திங்கள், 5 ஆகஸ்ட், 2024

எதிர் வீட்டு நிலவு -4

 ஐந்து நிமிடம் கழித்து சிலிண்டரை  ஆன் செய்து  அடுப்பை பற்ற வைத்து தோசைக் கல்லை எடுத்து  அடுப்பில் வைத்தேன். கல் சூடானது.


"ஹாய்" பின்னால் குரல் கேட்டது.


திரும்பிப் பார்த்தேன். 


பிரியா கையில்  ஒரு கிண்ணத்துடன் உள்ளே வந்தாள்.


"ஹாய்.. வா. என்னது?"


"சட்னி.. அம்மா குடுத்து விட்டாங்க"


“என்ன சட்னி?”


“தேங்கா சட்னி. ஈவினிங் செஞ்சதுதான். ப்ரிட்ஜ்ல வெச்சதில்ல”


"அம்மாவே குடுத்தாங்களா?”


"இல்ல.. நான் சொன்னேன்.  உங்களுக்கு குடுத்துரலாம்னு" அருகில் வந்து  என்னிடம் கொடுத்தபோது அவளது உடை இயல்பாக என்மேல் பட்டது.


வாங்கி வைத்தேன். 


"தேங்க் யூ.."


 அடுப்பைப் பார்த்தாள்.


"தோசை நல்லா சுடுவீங்ங்களா?"


"சுமாரா சுடுவேன்”


"நீங்க நல்லா சமைப்பிங்கனு அந்தக்கா சொல்லியிருக்காங்க"


"அப்படியா?"


"உங்க பாப்பாவுக்கு கூட நீங்க வெக்கற கொழம்பு ரொம்ப புடிக்குமாமே..? பாப்பா சொல்லியிருக்கா"


தோசைக் கல் சூடாகி  ஆவி வந்தது. நான் எண்ணையை எடுத்து கல்லில் லேசாகத் தேய்த்தேன்.


"மாவு ஊத்தறிங்களா?"


"ஆமா"


"வெய்ட்.. வெய்ட்.  நான்  ஊத்தறேன்"


“உனக்கு தோசை கூட சுடத் தெரியாதுனு உங்கம்மா சொன்னாங்க?”


“பின்ன? சுடத் தெரியும்னு காட்டிட்டா டெய்லி என்னை தோசை சுடச் சொல்லிட்டு சீரியலை பாத்துட்டு எதுல வம்பிழுக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. அதான் தோசை சுடத்  தெரியாத மாதிரியே காட்டிக்கறது. அதும்போக அம்மா சொன்னதும் பாதி உண்மைதான். அவங்களவுக்கு எனக்கு நல்லா சுட வராது. பிஞ்சிரும்”


“அது அனுபவத்துல வந்துரும்”


மாவை எடுத்து மீண்டும் கலக்கி தோசைக் கல்லில்  ஊற்றி வட்டமாக்கினாள் ப்ரியா. 


அவளுக்குப் பின்னால்  அவள் முதுகில் ஒட்டியபடி நெருக்கமாக  நின்று அவள் செய்வதைப் பார்த்தேன்.


"ஓகேவா?" வட்டமாக்கியபடி கேட்டாள். அவளே என்மீது லேசாக இடித்துக் கொண்டாள்.


"ம்ம்.. ஓகேதான்"


"இது பிரியா சுட்ட தோசை. ஸோ..  சூப்பரா இருக்கும்.."


"அப்படியா?"


"ஆமா.."


அவளின் இரு பக்கத் தோள்களிலும் என் கைகளை வைத்தேன். 


அவள் மெல்ல நகர்ந்து திரும்பினாள். மூச்சுக் காற்று சட்டெனத் தொட்டது.


"நான் போறேன்"


"தேங்க்ஸ்"


"சட்னி போதும்ல?"


"போதும்ப்பா.."


“என்ன?”


“என்ன?”


“என்னை கிஸ் பண்ணப் போறிங்களா?”


“இல்லையே..”


“அது. என்னை கிஸ்ஸெல்லாம் பண்ணக்கூடாது. எனக்கு கெட்ட கோபம் வந்துரும்”


“அழகாருக்கு”


“என்ன?”


“உன் மூக்கு”


“மூக்கா?”


“குட்டி மூக்கு. க்யூட்டா இருக்கு”


“என் லிப்ஸ்?”


“அது ஸ்வீட்டா இருக்கும்”


“தொலைச்சிருவேன்”


அவள் கன்னத்தைக் கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தமிட்டேன்.


"ஸ்வீட் கேர்ள்.."


"நல்லா சாப்பிடுங்க.." என் கைகளை விலக்கினாள்.


"பிரியா சுட்ட தோசை இல்லையா? ஸோ.."


"அதுக்காக பிரியாவை சாப்பிடறதா நெனைக்க கூடாது"


"அப்படியெல்லாம் நெனைக்க முடியுமா?"


"ஓகே பை.." விலகி, சட்டென என் கையில் தட்டிவிட்டு வெளியே ஓடினாள் பிரியா.. !!




ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

அதிர்ஷ்டமும் உழைப்பும்.. !!

 ஒருவனுக்கு நல்ல நேரம் கூடி வந்தால் குப்பையில் கிடப்பவனையும் கோபுரத்தில் ஏற்றி வைக்கும். 

அதே நேரம் அதிர்ஷ்டம் என்பது வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். உழைப்பு என்பது அதில் வெற்றியைத் தேடித் தரும்.

அதிர்ஷ்டமும் உழைப்பும் கைகூடினால் பேரையும் புகழையும் அள்ளிக் கொடுக்கும்.

அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி, சோம்பிக் கிடப்பவனுக்கு வெற்றி நீடிப்பதில்லை, என்பதற்கு உதாரணம் இந்தக் கதை. 

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு.. வீட்டில் ஏழ்மை.. தொடர்ந்து பல நாட்களாக பசி... வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு... ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன். 

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.

பையனிடம், ”டேய் இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

ஆஹா… இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். 

நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். 

சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான்.

மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா..? நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.

அறிவு தாகம் ஏற்படாமல் போயிருந்தால் அவர் உலகப் புகழ் பெற்றிருக்க முடியாது. குதிரை லாய முதலாளியாக மட்டுமே இருந்திருப்பார்... !!


விரும்பிப் படித்தவை.. !!