ஞாயிறு, 28 மார்ச், 2021

பிழையான வரம் -3

 குந்தியின் முன் தோன்றியது அழகிய இளைஞன். பரந்தகன்ற பொன்னிற மேனி. அவனை இந்த கணம் காணும் எவரும் அவன் அழகில் விழிகளை இழந்துதான் ஆகவேண்டும்.. !!

"யா.. யார்?" திகைப்புடன் கேட்டாள் குந்தி.

"என்னை உன் வரத்தால் அழைத்தாய் குந்தி"

"நான் அழைத்தது.. சூரியனை.." 'என் குழந்தையை' என்று அவளுள் ஒரு வரியோடியது.

"ஆம். நானே அந்த சூரியன்"

சில கணங்கள் விழி விரியப் பார்த்திருந்தாள். அவன் முகம், அந்த உடலின் பொன்னொளி அவளை விழி மயங்க வைத்தது. அவனை விழிகள் விரித்து முழுவதுமாக உள்வாங்கிய பின்னரே அவள் முகத்தை நாணம் வந்தடைந்தது. 'ஆண் மகன். ஆம். அழகிய ஆண் மகன்'

"என்னை மந்திரம் சொல்லி அழைத்தாய் குந்தி" என்றான். "நீ விரும்பும் வண்ணம் குழந்தையைப் பெற வேண்டும் என்பதற்காக துர்வாச முனிவர் உனக்களித்த வரம். அந்த அறிய தவத்தை வைத்து நீ என்னை ஏவல் செய்ய அழைத்திருக்கிறாய். அதை ஏற்று நான் உனக்கு ஒரு குழந்தையை அளிக்கவே வந்திருக்கிறேன்"

அவள் மகிழ்ந்திருந்தாள். அவள் உள்ளம் உவகையில் விம்மிக் கொண்டிருந்தது. 

"ஆம் கர்ணா.." என்றாள்.

"கர்ணா?"

"என்னில் பிறந்து விட்ட சூரியக் குழந்தைக்கு நான் இட்ட பெயர் கர்ணன்" எனச் சொல்லிச் சிரித்தாள்.

சூரியன் குளிர்ந்து விட்டான். அவனின் பொன் வதனத்தில் புன்னகை விரிந்தது. "அக்குழந்தையை நீ உன் கரு நிறைத்து பெற்றாயா குந்தி?"

விளையாட்டான அவன் கேள்வியில் அவள் திகைத்து விட்டாள் "இல்லை.. இல்லை.. அதை நான்.... சூரிய தேவா.. தங்களையே நான் என் மகனாய்.. கர்ணன் என்று.." திணறினாள்.

"நான் உன் மகன் அல்ல குந்தி. ஆனால் நீ கேட்கும் வரத்தை நான் அளிப்பேன்"

சற்று தடுமாறி மீண்டாள் குந்தி. "ஆம். அறிவேன். தாங்கள் என் மகனாக வேண்டும். கர்ணனாக.. அதுதான் நான் கேட்கும் வரம்"

"நானே உன் மகனாக முடியாது குந்தி. ஆனால் என் அத்தனை குணங்களுடனும் ஆற்றலுடனும் என்னைப் போலவே உனக்கு நான் ஒரு மகனை அளிக்க முடியும்"

"ஆம். நான் கொஞ்சி விளையாடிய குழந்தையே எனக்கு கர்ணானாய் வேண்டும்"

"அதை நான் உனக்கு இப்போதே அளிக்கிறேன் குந்தி. ஆனால் நீ மானிடப் பெண். அதை உன் வயிற்றில் ஒரு கருவாகவே அளிக்க முடியும்"

"ஆம்.. என் கர்ணனை நான் என் வயிற்றிலிருதே பிறப்பிக்க வேண்டும். அவனை என் கருவறை நிறைத்தே இம்மண்ணில் ஈன்றெடுக்க வேண்டும். அவனை பத்துத் திங்கள் என் வயிற்றில் சுமந்து ஒரு அன்னையென நான் ஈன்றெடுத்து முலயூட்டி அவன் வயிற்றை நிறைக்க வேண்டும்"

"எனில் நான் உன்னைக் கூடி உன் கர்பப் பையில் அவனை கருவாய் விதைக்க வேண்டும்"

"அவ்வாறே ஆகுக" என்று மனமுவந்து சொன்னாள் குந்தி.. !!

 அவன் காமத்தில் கனிந்து, அழகின் மொத்த உருவமாய் நின்றிருந்த குந்தியின் கரம் பற்றினான். அவள் அவனின் உடல் வெம்மையை உணர்ந்தாள். ஆனால் அவள் உடலும் அதே வெம்மையில் தகித்திருப்பதையும் உணர்ந்தாள்.. !!

