அவனைப் பற்றி  அவளும், அவளைப் பற்றி அவனும் நிறைய விசாரித்துத் தெரிந்து கொண்டனர். !!


அது அவனுக்கு மனதில் ஒரு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் கொடுக்கவே செய்தது. 


அதன்பின் தினமும் போனில் பேசத் தொடங்கினர். 


இரவு எட்டு, எட்டரை முதல் ஒன்பது, ஒன்பதரைவரை சமயத்திற்குத் தகுந்தாற்போல பேசிக் கொள்வர்.


 அவள் பக்கம் நடந்ததை அவள்  அவனிடம் சொல்லுவாள். இவன் பக்கம் நடந்ததை இவன்  அவளிடம் சொல்லுவான். 


கிட்டத்தட்ட பத்து நாட்கள்  இதே நிலை நீடித்தது.  இதற்கிடையில் அவர்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை. 


அவன் மனதில் அவளைப் பார்க்க  ஆசை இருந்தது. அந்த ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது.. !!


ஆனால் அதற்கு முன் நட்பை பலப்படுத்திக் கொள்ளலாம் என்று தன்னைத் தானே அடக்கிக் கொண்டான்.. !!


என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!