வெள்ளி, 5 ஜனவரி, 2024

பட்டு ரோஜா -2

                   மாடி ரூம்.. !!


அழகாக இருந்தது. அவன் ஒருவனுக்குப் போதுமான அறை. ஆனால் கீழே இட நெருக்கடி காரணமாக... மாடியில் அவனது அறைக்கு எதிர் புறம் காமன் லெட்ரின் பாத்ரூம் கட்டியிருந்தார்கள். 


கீழே இரண்டு போர்ஷன்கள் இருந்தன.!


காலை.. !!


நந்தா மொட்டை மாடியில் நின்றிருந்தபோது மேலே வந்தாள் அந்தப் பெண்..! கீழ் வீட்டில் குடியிருக்கும் பெண்..!!


அவளின் கன்னங்கள் மட்டுமல்ல, உடம்பும் செழிப்பாகத்தான் இருந்தது. குண்டு கன்னம், குண்டுப் பெண். ஊட்டமான உடம்பு. மா நிறம். 


 ஆனால் பருவம் அவளது மேனியில் பளபளப்பையும்... அழகான எழில் வீக்கங்களையும் கொடுத்திருக்க... அவள் மீது... இயல்பாகவே அவனுக்குள் ஓர் ஆசை எழுந்தது.! 


அவனை நேராகப் பார்க்காமல், ஓரக் கண்ணால் பார்த்துப் போனாள் அந்தப் பெண்.! அவளது பருவ விழியின் அந்தப் பார்வைக்கு காந்த சக்தி மிக அதிகம் என எண்ணினான் நந்தா..!


'இவளோடும் பழகலாம் தப்பில்லை. கொஞ்சம் புஷ்டிக்கா இருந்தாலும் ஆளு நல்லாத்தான் இருக்கா'


அவன் வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தான். 


பாத்ரூம் கதவு திறக்கும் க்ரீச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.


அந்தப் பெண் ஈரக் கால்களுடன் வெளியே வந்தாள்.  ஒருநொடி அவனைப் பார்த்து கண்களைச் சுண்டிவிட்டு சட்டென பார்வையை மாற்றிக் கொண்டாள்.


அவள் பாத்ரூமை விட்டு வெளியே வரும்போது, எதற்கும் இருக்கட்டுமே என்பதைப் போல ஒரு, ''ஹாய்...'' சொல்லிப் புன்னகைத்தான்.


அவள் 'ஹாய் ' சொல்லவில்லை. 


மறுபடியும் கேட்டான் நந்தா.

'' ஹலோ... உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா.?''


''ரொம்ப அவசியமா..?'' கண்களில் மிளகாய் பொடியயைத் தூவியதுபோல முறைப்புடன் கேட்டாள்.


முகத்திலடித்தது போலிருந்தது அவனுக்கு. இருப்பினும்... இளம் பெண்களிடம் திட்டு வாங்குவது ஒன்றும் அவனுக்கு புதிதல்ல...!! 


அவள் நடந்து செல்வதையே பார்த்தான். அவள் நடையில் அவன் தன்னைப் பார்க்கிறான் என்கிற கவனம் தெரிந்தது. 


நாசூக்காய் நடக்கிறாளாம்.!


படியிறங்கும் முன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். 


அவன் பார்வையை திருப்பிக் கொள்ள நினைத்த நொடி அவளே திருப்பிக் கொண்டு போனாள்.. !!



☉ ☉ ☉




''ஹாய்..'' என்றதும்.. வழக்கம் போல மொபைலை நோண்டிக் கொண்டிருந்த கயல்விழி நிமிர்ந்து பார்த்தாள். 


அவளது ஈர இதழ்கள்.. உடனடியாக ஸ்னேகித்தன.

''ஹாய்..'' சொன்னபோது கன்னங்களில் ஒரு மாற்றம் தெரிந்தது.


''எப்பவும்.. மொபைல்தானா..?'' நந்தா கேட்டான்.


