செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

தாராயோ தோழி -2

 தன் மனதைக் கவர்ந்து இதயத்தைக் கொள்ளை கொண்ட தமிழிச் செல்வியின் அழகை கண்களால் பருகினான் நிருதி.


 அவன் கண்களை உற்றுப் பார்த்த அவள்  உதடுகள்  ஏனோ மெல்ல நடுங்கித் துடித்தன.


மெலியச் சிவந்த அவள் உதடுகளின் அந்த நடுக்கம்கூட அழகுதான். 


"சூப்பரா இருக்க தமிழ்" அவள் கண்களைப் பார்த்தபடி அழுத்திச் சொன்னான்.


"ம்ம்.. தேங்க்ஸ்.." உதட்டோரம் சுழிந்து புன்னகை விரிந்தது. 


"நீ இப்ப ரொம்ப நல்லா வளந்துட்ட"


"நீங்களும் சூப்பரா இருக்கீங்க? " லேசான வெட்கத்துடன் சொன்னாள் .


"ஹா.. தேங்க்ஸ்.."


தமிழ்.. !! மா நிறம். சின்ன நெற்றி. அழகான வளைந்த புருவம். ஆழமான.. அவனை கொள்ளை கொள்ளும் காந்தக் கண்கள். கூரான மூக்கு. மெல்லிய மேலுதடு. அதை விட சற்றே பெருத்த கீழுதடு. வெள்ளைப் பல்வரிசை. ஆப்பிள் போன்ற கன்னங்கள். மென்மையான மெல்லிய நரம்புகள் ஓடும் கழுத்து. அதன் கீழே சற்று  அகன்று விரிந்த நெஞ்சு. அதில் அம்சமாக நிமிர்ந்து நின்றிருக்கும் இரு இளமைப் பருவச் செழிப்புகள். ஓரளவு நல்ல உயரம்தான்.!


 


 காலேஜ் போகிறாள்.


 கடந்த  இரண்டு வருடம் முன்புவரை அவனுக்கு எதிர் வீட்டில் குடியிருந்தாள். அவளை சிறு வயது முதலே அவனுக்குத் தெரியும். அவனிடம் அவளும் மிக நன்றாகப் பழகுவாள். 


அவள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அவள் வீடு.. ஊறு எல்லாம் மாறிப் போய் விட்டாள். அதுநாள்வரை அவள் மீது  அவனுக்கு காதல் வரவில்லை. 


   அவள் ஊரை விட்டுப் போன பின்தான் அவளது நினைவு அவனை அதிகமாய் பாதித்தது. அதன்பின்தான் அவள் மீது  தனக்கு  காதல் இருப்பதையே புரிந்து கொண்டான் நிருதி.. !!


அதே நேரம்  அவனுக்கும் வெளியூரில் வேலை கிடைத்து, அவனும் அவள் நினைவை மனதில் சுமந்தபடி போய் விட்டான். 


இரண்டு பேரும் இந்த  இரண்டு வருடங்களாக சந்தித்துக் கொள்ளவே இல்லை.


 கடந்த  ஒரு மாதம் முன்புதான் தமிழின் பள்ளித் தோழி ஒருத்தியைப் பார்த்துப் பேசி.. அவளிடம் போன் நெம்பர் வாங்கினான். அதன்பின்   இருவருக்குமான நட்பு  வாட்ஸப் மூலம் துவங்கியது.. !!


 அது இன்று..  இப்போது.. நேரில் சந்திக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.. !! 


"தமிழ்  இது?"  தமிழ்ச் செல்வியின் அருகில்  நின்று கொண்டிருந்த  அவளின் தோழியைப் பார்த்துக் கேட்டான் நிருதி. 


அந்தப் பெண் உடனே அவனைப் பார்த்து சினேகமாகச் சிரித்தாள். அவள் சிரித்தபோது கண்கள் சுருங்கியது. சிரிக்கும் போது அவள்   அழகாகவே இருந்தாள்.


"என் பிரெண்டு" அவனிடம்  இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு சொன்னாள் தமிழ்,

  "ரூபா.. நாங்க ரெண்டு பேரும்  ஒரே க்ரூப்.."


"ஹாய்.." என்றான்.