அவளின் அழகிய முகத்தையும் நிமிர்ந்து கூர்ந்த முலைகளையும் விட்டு அவனால் தன் விழிகளை மாற்ற முடியவில்லை என்பதை அவன் முகத்தைப் பார்த்து உணர்ந்தாள். அவள் உடலில் காமம் மிகுந்து பெண்மையின் அழகை பேரழகாக்கியிருந்தது. அவள் அப்பார்வையை உணர்ந்த போது  அவளில் எழுந்த நாணம் காமத்துக்கு அழகு சேர்த்தது.. !!

"பார்வை துளைக்கிறது" என்று தாழ்ந்த குரலில் சொன்னாள் குந்தி.

"காமம் கொண்ட பெண்ணின் அழகை பருகுவதல்லவா ஆண்களின் இயல்பு?" என்றான்.

நாணத்துடன் தன் செவ்விதழ்களை மடித்து வாய்க்குள் குவித்து கன்னங்களில் செம்மை படரச் சிரித்தாள். நதியின் குளிர் காற்றில் அவள் தலைமுடியும் ஆடையும் எழுந்து பரந்தது. அவள் அதை அள்ளிச் சுருட்டிக் கொண்டாள். அவன் பார்வையை தன்மீது அழுத்தமாக உணர்ந்து அவன் கண்களைச் சந்திக்க அஞ்சி நதிநீரைப் பார்த்தாள். அந்த இடம் இரவாகவே இல்லை. பகல்போல பளபளத்தது.. !!

"நதியில் நீராட எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றாள். 

அவள் மீதிருந்த பார்வையை மாற்றி நதியின் தெளிந்த நீரலைகளைப் பார்த்தான். "தெளிந்த நீரில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன"

 இரவில் குளிர்ந்திருக்கும் நதியில் இந்த அழகிய ஆடவனுடன் இணைந்து நீராடினால் எப்படி இருக்கும் என்று அவளில் ஓர் எண்ணம் தோன்றியது. "நீராடலாமா?" தன் மனதில் எழுந்த உவகையில் அந்த கேள்வியை அவள் உதடுகள் உச்சரித்தன. அதன்பின்தான் சட்டென உணர்ந்து திடுக்கிட்டு "தங்களுக்கு நீரை பிடிக்குமா?" எனக் கேட்டாள்.

"ஏன்?"

"தாங்கள் சூரியன். நெருப்பின் வடிவம். இது நீர்... பகை...."

"நான் இப்போது எடுத்திருப்பது மானுட வடிவம். இப்போது எனக்கு நீர் பகையில்லை. உன்னைப் போலவே என்னாலும் நீந்தி விளையாட முடியும்" அவன் அப்படிச் சொன்ன பிறகு அவனை சோதிக்கத் தோன்றியது அவளுக்கு.

"அதை நான் கண்டு மகிழ வேண்டும். தாங்கள் என்னுடன் நீராட வேண்டும்" என்றாள். 

"ஆணை" என்றான். 

"ஆனால் மாற்றுடை இல்லையே?"

"நீராடுவதற்கு மாற்றுடை தேவையில்லை. ஆடைகளை களைந்து விடலாம். நிர்வாணமே நீராடத் தகுந்த உடை" என்றான்.

வெட்கிச் சிரித்தாள். பின் அவள் அவன் முகத்தைப் பார்க்கக் கூசியதுபோல சற்று தயங்கி, திரும்பி நின்று தன் மேலாடையைக் களைந்தாள். 

அவள் மார்பின், மெல்லிய பொன்னிறத் தோல்பரப்பின் மேல் நீரின் ஒளி மின்னியது. 

அவனைப் பார்க்காது மெல்ல மெல்ல தன் ஆடைகளைக் களைந்தாள். மேலாடைகளைக் களைந்து பளபளக்கும் பெண்மையின் எழில் மின்ன கரையைத் தொடும் நதியலையில் பாதங்களை வைத்து உள்ளாடைகளுடன் நீரில் இறங்கினாள். 

உடலின் மெல்லிய மயிர்கள் கூசிச் சிலிர்த்தன. 

அவனை திரும்பியே பாராது நதியில் மெல்ல மெல்ல நகர்ந்து இடுப்பாளத்தில் நின்றாள். 

மார்க் கச்சை நனைந்து உள்ளே நீர் புகுந்தபோது அவள் மார்க் கண்களை ஊசி முனை தீண்டுவதைப் போலிருந்தது. மீண்டும் மீண்டும் சிலிர்த்து தோள்களைக் குறுக்கிக் குலுக்கியபடி திரும்பி கரையில் நின்றிருப்பவனைப் பார்த்தாள் குந்தி.. !!