''அதுலென்ன தப்பு..?'' எனக் கேட்டாள்.


''தப்பே இல்லை.. யாரு.. பாய் பிரெண்டா..?''


''ஹெலோ.. வாட் டூ யூ மீன்..?''


''இல்ல.. மொபைல்ல.. சாட்.. யாருகூட.. னு.. கேட்டேன்..''


''ஏன்.. பாய் பிரெண்டாதான் இருக்கனுமா..?''


''யாரு சொன்னது..? ஓகே கூல்..!'' எனச் சிரித்தான்.


''வொர்க்கா..?'' சிரிக்காமல் கேட்டாள்.


''அப்படித்தான்..''


"அதென்ன அப்படித்தான்?"


"கிட்டத்தட்ட ஒர்க் மாதிரி.. பார்ட் டைம் ஜாப்"


''எங்க..?''


''கம்ப்யூட்டர் செண்டர்ல...''


''கம்ப்யூட்டர்.. செண்டரா..?'' புருவத்தை தூக்கினாள்.


''ஹலோ.. அத ஏன்.. ஒரு மாதிரி கேக்கறீங்க..?''


''நத்திங்...'' சிரித்தாள் ''மெயின் ஜாப்..?''


''சர்ச்சிங்..'' என்றான்.


அவனுடன் பேச ஆர்வம் எழுந்தபோது, பஸ் வந்தது. ஹாரன் ஒலி எழுப்பியது.


''ஓகே கயல்.. சி யூ.. லேட்டர்.. பை..'' எனச் சொல்லிவிட்டு ஒடிப் போய் பஸ் எடுக்கும் முன் ஏறிக் கொண்டான் நந்தா...!!


பட்டாம் பூச்சி ஒன்று அவளின் நெஞ்சைத் தொட்டுப் போனது போலிருந்தது. அவன் போன பின்னும் அவள் மனசு அவனைப் பற்றியே எண்ணமிடத் தொடங்கியது.. !!


'இது காதலா? சே..! அவன் அவ்ளோ நல்ல பையன்லாம் இல்லை. பாக்க.. ஆள் ஏதோ நல்லாருக்கான். மத்தபடி.. ஒத்து வராது. பிரெண்டு ஓகே!'




●●●●




 ரண்டு நாட்கள் கழித்து.. அதேபோல ஒரு காலை நேரம், மேலே வந்தாள்.. அந்தக் குண்டுப் பெண்.!


அவன் முகத்தில் அடித்தது போல பேசிய பிறகு.. நந்தா அவளுடன் பேசவில்லை. ஆனால் அவ்வப்போது ஒரு லுக் மட்டும் விடுவான்.!


''என் பேர் கேட்டிங்க.. இல்ல..?'' என்று இப்போது அவளே பேசினாள். 


கண்ணாடி போட்டிருந்தாள். வாயில் எதையோ மென்று கொண்டிருந்தாள்.


நந்தா.. லேசான வியப்புடன் அவளைப் பார்த்தான்.


''பரவால்ல.. தைரியமானவர்னு நெனச்சேன். ஆனா.. இப்படி பயந்துட்டிங்க..?'' எனச் சிரித்த.. அவள் சிரிப்பு.. நிச்சயமாக அவனை கேலி செய்தது.!


'வாரே வா..!' அவனுக்குள் மெல்லிய ஆணவச் சிலிர்ப்பு எழுந்தது.


"இல்லங்க.. நீங்க ரொம்ப நல்ல பொண்ணா தெரிஞ்சீங்க.. அதான் உங்ககூட நட்பு வெச்சிக்கலாம்னு ஒரு ஹாய் சொன்னேன். பட்.. உங்களுக்கு நட்பு புடிக்காது போலனு அதுக்கு பின்னால புரிஞ்சுகிட்டேன்"


"எனக்கு நட்பெல்லாம் புடிக்கும்" 


"அப்போ.. நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போலருக்கு. ஸாரி.."


"இட்ஸ் ஓகே.."


