ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

மென் மோகம் -8

 ஒரு சனிக்கிழமை இரவு போனில் பேசும்போது ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே பேசிக் கொண்டிருந்தனர். 


அன்று அவர்கள் இருவருமே நட்புடனும் உரிமையுடனும் மிகவும் நெருக்கமாக மனசு விட்டுப் பேசினர். 


கமலி தன் குடும்ப விசயங்கள் பற்றி பல ரகசியங்களைச் சொன்னாள். அவன்  அவளுக்கு மிகவும்  ஆறுதலாகப் பேசினான். 


அது கிட்டத்தட்ட  காதலர்கள் பேசிக் கொள்வதைப் போலத்தான் இருந்தது.. !!


அன்று  இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும்  அவளே அவனுக்கு கால் செய்தாள். 


அவன் லேசான வியப்புடன்  எடுத்துப் பேசினான். 


"என்னது மறுபடி கூப்பிட்டிருக்கீங்க?"


"பேசலாம்னுதான். ஏன் கூப்பிட கூடாதா?" என்று மெல்லிய சிரிப்பொலியுடன் கேட்டாள். 


"சே அப்படி சொல்வனா? தாராளமா கூப்பிடுங்க. ஆமா அவரு வரலையா இன்னும்?"


"இன்னும் வல்ல"


"ஏன். இந்த நேரத்துக்கு  வந்துருவாரில்ல?"


"இன்னிக்கு வரதுக்கு கொஞ்சம் லேட்டாகும்னு சொல்லியிருக்கார்"


"பசங்க தூங்கிட்டாங்களா?"


"ம்ம்.. அவங்க தூங்கி ரொம்ப நேரமாச்சு. நீங்க  என்ன பண்றீங்க?"


"சாப்பிட்டு வந்து படுத்துட்டேன். நீங்க?"


"நானும் படுத்துட்டேன். ஆனா தூக்கம் வரல"


"ஏன் தூக்கம் வரல?"


"அவரு வராம எனக்கு தூக்கமே வராது"


"ஓஓ.. லவ்?"


"ம்ம்.. தூங்கறப்ப எனக்கு அவரு வேணும்"


"அவரு வேணுமா?" என்று அவன் கேட்க அடுத்த கணமே கூசி வெட்கிய குரலில் சிணுங்கிச் சொன்னாள்.


"அய்யூ.. ச்சீ.. அதில்ல.. நான் சொன்னது வந்து.. தூங்கறப்ப அவரு என் பக்கத்துல இருக்கணும்.."


"ஹோ.. பரவால. மொத சொன்னதுக்கு ஏன் இப்படி வெக்கப் படறீங்க? அவரு உங்க ஹஸ்பண்ட்தான? அதுல என்ன இருக்கு?"


"இல்ல.. வாய் தவறி..."


"ஒண்ணும் தப்பில்ல. கணவன் மனைவிக்குள்ள அந்த நெருக்கம் இருக்கணும்"


"அதெல்லாம் இருக்கு.."


"ஸோ.. ஆதர்ஸ தம்பதிகள்.."


"அதுக்காக சண்டை போட்டுக்காமெல்லாம் இல்லை. வீட்ல அவங்கம்மா இருக்கப்ப ரொம்ப கஷ்டம்."


"என்ன கஷ்டம்?"


"நாங்க அதிகமா.. ஒண்ணா இருக்கவே முடியாது"


"யூ மீன்.. செக்ஸ்?"


"ச்சீ இல்ல.. நெருக்கமா  உக்காந்து பேச முடியாதுனு சொன்னேன்"


"ஓஓ.. ஸாரி.  நான் தப்பா கேட்டுட்டேன்.. வெரி ஸாரி"


"பரவால.. பரவால..”


மணி பத்தரை. 


"டைம் பத்தரை ஆகிருச்சு" என்றாள் கமலி.


"ஆமாங்க, அவரு எப்ப வருவாரு?”


"ஏன்? நான் போரடிக்கறேனா?"


"ச்சே.. ச்ச.. உங்ககூட பேசப் பேச நேரம் போறதே தெரியல. நீங்க பத்தரை ஆச்சுனு சொன்னீங்களே.. தூங்கப் போறீங்களோனு கேட்டேன்"


"தூக்கம் வல்லேனுதான உங்களுக்கு மறுபடி கால் பண்ணேன்.? எனக்கும் அப்படித்தான்  இருக்கு. நாம பேசினா நல்லா நேரம் போகுது.”


"எனக்கு நேரம் போறது மட்டுமில்ல. மனசே ரிலாக்ஸாவும் ஆகுது. ஒரு குட் பீல்”


"ஆமா, ஏன் அப்படி?"


"எனக்கு தெரியல. நீங்க சொல்லுங்க?"


"நான் உங்களை கேட்டா நீங்க  என்னையே திருப்பி கேக்கறீங்க"


"நீங்கதான் பக்குவப்பட்ட ஒரு குடும்ப பொண்ணு. நான் இன்னும் வாழ்க்கை அனுபவம் இல்லாதவன். அதனால நான் அரைவேக்காட்டுத் தனமா எதையாவது ஒளரிருவேன்”


''ஆஹா.." சிரித்தாள். “ஆள் பேச்செல்லாம் அப்படி ஒண்ணும் தெரியல”


"உங்க சிரிப்பு  அழகாருக்கு"


"என்னது?"


"உங்க சிரிப்பு கேக்க அழகாருக்குனு சொன்னேன்"


"என் சிரிப்பா?"