அவளும் "ஹாய்.." என்றாள். "தமிழ் உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கா"


"அப்படியா? என்ன சொல்லியிருக்கா..?"


"தப்பால்லாம் இல்ல.. ரொம்ப நல்ல அண்ணா. எனக்கு  அந்த ஊர்லயே ரொம்ப புடிச்ச அண்ணானு சொல்லுவா.. அடிக்கடி  உங்களைப் பத்தி ஏதாவது பேசிட்டே இருப்பா"


நிருதி தமிழைப் பார்த்தான். அவள் சிரித்தாள். தமிழின்  கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினான்.


"ம்ம்.. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரே பொண்ணு இந்த காந்தக் கண்ணழகி மட்டும்தான்"


"ஹை.." எனச் சிரித்தாள் தமிழ் .


"அப்போ.. லவ் பண்றீங்களா தமிழை?" அவள் தோழி சட்டென  கேட்டாள். 


"சாட்சாத்.." என்றான். "பட்.. ஒன் சைடா.."


"ஓ.. நோ.." என்று அழகாய் வெட்கப் பட்டாள் தமிழ்.


"ஏய்.. ஏன்டி.. இவங்களுக்கு என்ன? நல்லாத்தான இருக்காங்க..?" தமிழைக் கேட்டாள் ரூபா.


"ச்சீ.. பேசாம இரு" என்று வெட்கப்பட்டாள் தமிழ்.


"சூப்பரா இருக்காங்க. இவர மாதிரி  ஒருத்தர் உன்னை லவ் பண்றதே பெரிய விஷயம்.  ஆனா நீ மாட்டேங்குற? செரியான லூசுதான் நீ.."


"ஆமா நான் லூஸுதான்.. நீ வாயை மூடு."


"ஓகே  ஓகே கூல் பேபிஸ்.. இப்ப எதுக்கு  இந்த சண்டை? விட்டுத் தள்ளுங்க..! நெக்ஸ்ட்.. என்ன பண்ணலாம் தமிழ்? "


"கோவிலுக்கு போலாமா? நான்  சாமி கும்பிடணும்"


"ஓ.. போலாம்.  ஏதாவது வேண்டுதலா.?"


"அதெல்லாம்  சொல்ல முடியாது. எங்களை கூட்டிட்டு போவிங்களா? அதைச் சொல்லுங்க?" சிரித்தாள். 


"என்ன செல்லம் இப்படி கேக்குற? இன்னிக்கு நான் லீவு போட்டதே உனக்காகத்தானே?"


"ரொம்ப தேங்க்ஸ்.."


அவளது தோழி ரூபாவைப் பார்த்தான். அவள் முகத்திலும் ஆர்வம்தான்.


"உன் பிரெண்டு ரூபாவும் வருதா?"


"ஆமா.. இன்னிக்கு புல்லா இவ என்னோடதான் இருப்பா.." என்றாள்.


"ஓகே" பைக்கை ஸ்டார்ட் செய்தான் நிருதி. "உக்காருங்கப்பா.."


 தமிழ் அவன் பின்னால் நெருங்கி, அவன் முதுகுடன் அணைந்து உட்கார்ந்தாள். இளமையின் வனப்பைப் பெற்றுவிட்ட அவளின் மென் பந்துகளின் மெல்லிய  அழுத்தம் அவனைக் கிறங்கச் செய்தது.. !!.


தமிழ்.. நிருதியின் முதுகுடன் ஒட்டி  உட்கார்ந்து தன் தோழிக்கு நிறைய இடம் கொடுத்தாள். 


தமிழின் மென் பந்துகளை போலவே அவளின் தொடைப் பகுதிகளும்,  அவன் பின் பக்கத் தொடைப் பகுதியில் இணைந்து அவனது கன்னிக் காதலைக் கற்பிழக்கச் செய்தது.


"அப்றம் தமிழ் "


"சொல்லுங்கண்ணா"


"இந்த  அண்ணாவை விட மாட்டியா?"


"மாட்டேன்"


"நான் உன்னை லவ் பண்றேன் செல்லம்"


"நான் பண்ணலைல?" என்று சிரித்தாள்.


"நீயும்  என்னை லவ் பண்ணுவே பாரு"


"மாட்டேன்.. மாட்டேன்"


"பாக்கறேன்.. எத்தனை நாளைக்குனு.."