''சரி.. இப்ப சொல்லுங்க..! இந்த காந்தக் கண்ணழகியோட.. ஸ்வீட் நேம்..?'' அவளின் இடது கன்னத்தில் ஒரு பரு தன் சிவப்பு முத்திரையைப் பதித்திருந்தது.


பூரிப்பு வந்துவிட்டது. கன்னங்கள் மினுக்கச் சிரித்தாள். பின்.. சொன்னாள்.

 ''கமலி.. !!"


தன் பெயரை எவ்வளவு அழகாக உச்சரிக்க முடியுமோ அவ்வளவு அழகாகவே உச்சரித்தாள் அவள். அதற்கென அவள் தனிப் பயிற்சி எடுத்திருக்க வேண்டுமோ எனத் தோன்றியது.


இந்த இரண்டு நாளில் அவள் பெயர் மட்டுமல்ல.. இரண்டு போர்ஷன்களில் இருக்கும் அனைவரின் பெயர்.. வேலை.. எல்லாம் தெரிந்து கொண்டதோடு.. அவர்களுடன் ஒரு ''ஹாய் '' சொல்லும் பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டிருந்தான் நந்தா.!


''நைஸ்.. நேம்..!!'' என்றான், "பேர் மட்டுமில்லே.. கேர்ளும் நைஸ்தான்" பார்வையால் அவளை முழுதாக வருடினான்.

'' என்ன படிக்கறீங்க..?''


''செகண்ட் இயர்"


நைட்டியில் இருந்தாள் கமலி. அவளது பருவக் கதுப்பு மேடுகள்.. நைட்டிக்கு மேல்.. முகடாக எழுந்து நின்று  தன் இருப்பைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. கழுத்தில் சன்னமான ஒரு செயின் போட்டிருந்தாள்.


''ஒரே பொண்ணா..?'' அவன் பார்வை அவளை சில்மிசம் செய்தன.


''தம்பி இருக்கான்..!'' அவளிடம் வெட்கத்தின் சாயல் தென்பட்டது.


''அவரு என்ன படிக்கறாரு..?''


" டுலவ்த்"


''கான்வென்ட்டா..?''


''ம்கூம்..'' காதில் தொங்கிய கம்மல்கள் ஊசலாட வேகமாகத் தலையாட்டினாள் கமலி, ''கவர்ண்மெண்ட் ஸ்கூல்தான்.!  ஹையர் செகண்ட்ரி ஸ்கூல்..''


''பரவல்லயே.. தமிழ் வாழ்க...'' சிரித்துக் கொண்டே சொன்னான்.


''நீங்க தனியாவா இருக்கீங்க..?'' கண்ணாடிக்குள் இருந்த கண்கள் வழியாக அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


''நோ.. என் கூட இப்ப.. ஒரு சூப்பர் ஃபிகர் நின்னு பேசிட்டிருக்கு..''


"அலோ.. நான் ஒண்ணும் சூப்பர் ஃபிகர் இல்ல.. நார்மால் ஃபிகர் அவ்ளோதான்.."


"யாரோ தப்பா சொல்லிட்டாங்க உங்களுக்கு.. நீங்க அழகான பொண்ணுதான். என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஃபிகர"


அவளின் மூக்கு கூர்மை காட்டியது.


''சரி.. பட் நான் அத கேக்கல..! உங்க ரிலேஷன்லாம்..?''


''இருக்காங்க.. ஊர்ல..!''


''ஆ.. எங்கப்பா சொன்னாங்க..! நீங்க ஹவுஸ் ஓனருக்கு.. ரிலேஷன்னு..''


''அப்படியா சொன்னாரு..?''


''ஆமா.. ஏன்..?'' கண்களை சுருக்கிப் பார்த்தாள்.


'' என்னைவிட.. என் பிரெண்டு.. ஒருத்தன்.. அவன்தான்.. அவருக்கு ரொம்ப ரிலேஷன்..'' என்றான்.