என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

சனி, 27 மார்ச், 2021

பிழையான வரம் -2

 அந்த கணத்திலிருந்தே குந்தியின் மனதை ஏக்கம் வந்து தொடத் தொடங்கியது. அந்த ஏக்கம் ஒவ்வொரு கணமும் அதிகரித்து அவளின் நெஞ்சில் இரும்புக் குண்டாய் கனமேற்றியது. அதன்பின் வந்த ஒவ்வொரு நாழிகையும் அவளை வருத்தமுறச் செய்தன. வருத்தம் அதிகரிக்க அதிகரிக்க அவளின் ஏக்கம் அவளின் மனதை மிகவும் வாட்டத் தொடங்கியது.. !!

மஞ்சத்திலிருந்து எழுந்து சென்று மேற்குச் சாளரத்தருகே நின்றாள். மெல்லிய காற்று வீசியதை உணரும் முன் அவள் கண்கள் மேற்கு நோக்கி ஏங்கின. அவள் நெஞ்சகம் வெடிப்பதை போல பெருமூச்செறிந்தது. தீச்சுடராய் மூச்சுக் காற்று அவள் மூக்கின் மெல்லிய மடலைச் சுட்டது. நொடிக்கு நொடி அவள் உடல் தீத்தனலாய் மாறியதை அவள் உணரத் தவறினாள்.

 அவள் எண்ணமெல்லாம் கதிரவனை கண்டடைந்து அள்ளி அணைப்பதிலேயே இருந்தது. ஆனால் கதிரவன் தன்னருகில் இல்லை என்கிற ஏக்கமும் அவளில் நிலைத்தே இருந்தது. அவள் நெஞ்சு நெடு மூச்சுக்களால் விம்மிக் கொண்டிருக்க அவள் உடலோ தனலாய் மாறிக் கொண்டிருந்தது. 

அவள் கதிரவனையே தன் மகவாக எண்ணிப் பித்தேறிய நிலையில் எதையும் எண்ணாதவளாக தன் குடிலை விட்டு வெளியேறினாள். மலர்வனத்தை அடைந்த அவள் கால்கள் அங்கும் நிலைகொள்ளவில்லை. ஏக்கமும் தவிப்பும் அவள் நெஞ்சில் உறைந்திருக்க அங்கிருந்தும் வெளியேறினாள். சேடிகளோ காவலர்களோ எவரும் அவள் அந்த கௌந்தவனத்தை விட்டு வெளியேறியதை கவனிக்கவே இல்லை.. !!

அவளைச் சுற்றிலும் படர்ந்திருக்கும் அந்தி இருளை அவள் உணரவே இல்லை. ஒளி வடிவப் பாதை ஒன்று அவளுக்கெனவே தோன்றியபோல அவள் முன் நீண்டு அவளை வரவேற்றது. அவள் நேராக பர்ணஸா நதிக்கரைக்கே சென்றாள். 

இரவின் குளிர் காற்று படர்ந்த நதி எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவள் வருகைக்காகவே காத்திருந்ததைப் போல மெல்லிய அலையோசை எழுப்பியபடியிருந்தது. வானில் நிறைந்திருக்கும் விண்மீன்களின் ஒளியில் நதி நீரலைகள் மின்னிக் கொண்டிருந்தது. கரையில் அங்கங்கே சில மின்மினிப் பூச்சிகள் மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தன.. !!

மாலையில் நின்று கதிரவனின் அழகில் மயங்கிய அதே இடத்தில் சென்று நின்று மேற்கில் மறைந்த கதிரவனைத் தேடினாள். கதிரவன் ஒளிந்து விளையாடிய முகில் திரள்கூட இப்போது கலைந்து போயிருந்தது. அவள் தியானம் செய்வது போல மேற்கு நோக்கியே ஏங்கி நின்றாள். அவள் கண்கள் அவளின் சூரியக் குழந்தையைக் காண ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தன.. !!

பர்ணஸா நதிக்கரையில் நெடுநேரம் நின்று கால்கள் தளர்வதை உணர்ந்த பின்னரே அங்கு தான் மட்டும் தனித்து நின்றிருப்பதை அறிந்தாள் குந்தி. ஆயினும் அந்த இடத்தை விட்டு நீங்க அவள் மனம் ஒப்பவில்லை. தன் மனதில் தேங்கிவிட்ட இனிய மைந்தனை எப்படியாவது அடைய வேண்டும் என்கிற தவிப்பில் அவள் நிலைத்திருந்த போதுதான் அவள் நெஞ்சின் தவிப்பை நிறைவு செய்வதுபோல அந்த எண்ணம் உதித்தது.. !!