"சரி.. என்ன சொல்ல வந்திங்க?"


"ஆமால்ல.. என்னவோ சொல்ல வந்தேன் இல்ல?"


"ம்ம் "


"மறந்துட்டேன்.."


"வெளையாடறீங்க.."


"இல்ல..  உங்கக்கா.."


"ம்ம்?"


"எப்படி  இருக்கா?"


"ஃபைன். என்ன திடீர்னு  அவளை பத்தி?"


"ஏய்.. உன் அக்காப்பா? உன் பர்த் டே இல்ல? வந்தாளா?"


"வரல. லீவ் கெடைக்கலனு எர்லி மார்னிங் போன் பண்ணி விஷ் பண்ணா"


"ம்ம் குட். உங்கக்கா லவ் என்னாச்சு? "


"போயிட்டிருக்கு போல.."


"எப்ப மேரேஜ்?"


"அது தெரியல. ஏன்?"


"சும்மாப்பா.. "


"அவள்ளாம் உங்களுக்கு செட்டாகமாட்டா"


"ஹே.. லூஸு.  நானே உன்னை லவ் பண்றேன். உன்னை விட்டு  அவளை ட்ரை பண்ணுவேனா?"


"யாரையும் நம்ப முடியாதுப்பா இப்பல்லாம்.."


"எனக்கு  நீ போதும்.  உன் அக்கா  வேண்டாம் "


"நான் ஒண்ணும் ஓகே சொல்லல?"


"நோ ப்ராப்ளம்"


கோவில் சென்றபோது தமிழ்  அவனிடம் மிகவும் நெருக்கமாகியிருந்தாள். அவளின்  உடல்  அவன் உடலின் எந்த பாகத்திலும் இயல்பாகப் பட்டு விலகியது. 


அவளிடம் உரிமை இருந்தது. கூச்சம் விலகி நெருக்கம் கூடியிருந்தது.


தோழியுடன் இணைந்து  அவனையும் அழைத்துக் கொண்டு அந்தக் கோவில் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தாள். சாமி தரிசனம் பெற்றாள்.


கோவிலை விட்டு வெளியே வந்து வெளிப் புறங்களிலும் சிறிது நேரம் பேசியபடி சுற்றித் திரிந்தனர்.


 அவள் தோழி ரூபாவும் நிருவுக்கு நெருக்கமாகி விட்டாள். 


இரண்டு மணி நேரம் கழித்து  கோவிலை விட்டுக் கிளம்பினர். 


"நெக்ஸ்ட் எங்க போலாம்?" நிருதி கேட்டான்.


"ரூபா வீட்டுக்கு " என்றாள் தமிழ் .


"ரூபா வீட்டுக்கா?"


"ம்ம் "


"ஏன்.. அங்க என்ன?"


"ஒண்ணுமில்ல.. ரூபாவ ட்ராப் பண்ணிட்டு நேரா என்னைக் கொண்டு போய் எங்க வீட்ல ட்ராப் பண்ணிருங்க.. தட்ஸ் ஆல்"


"அவ்ளோதானா?"


"அவ்ளோதான்" என்றாள் தீர்மானமாக.. !!


சனி, 17 பிப்ரவரி, 2024

தாராயோ தோழி -1

 வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே வந்ததும் ஓரமான இடம் பார்த்து தன் பைக்கை நிறுத்தினான் நிருதி. 


காலை இளவெயில் இன்னும் கடுமையேறாமல் மிதமான வெப்பத்தை பூமி மீது தெளித்துக் கொண்டிருந்தது.


அதனால் ஏதோ ஓர் அலுவல் காரணமாக குளித்துக் கிளம்பும் மனிதர்ளின் முகங்களில் வெப்பச் சுருக்கம் விழாமல், புத்துணர்ச்சி நிறைந்து காணப் பட்டது.


 பேண்ட் பாக்கெட்டில்  இருந்த  மொபைலை எடுத்து தமிழ்ச் செல்விக்கு போன் செய்தான் நிருதி.


 ரிங் போகனது. 


மறு பக்கத்தில் அவள் எடுத்தாள்.