அவள் புரியாமல் அவனைப் பார்க்க.. கண் சிமிட்டி..

''காலேஜ் போகல.?'' எனக் கேட்டான்.


''போகனும்..'' என்றுவிட்டு நினைவு வந்தவளைப்போல தடதடவெனப் படிகளில் இறங்கி ஓடினாள்.


'அவள் வந்ததே என்னைப் பார்க்கத்தானோ?'


திங்கள், 1 ஜனவரி, 2024

பட்டு ரோஜாவின் ஈர முத்தம் -1

 தடதடத்து நின்ற டவுன் பஸ்ஸை விட்டு இறங்கியதும், பேகை தோளில் மாட்டிக் கொண்டு, கடை வீதியை ஒருமுறை பார்த்து விட்டு, பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து தன் நண்பனுக்கு கால் செய்தான் நந்தா.!


ரிங்காகி மறுமுனை எடுக்கப் பட்டதும்,

'' சொல்லுடா..'' என்றான் நண்பன்.


'' நீ சொன்ன ஏரியாக்கு வந்துட்டேன்டா.. கட் ரோடு.. வீட்டுக்கு எப்படி போகணும்.?'' இடதும் வலதுமாக திரும்பிப் பார்த்துக் கொண்டான். 


''வீட்டுக்காரங்க கிட்ட எல்லாம் பேசியாச்சு..! நீ போய் அவங்களை பாரு போதும்..'' என்றான் எதிர் முனை நண்பன்.


'' சரி.. வழி சொல்லு..?''


'' நோட் பண்ணிக்க ..'' 


வீட்டு முகவரி சொல்லி, அதற்கு எப்படி போக வேண்டும் என்றும் சிறிது விளக்கமாகச் சொன்னான் நண்பன்.!


பேருந்து செல்லும் சாலை ஒன்றுதான். ஆனால் அந்த நிறுத்தத்திலேயே வலது இடது முன்னே பின்னே என்று பெரிய வீதிகளும் சிறிய வீதிகளுமாக ஐந்து சாலைகள் இருந்தன. 


ஆனாலும் நண்பன் சொன்னபடி நடந்து, இரண்டு பக்கத்திலும் வீடுகள் நிறைந்த வீதியில் நுழைந்த போது நந்தாவுக்கு குழப்பம் உண்டனது.  யாரையாவது கேட்கலாம் என நினைத்தான்.


அருகில் ஒரு டெலிபோன் பூத் இருந்தது. திரும்பி பூத்தை நோக்கிப் போனான்!


 பூத்தில் ஓர் இளம்பெண் உட்கார்ந்திருந்தாள். பார்வையால் அவளை வருடியபடி அணுகினான் !


''எக்ஸ்கியூஸ்.. மி ! ''


குனிந்தபடி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் ! 


கெண்டை மீன்களாகத் துள்ளும் நயன விழிகள் அவனைப் பார்த்து அழகாக.. நர்த்தனம் புரிந்தன.!


லேசான கறுப்பாக இருந்தாள். ஆனாலும் வட்ட முகத்தில் லட்சணமாக அழகாக இருந்தாள். 


'' ஒரு அட்ரஸ் தெரியனும் '' தலை முடியை இடது கையால் கோதிவிட்டுக் கொண்டான்.


'' என்ன அட்ரஸ்?'' அவள் முகம் கூர்மையானது. உதடுகளில் ஓர் இறுக்கம்.


அட்ரஸைச் சொன்னான்!


அவள் கண்ணசைக்காமல் அவன் சொல்வதை செவிமடுத்துக் கேட்டுவிட்டு தன் அழகிய இதழ்களைப் பிரித்தாள்.

'' நேரா போயி லெப்ட்ல கட் பண்ணா.. மூணாவது வீடு. வீட்டு முன்னால ஏர்டெல் விளம்பர போர்டு இருக்கும். அந்த வீடு தான் ''


'' தேங்க்ஸ்.. ''


''யூ ஆர் வெல்கம். '' எனக் கண்ணோரங்கள் சுருங்கச் சிரித்தாள். 