"ம்ம்.. ஸ்வீட் வாய்ஸ்.."


"ஹை.. அப்றம்?"


"பொய்யில்லங்க.."


"........."


"அலோ.."


"சொல்லுங்க..? என் வாய்ஸ் மட்டும்தான் ஸ்வீட்டா?"


"எனக்கு தெரிஞ்சது அதுதான். மத்தபடி.. உங்ககிட்ட எதெது ஸ்வீட்னு தெரியல"


"அலோ.." என்றாள் பின் "நானே ஸ்வீட்தான் தெரியுமா?"


"நைஸ். உங்களை எறும்பு  மொய்க்குதா..?"


"ச்சீ.."


"அப்பறம்.. அன்னிக்கு பாத்தப்ப.. அழகாவும் இருந்தீங்க.."


"என்னிக்கு பாத்தப்ப?"


"அதான், மொத தடவை பாத்துட்டமே உங்க ஆபீஸ்ல அப்ப. லேசா மழைல நனைஞ்சுட்டு.. அதுக்கப்பறம் இன்னவரை நேர்ல பாக்கல"


"ம்ம்.."


"பாக்க ஆசை இருக்கு. ஆனா..."


"ஆனா...?"


"எப்படி.. என்னன்னுதான்..."


"என்னை பாக்கணுமா?"


"ம்ம்.."


"எதுக்கு? "


"என் பிரெண்டு நீங்க"


"பிரெண்டுதானே?"


"டெய்லி பேசிக்கறோம்.."


"பேசிகிட்டா?"


"நேர்ல பாக்க ஆசை வராதா?"


"ஒரு நிமிசம்"


"என்னங்க?"


"லைன்லயே இருங்க வரேன்"


"ஏங்க. அவரு வந்துட்டாரா?"


"இல்ல.. இருங்க வரேன்" 


அவன் காத்திருந்தான். எங்கே போனாள்? ஏன் போனாள் என்கிற குழப்பம் எழுந்தது.!


சில நிமிடங்கள் ஆனது. அதற்குள் அவனுள் ஒரு தவிப்பு. ஏதேதோ சிந்தனைகள் எழுந்தடங்கின.


அவளுடன் போனில் பேசியதை மீண்டும் நினைவிலோட்டினான். தவறாக ஏதாவது பேசிவிட்டேனா என்று குழம்பினான். 


அது அவனைப் பொறுமையில்லாமலாக்கியது.


 மீண்டும் வந்தாள் கமலி.


"அலோ நிரு"


"எங்க போனீங்க கமலி?"


"சும்மா.. என்ன பேசிட்டிருந்தோம்?"


"நேர்ல பாக்கறதைப் பத்தி.."


"ம்ம்.. ஆமா.."


"பாக்கலாமா?"


"பா... க்க்க்கலாம்ம்ம்ம்" என்று  இழுத்தாள். 


"ஏங்க..?"


"ஒண்ணு கேப்பேன். ஓபனா சொல்லுவீங்களா?"


"கேளுங்க.."


"நம்ம நட்பு நேர்ல பாத்துதான் தொடரணுமா?”


“ஏங்க?”


“நாம ஏன் இப்படி போன்லயே பேசிட்டு…"


"அப்படிங்கறீங்களா?"


"ஆமா.. நேர்ல ஒரு ஆணும் பெண்ணும் மீட் பண்ணி பேசி பழகறதுல நெறைய பிரச்சினைகள் இருக்கு.. ஸோ.."


"உண்மைதான்"


"கோபமா?"


"இல்ல கமலி. நீங்க சொல்றதுதான் சரி.."


"நான் சொல்றது புரியுதில்ல?"


"நல்லாவே புரியுது.."


"குட் எனக்கு உங்ககூட இப்படி பேசறதுதான் புடிச்சிருக்கு. நேர்ல வேணாம். நம்ம நட்பு நட்பாவே இருக்கணும்னு விரும்பறேன்”


“நேர்ல மீட் பண்ணா நட்பு நட்பா இருக்காதா கமலி?”


“நான் அப்படி சொல்லல. அதனால பல பிரச்சினைகள் வரும். அது பேமிலிக்கு நல்லதில்ல”


“சரிங்க”


மணி இரவு பதினொன்று.. !!


"அவரு இன்னும் வரலப்பா" கமலி மிகவும் மென்மையான குரலில் சொன்னாள். அதில் உரிமையும் நெருக்கமும் தெரிந்தது.


"எப்ப வரேனு சொன்னாரு?"


"லேட்டாகும்னு சொன்னாரு.. ஆனா டைம் சொல்லல?"


"கால் பண்ணி கேளுங்க"


"ம்ம்.. ஒரு டூ மினிட்ஸ் பேசிக்கட்டுமா?"


"எவ்ளோ நேரம்னாலும் பேசுங்க, உங்க ஹஸ்பெண்டாச்சே"


சிரிதது, "வெய்ட்" என்று காலை கட் பண்ணி விட்டாள்.. !!



5 கருத்துகள்:

ponnis சொன்னது…

Excellent

நிருதி.. !! சொன்னது…

நன்றி

பெயரில்லா சொன்னது…

ஏற்கனவே படித்தது தான். ஆனால் என்ன முழு கதையையும் படிக்க முடியுமா இங்கு?

நிருதி.. !! சொன்னது…

அதற்கு வாய்ப்பு குறைவு

பெயரில்லா சொன்னது…

👍

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!