"ஹலோ?" அவனுக்கு முன் அவளே பேசினாள். மிக மெல்லிய இளங் குரல். 


அவன் மனதார விரும்பிய அவள் குரலைக் கேட்டதும் அவனுக்கு காதினித்தது. மெல்ல உளம் சிலிர்த்தான். 


"ஹாய் தமிழ்..”


“ஹாய்..”


“நான் கிளம்பிட்டேன்"


"ம்ம்.. சரி வாங்க"


"எங்க வரது?"


"என்... என்.. வீட்டுக்கே வந்துர்ரீங்களா?"


"உன் வீட்ல ஆள் இல்லையா?"


"இருக்காங்க.. ஆமா.. வீட்டுக்கு வேண்டாம்."


"அப்றம் நான் எங்க வரது.?"


"ம்ம்.. தெரியலயே.. சரி.. என்ன பண்றது இப்ப?"


“எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ வெளிய வரணும். நான் உன்னை மீட் பண்ணனும்”


"ம்ம்.. வரேன்.. ஆனா என்ன சொல்லிட்டு  வரதுனுதான் தெரியல"


"உன் பிரெண்டு சஞ்சனா வீட்டுக்கு போறதா சொல்லிட்டு வாயேன்.."


"ஐயோ.. அவ வீட்டுக்கா?"


"ஏன்?"


"ம்கூம்.. அவ வீட்டுக்குன்னு சொன்னா அம்மா திட்டுவாங்க.. பொறந்த நாளும் அதுவுமா எனக்கு திட்டு வாங்க விருப்பம் இல்ல.." மெல்லிய சிரிப்பின் குரல் வசீகரித்தது. 


"ம்ம்.. சரி.. இப்ப நான்  என்ன பண்ண? நான் உனக்காகத்தான் லீவ் போட்டேன்"


"ஹையோ.. சரி வாங்க.."


"எங்க வரது? உன் வீட்டுக்கேவா?"


"நோ.. நோ.. வீட்டுக்கு வேண்டாம்.  அதுவும் வம்பாகிரும்"


"......"


"அலோ...?"


"சொல்லுடி செல்லம்.. இப்ப நான்  என்னதான் பண்ண?"


"வரேன்ன்ன்.. டென்ஷனாகிராதிங்க.."


"இல்ல..  வா.."


"வந்து... எங்க ஏரியா பஸ் ஸ்டாப்... இல்ல இல்ல.. அங்க வேண்டாம்.. அந்த  ஸ்கூல் இருக்கில்ல? அங்க பக்கத்துல வெய்ட் பண்ணுங்க.. நான்  வீட்லருந்து வெளிய வந்ததும்  உங்களுக்கு  கால் பண்றேன்"


"உன்ன பாக்க ரொம்ப  ஆசையா இருக்கேன் செல்லம்"


"ம்ம்.. வரேன்ப்பா.."


"ஏய் தமிழ்.."


"ம்ம்? "


"பக்கத்துல யாராவது  இருக்காங்களா?"


"இல்ல.. ஏன்?"


"ஒரு செல்பி எடுத்து  அனுப்பி வை.."


"ம்கூம்.. அதான் நேர்ல பாக்க போறோம்ல?"


"நேர்ல ஓகேமா.. இப்ப நீ எப்படி  இருக்கேனு ஒரு செல்பி.. ப்ளீஸ்" குரலை வெகுவாகத் தணித்தான்.


"இப்ப என்ன அவசரம்? " அவள் குரலில் கொஞ்சல் வழிந்தது. 


"அவசரமில்லாம நீ மெதுவாவே வா.. அதுவரை நான்  என் தேவதையை ரசிச்சிட்டிருக்கேனே?"


"ஓகே.. வெய்ட்.." காலை கட் பண்ணினாள்.


நிருதி மொபைலை சட்டை பாக்கெட்டில் திணித்தான். பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் கலந்தான். 


முறுக்கிப் பிடித்தால் பத்து நிமிடத்தில் தமிழ் சொன்ன ஸ்கூலை அடைந்து விடலாம். ஆனால்  அங்கே போய் நிறைய நேரம் காத்திருக்க வேண்டியது வரலாம்  என்பதால், கனவுகளில் மிதந்தபடி மெதுவாகவே பைக்கை ஓட்டினான்.. !!