 அப்படிச் சிரித்தபோது அவளறியாமல் அவளுக்குள் அவன் மீ்து ஓர் ஈர்ப்பு உண்டாகியிருந்தது.


அவனும் சிரித்தான்.

'' ஓ.. நைஸ்.. உங்ககிட்ட நான் ஒண்ணு சொல்லனும்.'' எனத் தயங்கினான்.


'' ஐ லவ் யூ.. இல்லையே. ? '' ஈர இதழ்கள் மலரப் புன்னகைத்தாள்.


ஆனால் அவளது எதிர்பார்ப்பு அதுவாகக் கூட இருக்கலாம் போலத் தோன்றியது அவனுக்கு.


"சே.. இல்லை" புன்னகை காட்டினான்.


"ஓகே.. அப்ப சொல்லுங்க?" அவளும் குறுநகை காட்டினாள்.


'' உங்க கண்ணு ரொம்ப.. ரொம்ப அழகாருக்கு.. '' எனக் கண் சிமிட்டினான்.


 அவள் முகம் சட்டென ஒரு பூரிப்புக்குப் போனது. 

"தேங்க் யூ" சொன்னாள்.


ஏனோ பார்த்த நொடியே அவளுக்கு, அவனைப் பிடித்து விட்டது.


அவனது ஆண்மை மிடுக்கான உடல் தோற்றமா? அல்லது முக வசீகரமா என்று அவளுக்கு புரியவில்லை.  ஆனால் அவனை பிடித்தது. அவனுடன் முன்பு எப்போதோ பழகியிருப்பது போன்ற ஓர் உணர்வு.


 ''உங்க நேம் ?'' அவளே கேட்டாள்.


'' நந்தா.. நந்தகுமார்.. ''


'' நான்.. கயல்.. கயல்விழி .. ''


'' வாவ்..!! அப்ப உங்க கண்ணப் பாத்துட்டுத்தான்.. உங்களுக்கு பேர் வெச்சீருக்காங்க போல..?''


'' ம்..ம்ம்..  அப்படியா இருக்கு என் கண்கள்? '' ஒரு காட்பரீஸ் சாக்லெட் எடுத்து கவர் பிரித்தாள்..!


"மீன்கள் மாதிரி அழகு" சொல்லும்போது புன்னகை அதிகமானது.


உதடுகள் மலர அவனைப் பார்த்தாள் !

'' கல்யாணமாகிருச்சா ? ''


அட.! என வியந்தான். 

' அடி போடலாமே !'


'' பாத்துட்டிருக்கேன்."' என்றான்.


''என்னை மாதிரி பொண்ணு.. ஓகேவா?'' தயக்கமே இல்லாமல் கேட்டாள்.


'' டபுள் ஓகே.. !! பட் ...''


'' பட்...?''


" பட்.. இதழ் அழகிக எல்லாம் நம்ம லெவலுக்கு செட்டாகணுமே.." என அவன் நகைக்க.. 


சட்டென அவள் கண்கள் அவனை முறைத்தன. அவள் மூக்கின் நுனியிலும் அதன் பிரதிபலிப்பாக சிறு முத்தாக வியர்வைத் துளியின் தேக்கம்.


"கண்ணு மட்டும்தான் அழகுனு சொன்னிங்க?"


"கண்ணு மட்டும்தான் அழகுன்னு சொல்லல.. கண்கள் மீன்கள் மாதிரி அழகுனுதான் சொன்னேன். இதழ்களை பத்திச் சொல்லலை.. இதழ்களும் அழகுதான்"


"விட்டா.. மூக்கும் காதும் கூட அழகுனு சொல்லுவீங்க போல?"


"ஆமா.. காதும் மூக்கும் கன்னமும்கூட அழகுதான்"


அவள், அவனை மலர்ச்சியுடனே பார்த்தாள்.


