''ஆமாடா.. அவ சொல்றதும் சரிதான். அந்த புள்ள மாமியா ஒரு மாதிரி பேசுவா. நீ எப்படியாச்சும் பணத்தை பெரட்டி குடுத்துரு..!!'' என்றாள் அம்மா.
'' ம்ம். கவலை படாத.. ரெண்டு நாள்ள உன் பணம் வந்துரும்.. !!'' என்று எனக்குள் எழுந்த வலியை அடக்கிக் கொண்டு சொன்னேன்.
''சொன்னா பத்தாது. அது மாதிரி நடந்துக்கனும்.'' என்றாள் தங்கை.
'' கம்பெனிலயே கேளு '' அம்மா சொன்னாள்.
'' முடிஞ்சவரை கம்பெனில எல்லாருகிட்டயும் வாங்கியாச்சும்மா..! அங்கல்லாம் கிடைக்காது. இவ கல்யாணத்துக்கு வாங்கினதுலயே இன்னும் வட்டி கட்ட முடியாம திணறிட்டிருக்கேன். இதுல உன் செலவு வேற.. வெளிலதான் வாங்கனும்.. !!''
'' வெளில.. யாருகிட்ட.. ??''
'' யாரையும் நம்பறதுக்கில்ல.. !'' என்று விட்டு மெல்லச் சொன்னேன். ''வண்டிய வித்துரலாம்னு இருக்கேன்..!!''
அம்மா முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
'' பைக்க விக்கறியா ??''
'' வேற வழி இல்ல. வாங்குன பணத்துக்கு வட்டி கட்ட வேண்டியதே நெறைய நிக்குது. வண்டிய வித்துட்டா.. முடிக்க வேண்டிய பாதி பிரச்சினை முடிஞ்சிரும்.. !!''
'' பைக்க வித்துட்டு நீ எதுல போவ..??'' என் தங்கை.
'' நான் எதுல போனா உனக்கு என்ன..? உன் பிரச்சினை தீந்தா அது போதும்ல உனக்கு ??''
'' பாத்தியாம்மா உன் பையன் எப்படி பேசுறான்னு..??'' என அம்மாவிடம் ஆரம்பித்தாள்.
அம்மாவும் அதே கேள்வியைக் கேட்டாள்.
''நீ வேலைக்கு எப்படிடா போவ.. ??''
'' பஸ்ல போறேன் ''
'' சிரமமா இருக்குன்னுதான வண்டி வாங்கின.. ??''
'' என்ன பண்றது அதுக்கு..??'' எனது உள்ளக் குமுறலை எல்லாம் அடக்கிக் கொண்டு சொன்னேன்.
தங்கை. ''எப்படியோ.. போ.. ! எங்களுக்கு என்ன.??''
அம்மா. ''எதுக்கும் கடனா கெடைக்குமானு கேட்டுப் பாரு ''
'' அதெல்லாம் வேஸ்ட்மா.. வண்டி போனா கெடக்குது. எனக்கு பிக்கல் ஒழிஞ்சா சரி. கொஞ்சம் நிம்மிதியாவாவது இருப்பேன்..'' என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க விருப்பமில்லாமல். ''சரி நான் போறேன். நாளைக்கு வந்து பாக்கறேன் '' எனச் சொல்லி விட்டு கனத்த மனதுடன் ஆஸ்பத்ரியை விட்டு வெளியே வந்தேன்.. !!
நான் வீடு போனபோது இரவு பத்தரை மணி.. !!
சத்யாவின் வீட்டில் விளக்கணைக்கப் பட்டிருந்தது.
நான் பைக்கை நிறுத்தி.. வீட்டுக்குள் போய் உடை மாற்றி வந்து பாத்ரூம் போனேன்.
முகம் கை கால் கழுவி வெளியே வந்தபோது சத்யாவின் அம்மா வெளியே வந்தாள்.
'' இப்பதான் வரியா.. ??'' என்றாள்.
'' ஆமாங்க்கா..!!'
என் அம்மாவைப் பற்றி விசாரித்தாள்.
நான் சொல்லி முடித்து அவளிடம் கேட்டேன்.
'' அப்றம் சத்யாவ பொண்ணு பாக்க வந்தது என்னாச்சுங்க்கா.. ??''
'' நல்ல படியாதான் வந்து பாத்துட்டு போயிருக்காங்கப்பா..!! எல்லாம் கலந்து பேசிட்டு சொல்றேன்றுக்காங்க..! அனேகமாக இந்த எடம் அவளுக்கு அமைஞ்சிரும்னுதான் என் மனசுக்கு படுது..'' என்றாள்.
'' ஏதாவது எதிர் பாக்கறாங்களாக்கா.. ??''
'' இந்த காலத்துல யாருப்பா சும்மா கட்டுவாங்க.. ?? நம்மனால என்ன முடியும்னு சொல்லியாச்சு. அப்றம் அவங்க விருப்பம்தான். பாக்கலாம் என்ன சொல்றாங்கனு.. !!'' என்றாள்.
மேலும் கொஞ்ச நேரம் பேசி விட்டு நான் உள்ளே போய் விட்டேன்.. !!
மறுநாள் காலை.. நான் தூக்கம் கலைந்த போது மணி எட்டே கால்.!
நான் அவசரமாக எழுந்து ஓடி.. காலைக் கடன்களை முடித்து.. குளித்து வேலைக்கு கிளம்பியபோது.. சத்யாவும் புறப்பட்டு வெளியே வந்தாள்..! இளஞ் சிவப்பு சுடிதாரில் அம்சமாக இருந்தாள்..!!
'' இன்னிக்கும் லேட்டா.. ??'' எனச் சிரித்தாள்.
'' லேட்டாதான் தூங்கினேன் ''
'' டெய்லியுமா..? இன்னிக்கு ஏழரை மணிக்கு கதவை தட்டி எழுப்பி விடலாமானு பாத்தேன். அப்பறம் பாவம் தூங்கட்டும்னு விட்டுட்டேன்..!!''
'' தனியா இருந்தா நேரத்துக்கு தூக்கம் வரதில்ல..!! சரி.. நேத்து வந்தது என்னாச்சு..??''
புன்னகைத்தாள்.
'' ம்ம்... பாத்துட்டு போயிருக்காங்க..''
'' உனக்கு புடிச்சுதா.. ?''
அவள் முகத்தில் லேசான வெட்கம்.
''ம்ம்.. தேவல..''
'' பேசுனியா ?''
'' சே.. இல்ல..! இது என்ன சினிமாவா..?''
'' சினிமா இல்ல... இப்பல்லாம் நேச்சுரல்லயும் பேசிக்கறாங்க.. !!''
'' இல்லப்பா.. நான் பேசல.. ''
'' அப்ப.. உனக்கு ஓகேதான்.. ??''
'' ம்ம்.. !!'' முகத்தில் படர்ந்த மெல்லிய வெட்கத்துடன் தலையை ஆட்டினாள். துப்பட்டாவை இழுத்துப் போட்டாள்.
அது அவள் மார்புக்கு மேலே போயிருக்க.. அவளது விம்மிய மார்பின் திரட்சியைக் கண்டு ஒரு கணம் அசந்தேன்..!!
சத்யா உடனே.. ''ஓகே.. பை..!!'' என்று இடது கையின் மூன்று விரல்களை மட்டும் அசைத்தாள்.
நானும் கை அசைத்தேன்.
'' பை.. !!''
அவள் பின்னழகு அசைய வேகமாக நடந்து போக.. நான் பெருமூச்சுடன் பைக்கை ஸ்டார்ட் பண்ணினேன்.. !!