ஆறு மாதம் முன்புதான் என் தங்கையின் திருமணத்தை முடித்து வைத்தோம்.
அடுத்த தெருவைச் சேர்ந்த ஒருவனை காதலித்து அவனைத்தான் கட்டிக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள்.. !!
வேறு வழி இல்லாமல் அவனுக்கே இவளைக் கட்டி வைத்தோம்.. !!
எங்களுக்கு அப்பா இல்லை. விபரம் வந்த நாளில் இருந்து அம்மா மட்டும்தான்..!
இப்போது அந்த அம்மா ஆஸ்பத்ரியில் இருக்கிறாள். பிரெஷ்ட் கேன்சர்..!!
இரண்டு நாள் முன்பு என் அம்மாவின் இடது மார்பகத்தை அகற்றியாகி விட்டது.. !! இன்னும் அம்மா ஆஸ்பத்ரியில்தான் இருக்கிறாள்..!!
என் அம்மாவுக்கு கேன்ஸர் ஆரம்பித்த பிறகுதான்.. என் தங்கை கல்யாணத்தை அவசரமாக முடிக்க வேண்டியிருந்தது. அதனால் மறுக்க முடியாமல் அவள் காதல் கை கூடி விட்டது.. !!
ஆனால் இதில் என் அம்மா செலவு உட்பட.. கடனாளியானது நான் மட்டும்தான்..!!
என் தங்கைக்கு அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலை இல்லை.. !! அவள் கணவனிடம் நான் வாங்கின கடனை அடைக்க முடியவில்லை என்பதுதான் அவளது கவுரவப் பிரச்சினையாக இருக்கிறது.. !!
என் தங்கை போன பின் சத்யா கேட்டாள்.
'' என்ன இது.. இப்படி பேசிட்டு போறா.. ??''
'' அதை ஏன் கேக்கற..? எங்கம்மாவை அட்மிட் பண்ணப்ப.. அவ புருஷன் ஆஸ்பத்ரிக்குனு ஒரு இருபதாயிரம் செலவு பண்ணிட்டான்.. ! அதைக் கேட்டு ஒரே நச்சரிப்பு.. ! அவன்கூட ஒண்ணும் கண்டுக்கறதில்லை இவளோட பொலம்பலைத்தான் கேக்க முடியறதில்ல.. !!''
'' ஓ.. !!'' வாயைக் குவித்தாள் சத்யா.
'' நான் என்ன வெச்சிட்டா அவளுக்கு குடுக்க மாட்டேங்குறேன். இவ கல்யாணத்துக்கு பண்ண செலவுலயே இன்னும் ரெண்டு லட்சத்துக்கு மேல கடன் இருக்கு. இப்ப எனக்கும் சரியா வேலை வேற இல்ல. வட்டி கட்டவே திண்டாட்டமா இருக்கு..! இதுல அம்மா ஆபரேசன் ஒரு பக்கம்.. !! நான் எதை எதைத்தான் பாக்கறது..?? ஆனா அவ பேசறதை யாராவது கேட்டாங்கனு வெய்யி.. என்னமோ நான் தண்டமா சுத்தற மாதிரியும் அவதான் எல்லாத்தையும் தாங்கறாங்கற மாதிரியும் நினைப்பாங்க.. !!''
சிரித்தாள் சத்யா.!
'' சரி விடுங்க.. உங்க தங்கச்சிதான சொல்றா.. ??''
'' ஒண்ணும் பேச முடியாது.. !!''
'' அது சரி.. இன்னிக்கு என்ன எழுந்துக்க இவ்வளவு நேரம்..?? விஜி சொன்ன மாதிரி.. நைட்டு புல் சரக்கோ.. ??''
'' அட.. நீ வேற சத்யா..! அவனவன் கைல நையா பைசா இல்லாம காஞ்சு போய் கெடக்கான். இதுல புல்லா எங்க போய் அடிக்கறது.. ? தனியா இருக்கற கொழப்பத்துல ரொம்ப நேரம் தூங்காம டிவி பாத்துட்டு இருந்தேன். அதான்... ''
'' ஓ.. ஹ்.. !!'' எனச் சிரித்தாள். ''ஆனா உங்கள பாத்தா.. மூஞ்சியே ஒரு மாதிரி.. சரக்கடிச்சாப்லதான் இருக்கு.. !!''
'' இதான் நேரம்ன்றது.. !!''
'' சும்மா.. கோவிச்சிக்காதிங்க.. !!'' சிரித்தாள்.
எனக்கு வேலைக்கு நேரமாகியிருந்தது. அவளுடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை.
'' ஓகே சத்யா.. எனக்கு டைமாகுது.. !! பெஸ்ட் ஆப் லக்.. !! நிச்சயமா உன்ன பாக்க வர மாப்பிள்ளைக்கு உன்னை புடிக்கும்.. !! சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு.. !!'' என்றேன்.
'' தேங்க்யூ நிரு.. !!'' என்று முகம் நிறைய வெட்கத்தை அப்பிக் கொண்டு சிரித்தாள் சத்யா.