"அழகிக.. நெறைய வேணுமோ?" குரல் ஒரு மாதிரி போனது.


'' ஸாரி.. நான் அப்படி சொல்லல.."


அவனது விளக்கத்தில் அக்கறை இல்லாதவள்போல சாக்லெட்டை ஒரு வாய் கடித்து விட்டு அவனிடம் கேட்டாள்.

'' சாக்லெட்.. ? ''


அவளது மெல்லிய அதரங்களையே சுவைக்க வேண்டும் போலிருந்தது!


'' மறுக்கற ஐடியா இல்லை '' என்றான்.


''கடிச்சிக்கோங்க'' வலது கைக்கு மாற்றி அவனை நோக்கி நீட்டினாள், ''எச்சில் படாத பக்கம் ''


அவள் கடித்த பக்கமே கடித்தான்.

'' உங்க இதழ் பட்ட சுவை அருமை.. '' நாக்கைச் சுழட்டி சாக்லெட் சுவைத்தான்.


சிரித்தாள், ''இதழ் சுவைனா ரொம்ப புடிக்கும் போல? ''


'' என்ன இப்படி கேட்டுட்டீங்க.? இதழ் சுவை புடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா என்ன..? அதுவும் உங்கள மாதிரி.. ஒரு.. இதழழகியோட இதழ் சுவை கிடைக்க.. புண்ணியம்லாம் பண்ணியிருக்கனுமே '' அவன் வழிந்துகொண்டு சொல்ல.. குறு குறுவெனப் பார்த்தாள்.


அவன் ப்ளே பாயாக இருக்கலாம். ஆனால் அது கூட அவளுக்குப் பிடித்தது. 


மெல்லக் கேட்டான்.

'' கெடைக்குமா ? ''


மறுபடியும் நீட்டினாள்.

 '' ம்.. ''


'' இதில்ல'' அவன் மனசில் படபடப்பு கூடியது.


'' தென்.. ? ''


'' இதழ்.. சுவை ? ''


'' அலோ.. இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல? '' அவள் கண்கள் மீண்டும் கோபம் காட்டின.


''எதையும் ஒரு முயற்சி செய்து பாக்கறது தப்பில்லைன்னு ஒரு அறிஞர் சொல்லியிருக்கார். காரியம் வெற்றியா தோல்வியான்றது முக்கியமில்லை. முயற்சி செய்தமா இல்லையான்றதுதான் முக்கியம்.."


"எந்த அறிஞர்?"


"யார் சொன்னாங்கன்றது முக்கியமில்லை. என்ன சொன்னாங்கன்றதுதான் முக்கியம்.. அந்த வகையில நான் எந்த ஒரு விசயத்திலும் முயற்சி செய்ய தயங்கறதே இல்லை.."


எப்படியும் இந்தக் கிளி படிந்துவிடும் எனத் தோன்றியது. ஆனால் எந்தக் கிளியும் உடனே படிந்து விடாதே. அடிப் போட்டு வைப்போம். சில நாட்களோ சில மாத‌ங்களோ ஆகலாம். ஆகட்டும். தபபில்லை.


'' அட்ரஸ் கேக்க வந்தீங்களா இல்ல... ஆள.. செட் பண்ண வந்தீங்களா ? '' அவளது குரலும் கோபம் காட்டியது. ஆனால் அது உண்மைக் கோபமில்லை. 


'' அதென்னமோ.. உங்களப் பாத்ததும்.. ஒரு மாதிரி.. பீலாகிட்டேன்.. ஸோ.. தெய்வத்தால் ஆகாதெனிணும்.. மெய் வருத்தக் கூலி தரலாம்.. ''


"முயற்சி.." முறைத்தாள், '' என்ன பண்றா..?''


''யாரு..?''


''ம்ம்.. உங்க ஆளு.. ?'' இழுத்தாள்.


"எக்ஸ்.." என்றான்.


"ஓகே.. உங்க எக்ஸ்?"