அவன் எண்ணம்.. சிந்தனை.. மனசு எல்லாம் தழிழைப் பற்றியே ஓடிக் கொண்டிருந்தது. 


தமிழ் அவன் மனதுக்கினிய பெண்ணாய் இருந்து இன்று மனதையே ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள்.. !!


தமிழ் சொன்ன இடத்தை அடைந்தான் நிருதி. 


பைக்கை ஓர் ஓரமாக நிறுத்தி விட்டு பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தான். நெட் ஆன் செய்து வாட்ஸப் ஓபன் பண்ணினான். 


தமிழிடமிருந்து அவளின் படம் வந்திருந்தது. 


ஆர்வமாக அதைத் திறந்து பார்த்தான். அவன் மனசு குதூகலித்தது.. !!


தமிழ்.. !! 


பிறந்த நாள்  உடையில் அழகாக இருந்தாள். ஓவர் மேக்கப்  எல்லாம் செய்யவில்லை.  ஆனால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்கும் படியாக மேக்கப் செய்திருந்தாள். 


அவளின் வெண்விழி பூத்த காந்தக் கண்கள்  அவனைக் காதலாகப் பார்ப்பதை.. உற்று நோக்கிச் சிலிர்த்தான்.. !!


'நிச்சயமாக  இவளும் என்னை மனதார விரும்புகிறாள். அதை அவள் கண்கள்  அப்பட்டமாகச் சொல்கிறது. ஆனால்  அதை ஒத்துக் கொள்ள மறுக்கிறாள். இருக்கட்டும்..  எத்தனை நாள் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பாள் என்று பார்த்து விடலாம்'


அவனது மனம் கவர்ந்த தமிழின் அழகு முகத்தை ரசித்தபடி அவள் வரக் காத்திருந்தான்.


 அவளுக்காக காத்திருக்கும்  அந்த நொடிகள் அவனுக்கு  சுகமானதாகவே இருந்தது. 


ஒரு கால் மணி நேரம் கழித்து செல்பியில் பார்த்த அதே உடையில்.. அதே தோற்றத்தில் முகம் நிறைய சிரிப்புடன் அவனிடம் வந்தாள் தமிழ்.. !! 


ஆனால்  அவள் தனியாக வரவில்லை.  அவளுடன் இன்னொரு பெண்ணும் வந்தாள்.. !!


"ஹாய் தமிழ்"


"ஹாய் நிரு அண்ணா.." பளிச்சென சிரித்தாள்.


"அண்ணாவா?" லேசாகத் திகைத்தான்.


"ம்ம்.. ஏன்? எப்பவும் நீங்க  எனக்கு  அண்ணாதான்.." என்று சிரித்தபடி இயல்பாக நெருங்கி வந்து தன் வலது கையை முன்னால் நீட்டினாள்.


உள்ளே திடுக்கிட்டான். ஆனாலும் அதை உடனே காட்டிக் கொள்ளாமல் அவள் கையைப் பற்றிக் குலுக்கினான்.


"மேனிமோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே.."


"தேங்ங்க்க் யூ... வெரி மச்"


அவனைப் பார்த்த பரவசத்தில்  அவளின் கண்களின் ஓரத்தில் லேசான நீர் தேக்கம்  உருவாவதை கவனித்தான். 


அவள் கையை அழுத்தினான். அவளை இழுத்து  நெஞ்சுடன் சேர்த்து  இறுக்கி அணைத்துத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் ஒரு தாபம் அவன் நெஞ்சில் மூண்டது.


'இந்த  இரண்டு  ஆண்டுகளில் எவ்வளவு  அழகாய் வளர்ந்து விட்டாள்.? பெண்மைக்கே உரித்தான  உடலின் வளைவுகளும்.. நெளிவுகளும்.. இளமையின் வனப்பும்.. வாளிப்பும்.. யப்பா..!!'


அவன் நெஞ்சில்  ஓடிய அதே எண்ணங்கள் தன் நெஞ்சிலும் ஓடுவதைப் போலவே அவன் கண்களை ஆழமாகப் பார்த்து சிலிர்த்து நின்றாள் தமிழ்ச்செல்வி.. !!




விரும்பிப் படித்தவை.. !!