நான் குளிக்க ஆயத்தமானேன்.. !!
பொறுமையாக குளிக்கவெல்லாம் நேரம் இல்லை. அல்லது அதில் ஆர்வமும் இல்லை. பெயருக்கு குளித்தால் போதுமானது என்கிற மனநிலை.
நான் அவசரமாகக் குளித்து.. உடை மாற்றிக் கொண்டு.. வீட்டைப் பூட்டிக் கிளம்பியபோது.. வாசலில் வைத்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த சத்யாவின் அம்மா கேட்டாள்.
''வேலைக்காப்பா.. ??''
'' ஆமாங்க்கா.. ''
'' உன் தங்கச்சி வந்து பாட்டா பாடிட்டு போனாளாமா.. ?? அம்மாவ பாக்க போகலியா.. ??''
'' இப்ப நேரம் இல்லக்கா..! சாயந்திரம் போய் பாத்துக்கறேன்.. !!''
சத்யா மீண்டும் கதவருகே வந்து நின்று என்னைப் பார்த்தாள். கவர்ச்சியாகப் புன்னகைத்தாள்.
'' மேக்கப் கலைஞ்சிர போகுது '' என்றேன்.
''கலைஞ்சா மறுபடி பண்ணிப்பேன்..!!'' என்று சிரித்தாள்.
'' ஒகே.. பெஸ்ட் ஆப் லக்.. !!''
'' தேங்க்ஸ். !!''
சத்யாவின் அம்மா சொன்னாள்.
''என்னவோப்பா.. இந்த எடமாச்சும் நல்லா அமையட்டும் ''
'' அமையும். கவலை படாதிங்க.. !!'' என நான் சொல்ல..
'' ஆமா.. போன வாட்டியும் இதைவேதான் சொன்னீங்க ..?? '' எனக் கிண்டலாகச் சிரித்தாள் சத்யா.
'' இந்த வாட்டி அமையும் பாரு.. !!'' என்று விட்டு.. நான் புன்னகையுடன் விடை பெற்றுக் கிளம்பினேன்.. !!
இரவு.. !!
அம்மாவைப் பார்க்க ஆஸ்பத்ரி போனேன். அம்மா கொஞ்சம் உடல்நலம் தேறி தெம்பாக இருந்தாள்..!!
'' எப்படிமா இருக்கு.. இப்ப.. ??''
'' ம்ம்.. தேவலப்பா.. ''
'' சாப்பிட்டியா.. ??''
'' இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன்..! நீ என்ன பண்ண.. ??''
'' எனக்கென்ன..? போறப்ப சாப்பிட்டு போய்க்குவேன்.. !!''
என்னையே பார்த்துக் கொண்டிருந்த என் தங்கை மெல்லச் சொன்னாள்.
''நேரங் காலமா வீடு போய்ச் சேரு. வீட்ல ஆள் இல்லேன்னு கண்டபடி தண்ணியடிச்சிட்டு சுத்தாத.. !!''
'' ஏய்.. யார்ரீ சொன்னா உனக்கு.. ??'' எரிச்சலை காட்டினேன்.
'' ஹா.. நீ பண்றது தெரியாது பாரு எங்களுக்கு.. ?? இதை வேற ஒரு ஆளு வந்து சொல்லனுமாக்கும்.. ??'' என முறைத்தபடி சொன்னாள். பின் ''சரி.. சரி.. நீ என்னமோ பண்ணு..! கேட்டா இனி இல்லாத நாயம் பேசுவ..? நான் சொல்லி நீ எதை கேட்றுக்க.. ??''
'' ஏய்.. இது ஆஸ்பத்ரி. உன் வாய மூடிட்டு இருக்கியா.. ??'' எரிச்சலை அடக்கிக் கொண்டு சொன்னேன்.
என் அம்மா இடை புகுந்து எங்களை சமாதானம் செய்தாள். பின் மெலிதான குரலில் சொன்னாள்.
'' இந்த புள்ள புருஷன் வந்துட்டு போனாப்ல.. ! அவுருதான் சாப்பாடு கொண்டு வந்து குடுத்துட்டு போனாரு.. !!''
'' ம்ம்...!!''
என் தங்கை,
''சொல்லிட்டேன் அவருகிட்ட. இன்னும் ரெண்டு நாள்ள தரேனு சொல்லியிருக்கேனு. என்னை கால வாரி விட்றாத..'' என்றாள்.
அவளை முறைத்தேன்.
'' என்ன மொறைக்கிறே..??'' என்றாள், ''மொறைச்சா..? எம் புருஷனுக்கு என்ன விதியா.? நான் அங்க போய் நல்லா வாழனும்னா.. பணத்தை ரெடி பண்ணி குடுக்கற வழிய பாரு. இல்லேன்னா உங்கம்மா ஆபரேசனுக்கு கூட பணம் பெரட்ட முடியலியான்னு என்னைத்தான் கேவலமா பேசுவாங்க.. !!'' என அவள் சொன்னபோது.. அவள் வாழ்வின் மீதான அவளது அக்கறை என்னை செருப்பால் அடிப்பது போலிருந்தது.. !!