ஞாயிறு, 17 மார்ச், 2024

சிபு -5

 முதலில் அவன்தான் வந்தான். திரும்பி வந்தபோது அவன் கூடாரம் சற்று அமிழ்ந்திருந்தது. விரைப்பான புடைப்பில்லை. ஆற்றுப்படுத்திவிட்ட மென்புடைப்பு. 


அஸ்மா சிறிது கூசிய நடையுடன் வந்தாள்.


 அவள் முகம், சிவந்து தலை கலைந்திருந்தது. ஈர உடையில் பச்சைப் புற்களும் மண்ணுமாய் இருந்தது. கை கால்களில் எல்லாம் மணல் திட்டுகள். பின்கழுத்து, முதுகெல்லாம் மணல் அப்பியிருந்தது.  ஆனால் மிகுந்த வெட்கத்திலிருந்தாள். 


என்னைப் பட்டும் படாமல் பார்த்தாள்.


 வெகு சில நொடிகளில் தொட்டுக்கொண்ட அந்தக் கண்களில் கள்ளத்தனம் தெரிந்தது. 


அவள் மீண்டும் சென்று நீரில் இறங்கினாள். உட்கார்ந்து பின் படுத்து அப்படியே நீரில் அமிழ்ந்தாள்.


 அவள் துணைக்கென மீண்டும் அவன் சென்றான். பேசிக்கொள்ள இயலாத சூழலை நீர் விளையாட்டில் கடந்தனர். சிறிது நீந்தினர்.


 அவள் உடைகளைக் கழுவினாள். அவனும் அங்கங்கே கழுவிவிட்டான். 


அவள் தலையைத் தவிர தன் உடலின் மொத்த பாகத்தையும் உடையையும் இயன்ற அளவு கழுவித் துடைத்து கன்றிச் சிவந்த முகத்துடன் மேலே வந்தாள். 


"இங்க யாராவது வருவாங்களா?" என்று என்னைப் பார்த்து கூசியபடி கேட்டாள். 


"ஏன்?" என்றேன். 


"இல்ல.. ட்ரஸ் ரொம்ப ஈரம். கொஞ்சம் காயணும்"


"ஆனா வேற ட்ரஸ் இல்லையே?"


"உங்க டவல் தருவீங்களா?"


உடனே கழுத்தில் சுற்றியிருந்ததை எடுத்து நீட்டினேன். 


அவளிடம் அதைக் கொடுத்தபின்தான் நீரில் அலசிக் கொடுத்திருக்கலாம் எனத் தோன்றியது. 


"குடுங்க அலாசி தரேன்" என்றேன். 


"பரவால" என்று நீரில் நனைந்த உடையின் சரக் சரக் உரசலுடன் நடந்து மீண்டும் நாணற்புதரின் பின்னால் மறைந்தாள். 


அவன் செல்லவில்லை.


 தன் ஜட்டியில் இருந்த தண்ணீரைச் சுருட்டி பிழிந்தபடி  என்னைப் பார்த்துச் சிரித்தான். 


"செம நண்பா" என்றான்.


"எஞ்ஜாய்"


"முடிஞ்சுது"


"என்ன?"


கண்ணடித்தான் "செம்ம பீசு. சும்மா ஜிவ்வுனு இருக்கா. சான்ஸே இல்ல" 


அவள் சில நிமிடங்கள் கழித்து மறைவிலிருந்து வந்தாள். 


நிறைந்த வெட்கத்தில் அவள் முகமும் உடலும் கூசியிருந்தது. என் துண்டு மட்டும்தான் அவள் உடலில்.


 நீர் சொட்டும் அவள் உடைகள் அனைத்தையும் கையில் சுருட்டிப் பிடித்துத் தொங்கவிட்டு, தன் முன்னுடலை மறைத்தபடி எடுத்து வந்தாள்.


 ரோட்டிலிருந்து ஆற்றுக்கு இறங்கும் வழிப் பாதையைப் பார்த்து விட்டு மெல்ல நடந்து போய் ஆற்றில் இறங்கி குந்தி உட்கார்ந்து தன் உடைகளை அலாசி எடுத்து பிழிந்து தோளிலிட்டபடி மேலே வந்தாள். 


அந்த நேரத்தில் திகைத்திருந்தது நான் மட்டுமல்ல.


 பாஷா திகைப்புடன் மெல்லிய பதட்டத்தையும் அடைந்ததைப் போலிருந்தது. ஆனால் அவள் அதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.


 தன் ஈர உடைகளை உதறி அருகில் இருந்த சிறிய பாறைமீது விரித்துக் காயப் போட்டாள். அவளின் ஜட்டி பிரா சிம்மீஸ் எல்லாம்கூட அதிலிருந்தது. 


என் துண்டும் அவ்வளவு பெரியதில்லை. அது அவளின் நெஞ்சின் விளிம்பிலிருந்து மேல் தொடைவரைதான் மறைத்தது. 