துர்வாச முனிவர் அவளுக்கு அளித்த வரம் அவளிடம் இருக்கிறது. அவள் அந்த மந்திரத்தை உச்சரித்தால் அவள் வேண்டும் சக்தியுடன் ஒரு குழந்தையைப் பெறலாம் என்பது அந்த வரம். அப்படியெனில் அவள் ஏன் சூரியனையே தன் குழந்தையாய் பெறக் கூடாது.? 

சூரியனே தன் முதல் குழந்தையாய் வர வேண்டும் என்பதையே அவள் உள்ளம் விரும்பியது. இன்னும் பெறாத அந்த சூரியக் குழைந்தையைக் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு முலையூட்டிய உணர்வு அவளை ஒரு தாயாகவே மாற்றியிருந்தது. அந்த தாய்மையை அடையும் பாக்கியம் வரமாக தன் கையிலேயே இருக்கும்போது ஏன் நெஞ்சம் தவித்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும்.. ??


****


தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப் பகுதியின் யாதவர்குலத் தலைவர் சூரசேனருக்கும், லவண குலத்தைச் சேர்ந்த மரீஷைக்கும் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தவள்தான் குந்தி. 

பத்து தமையர்களுக்கும், மூன்று தமக்கைகளுக்கும் இளையவளாய், மூத்தவனுடன் இணைந்தே தாயின் கருவில் வளர்ந்து, கோகுல கிருஷ்ணனின் தந்தையான வசுதேவனுக்குப் பின்னால் சிறிது நேரம் தாமதித்து பொருமையாகப் பிறந்த கடைசிக் குழந்தை அவள். 

இரட்டையர்களில் மூத்தவனான வசுதேவனுடன் ஒன்றாக இணைந்தே பிருதையாய் வளர்ந்து, மார்த்திகாவதியை ஆண்ட குந்திபோஜருக்கு தத்துப் பிள்ளையாய் வந்து குந்தி என்றானவள். கருமை நிற எருமைத்தோல் கொண்ட வேட்டுவக்குடி தாய்க்குப் பிறந்த வெள்ளைத் தோல் பேரழகி.. !!

மார்த்திகாவதியின் அரசர் குந்திபோஜனுக்கு உரிய கௌந்தவனம் என்ற பெயர்கொண்ட மலையடிவாரக் குறுங்காடு பர்ணஸா நதியின் கரையில் இருந்தது. சுற்றிலும் வெட்டப்பட்ட பெரிய அகழியால் உள்ளே வனமிருகங்கள் வரமுடியாதபடி செய்யப்பட்டு தவநிலையாக மாற்றப்பட்டிருந்தது. அந்த தவக் குடிலில் வந்து தங்கிய துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்து, அவரின் அன்புக்கு பாத்திரமானாள் குந்தி. அவளின் பணிவிடைகளில் மகிழ்ந்து அவள் மேல் கொண்ட அன்பால் தன் தவ வலிமையால் அவளின் வருங்காலம் உணர்ந்து, தந்தையெனக் கனிந்த அவரிடமிருந்து அவள் பெற்ற வரம் அவள் விரும்பும் குழந்தையை அளிக்கக் கூடியது.. !!

அவள் முடிவு செய்தாள். சூரியனையே தன் குழந்தையாகப் பெற வேண்டுமென. அங்கேயே கண்களை மூடி அமர்ந்தாள் குந்தி. துர்வாச முனிவரை தியானித்து மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினாள். அவள் உதடுகள் மந்திர உச்சாடனையை முடித்த சில கணங்களில் மூடிய கண்களுக்குள் ஒளி ஊடுருவிப் பாய்வதை உணர்ந்தாள். கண் திறந்தபோது அவள் மந்திரத்தின் சக்தியை கண் முன் கண்டு திடுக்கிட்டாள்.

அந்த நதிக்கரையில் பொன்னிற மேனியுடன் அழகும் ஆண்மையும் நிரம்பிய ஓர் ஆண் மகன் அவள் முன் தோன்றியிருந்தான். அவனைக் கண்டு அவள் விழிகள் கூசின. உடல் அனலால் வாட்டப் படுவதைப் போல சுட்டது. அவனின் பொன்னொளிக் கதிர்களை மறைக்க முகில் திரைகள் ஒருங்கியிருக்கவில்லை. அவள் உடல் விதிர்த்து கை கால்கள் நடுங்கின.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

விரும்பிப் படித்தவை.. !!