'' வேலைக்கு போறா. ''


'' எப்படி இருப்பா ? ''


'' சுமாராதான்.. இருப்பா ..!''


" நெனச்சேன். '' சிரித்தாள். ''மேட்டர் முடிச்சாச்சா அவளை.. ? ''


'' என்னது..?'' திகைத்தான்.


'' மேட்டர்ங்க..!! மேட்டர்.. தெரியாது ? '' வெகு இயல்பாகக் கேட்டாள்.


'' எ.. எந்த.. மே…மேட்டர் ? ''


''செக்ஸ்ங்க.. செக்ஸ்...!! ''


'' செக்ஸா.. ? ''


'' அதுக்கு ஏன்.. இப்ப இப்படி வாயப் பொளக்கறீங்க? இப்ப தான் மேட்டர் பண்றதெல்லாம் சப்ப மேட்டர் ஆகிருச்சே ?'' எனப் புன்னகைத்தாள்.


'' ஆஹா.. ! அழகு போங்க.. !''


'' ஏன்? அதுல என்ன தப்பு ? ''


'' தப்புன்னு இல்ல.. '' இழுத்தான் "இவ்வளவு வேகம் நான் எதிர்பாக்கலை"


"எதிர் பாராததை எதிர் பாருங்கள்னு உங்க அறிஞர் சொல்லலையா?"


"அவரு சொல்லியிருக்காரு.. ஆனா.. அதை என்னை போலவே பாலோ பண்ற ஒரு பொண்ணும் இருப்பாங்கனு நான் எதிர்பாக்கலை"


'' சட்டமே சொல்லுதே '' என்றாள்.


''என்னான்னு?''


'' செக்ஸ் வெச்சுக்கற.. உரிமை. பதினாறு வயசுன்னு..!''


'' ஓ... ! சரி தான்.. ! நிச்சயமா நீங்க அந்த வயசை கடந்துட்டிங்கனு சொல்லலாம். கூடவே இன்னும் மேரேஜ் ஆகலைனும் தெரியுது.. மத்தபடி.."


" கண்ணால எடை போட வேண்டாம்.. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.."


''புரியுது.. இப்ப எப்படி வசதி?''


'' நெம்பர் குடுங்க.. '' என்றாள்.


உடனே தன் நெம்பர் சொன்னான்!

'' உங்க நெம்பர்? ''


'' நானே.. கால் பண்ணுவேன் '' எனச் சிரித்தாள் .!


''எப்போ..?''


''அதெல்லாம் சொல்ல முடியாது..''


''உங்க சொந்த பூத்தா.. இது..?''


''ஏன். .?''


''சொந்த பூத்னா.. எனி டைம்.. உரிமையோட.. பிரச்சினை கூடாதில்லையா?"


''ம்.. ம்...! வெவரம்தான்..''


'' எப்ப வந்தாலும் மீட் பண்லாமில்ல..?''


அவளது செவ்விதழ்கள் மட்டுமல்ல.. அவளின் அழகிய விழிகளும் சேர்ந்து விரிந்தன.


''என்னை எதுக்கு மீட் பண்ணனும்..?''


''ஒரு பிரெண்டா… அதுக்கு அனுமதி உண்டுதானே..?''


''தப்பில்லை.. !!'' எனப் புன்னகைத்தாள்.


'' தாங்க் யூ.... யூ.....''


'' அதுக்குள்ளயும் பேர் மறந்தாச்சா...?''


'' கயல்விழி...!!''


''குட்..''


'' அழகான... கண்களோட பேர எப்படி மறக்க முடியும். .?''


'' தேங்க்ஸ்..''


'' பை.. அடிக்கடி மீட் பண்ணலாம்..'' என்றான் நந்தா.


அவள் இப்போதே அவனிடம் தன் கற்பை இழக்கத் தாயாராகி விட்டதை அவனது ஆண்மை உணர்ந்தது.


"பை" சொல்லி டாடா காட்டினாள்.. !!



விரும்பிப் படித்தவை.. !!