அந்தத் துண்டால் முடிந்தது அவ்வளவுதான். 


அப்படிப் பார்க்க அவள் ஒரு பிட்டு படக் கதாநாயகி போலிருந்ததை என் கண்கள் கவனிக்கத் தவறவில்லை. 


அவள் எங்களைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தபோதுதான் நான் சொன்னேன். 


"உன்னோட பனியனை குடு பாஷா போட்டுக்கட்டும்"


உண்மையில் அவனுக்கு அது ஒரு அதிர்ச்சியான காட்சியாகவே இருந்தது.


 அவன் வாய், திறந்த நிலைக்குச் சென்றிருந்தது. அவன் சிறிது பதட்டத்துடனே தன் டீ சர்ட்டையும் ஜீன்ஸையும் எடுத்து கொடுத்தான். 


"இத போட்டுக்க ப்ளீஸ்"


அவள் மறுக்கவில்லை. ஆனால் இந்த யோசனை ஏன் முன்பே வரவில்லை என்பதைப்போலப் பார்த்தாள்.


 உணர்ச்சிவசப் பட்டு காதலின் உச்சத்தில் காமத்தையும் சுகித்துவிட்ட அவர்களுக்கு யோசனை வராமல் போனதில் வியப்பொன்றுமில்லை.


 முதல் அனுபவம். அதுவும் ஒரு பரிச்சயமற்ற சூழலில். 


இயற்கை சூழ்ந்த திறந்தவெளி உறவு. உடலும் மனமும் அதிலிருந்து மீளாத நிலையில் இது தோன்றாதது சாதாரணம்தான். 


அவள் மீண்டும் சென்று மறைந்து, திரும்பி வந்தபோது அவனின் ஜீன்ஸையும் பனியனையும் அணிந்திருந்தாள். தொளதொளத்த பனியனில் உள்ளாடையில்லாத மார்புருளைகளின் முனைகள் கண்களை உறுத்தவே செய்தன. 


அதன்பின் சுருட்டிக் கட்டிய கூந்தலைக்கூட அவிழ்த்துப் பிரித்து முதுகில் பரத்தி விட்டாள் அஸ்மா.. !!


தன் உடைகள் அணியத் தகுந்த அளவுக்கு காய்ந்தபின் எடுத்துச் சென்று அணிந்து அவன் உடைகளைக் கொண்டு வந்து கொடுத்தாள்.


 அவன் வாங்கிப் போட்டுக் கொண்டபின் ஆற்றிலிருந்து கிளம்பினோம். 


திரும்பி வரும்போது அஸ்மா மிகவும் களைத்திருந்தாள். அவள் உடலும் முகமும் மிகுந்த சோர்வை வெளிக்காட்டியது. 


அவன் கை பிடித்து தொங்கியபடி நடந்தாலும் பல இடங்களில் உட்கார்ந்து ஓய்வெடுத்தாள். 


ஒரு வழியாக என் வீட்டுக்கு வந்து உடை மாற்றி சிறிது படுத்து ஓய்வெடுத்த பின்பே இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.. !!


அதன்பின் மீண்டும் சுமார் நான்கு வருடங்களுக்குப் பின்னர், தனிப்பட்ட காரணத்துக்காக சேலம் சென்றபோது நான் ஏதேச்சையாக அஸ்மாவைச் சந்தித்தேன்.


 தன் தாயுடன் பொருட்கள் வாங்க வந்திருந்தாள்.


 அவள் அம்மாவிடம் ஓர் ஆண் குழந்தை இருந்தது.


 என்னைப் பார்த்த சில நொடிகளில் அடையாளம் கண்டு கொண்டாள். 


நலன் விசாரித்தாள். நானும். 


பின்னர் தன் குழந்தையைக் கையில் வாங்கிச் சொன்னாள். 


"என் பையன். ரெண்டு வயசாகுது"


"பேரு?" எனக் கேட்டுவிட்டு 'பாஷா' என்று எதிர் பார்த்தேன்.


"நத்தீஃப்" என்றாள். 


தன் வீடு அருகில்தான் என்று என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தாள்.


 வீட்டுக்குள் ஒரு குட்டி நாய் காலடியிலேயே சுற்றிச் சுற்றி வந்தது. அதுவும் என்னுடன் பாரபட்சமின்றி ஒட்டிக் கொண்டது. விசிலடித்து அதை தடவிக் கொடுத்தேன்.


 நான் அவளின் இனிமையான உபசரிப்புக்குப் பின் கிளம்பி வரும்போது அந்த நாய்க்குட்டி என்னுடனேயே காம்பவுண்டு கேட்டைத் தாண்டி ஓடி வந்தது. 


நான் நின்று "போ" எனச் சொன்னபோது கையில் குழந்தையுடன் நின்று அதை அழைத்தாள் அஸ்மா.


"சிபு.. கம் ஹியர்.. !!"





- சுபம்.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

விரும்பிப் படித்தவை.. !!