திங்கள், 15 ஜனவரி, 2024

பட்டு ரோஜா -5

 'பூத்' வெறுமையாகக் காணப்பட்டது. ஜெராக்ஸ் மிஷின் சத்தம் உள்ளிருந்து  கேட்டது.


 உள்ளறையைப் பார்த்துக் குரல் கொடுத்தான் நந்தா.


''கயல்..''


கயல்விழி எட்டிப் பார்த்தாள். பளீர் புன்னகை.


''ஹாய்.. குட்மார்னிங்..''


''குட் மார்னிங்..! என்ன பண்றிங்க.. உள்ள..?''


''ஜேராக்ஸ்.!''


''யாருமே இல்ல..?''


'' இப்ப வருவாங்க..! குடுத்துட்டு போயிருக்காங்க.. காபி எடுத்து வெக்கச் சொல்லி..! ஒன்மினிட்.. இதோ வந்துட்டேன்.!'' புன்னகையுடன் உள்ளே மறைந்தாள்.


நந்தா ரோட்டைப் பார்த்து நின்றான். 


ஜெராக்ஸ் பிரதிகளை அடுக்கிக் கொண்டே வந்தாள் கயல்விழி.

''டிபன் சாப்பிட்டாச்சா.?''


''ஓ.. நீங்க? ''


''ம்..ம்ம்..!'' புன்னகைத்தாள்.


''சூப்பர்..''


''என்ன.. ?''


''இதழழகியோட புன்னகை..''


''வழியாதிங்க..''


''அய்யோ.. கொன்னுட்டிங்க.. நைட்டெல்லாம் எனக்கு தூக்கமே இல்ல.! பயங்கர ஃபீவர்..!''


''ஏன்? ''


'' உங்கள நெனச்சிட்டு.. எப்படி தூங்கறது..?''


''ஹேய்.. என்னப்பா.. காலைலயே வந்து.. இப்படி வழியிறீங்க..?"


''என் பீலிங்ஸ் கயல்..! பீலிங்ஸ்க்கெல்லாம்.. காலைல.. நைட்னு தெரியுமா..?''


''ஹா.. கொல்றீங்கப்பா..'' சிரித்தாள்.


அவள் சிரிப்பின் அழகில் லயித்தான்.

''இதுக்கு மேல உண்மையச் சொல்லாம இருக்க முடியாது கயல்.."


"சொல்லிருங்க அப்ப.."


"சின்சியராவே நான்.. உங்கள லவ் பண்றேன் கயல்..''


"பண்ணிக்கோங்க.. இட்ஸ் நாட் டூ பேட்.."


"ஆனா.. அது வெறும் லவ் மட்டும் இல்லை.."


"பின்ன?"


"நாம அடிக்கடி மீட் பண்ணனும்.. எங்காவது வெளிய போகணும்.."


''ஹா..  ஏன் இப்படி..?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.


''நீங்க என்னை அப்படி ஆக்கிட்டிங்க கயல்..''


'' உங்களுக்கு ஆல்ரெடி ஒரு கேர்ள் பிரெண்டு இருக்கா இல்ல..?''


''இருக்கா இல்ல.! இருந்தா இல்ல..? எக்ஸ்"


"ஓகே.. எக்ஸ்.. ஸோ இப்ப இங்க ஒருத்தி வேணுமாக்கும்.?''


''இது.. அப்படி இல்ல கயல். உங்க அழகு.. என்னை பைத்தியமாக்கிருச்சு..! எவ்ரி செகண்ட்.. உங்க பீல் என்னை வாட்டுது..! பாருங்க.. இப்பக் கூட.. பீவர் வந்த மாதிரிதான் இருக்கேன்..'' என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஜெராக்ஸ் பிரதிக்கு ஆள் வந்தது.


எடுத்து வைத்திருந்த ஜெராக்ஸ்களை அவள் கொடுத்து காசு வாங்கினாள். அவள் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோதே நந்தாவுக்கும் பஸ் வந்தது.


அவளுக்கு ''பை '' சொல்லி ஓடிப்போய் ஏறிக் கொண்டான்..!!



மாலை..!!


ஜன்னல் ஓரமாக நின்று கொண்டிருந்தான் நந்தா.


'' என்ன பன்றீங்க..?'' என்று அவனுக்குப் பின்னால் குரல் கேட்டது.


திரும்பிப் பார்த்தான். 


கமலி. அவள் கையில் இன்றும் புத்தகம். முகத்தில் புன்னகை. லேசாக முடி கலைந்திருந்தது. லெக்கின்ஸ்ம்.. காட்டன் டாப்ஸுமாக இருந்தாள். மேலே துப்பட்டா இருந்தது. 


''ஹாய்..!!'' என்றான்.


''ஹாய்..!!'' சிரித்தாள் ''என்ன பாக்கறீங்க..?''


'' ஒன்னுல்ல..! காலேஜ் விட்டு வந்தாச்சா..?''


''ம்.. ம்ம்..!!''


''உள்ள வா...''


''பரவால்ல...'' என்றுவிட்டு சில நொடிகள் தாமதித்து மெதுவாகப் பூனை நடை வைத்து உள்ளே வந்தாள். அவள் உதட்டில் குறுநகை தவழ்ந்தது.


''படிக்கனுமா..?''


''ம்..ம்ம்..!'' டிவியைப் பார்த்தாள்.

அதில் ஓடிய பாடலில் அவளுக்கு விருப்பமில்லை.


''என்ன பாட்டு கேக்கறீங்க..'' என்றுவிட்டு அவளே கட்டில் மீது கிடந்த ரிமோட்டை எடுத்தாள். டிவிக்கு நேராக நீட்டி சேனல்களை மாற்றினாள்.


''உக்காரு..'' என்றான்.


''பரவால்ல..'' சுவற்றில் சாய்ந்து நின்றாள்.


அவள் சேனல்களை மாற்றிக்கொண்டே இருந்தாள். அவள் விரும்பிய பாடல்கள் அவளுக்கு கிடைக்கவில்லை.


 அவளது இளமை பொங்கும் அழகின் வடிவையும் முகம் மாறும் அழகையும்  கை கட்டி நின்று ரசித்தான் நந்தா.


'' என்ன பாக்கறீங்க.?'' இதழோரப் புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்.


''செம்மையா இருக்க.. நீ..''


சட்டென அவள் முகத்தில் ஒரு வெட்கம் தோன்றியது.

''போங்க..''


''ட்ரஸ்.. புதுசா..?'' அது பழையது என்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் அவளுடன் பேச இப்படி ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டியிருந்தது.


''இல்லயே.. பழசுதான்.! ஏன்..?''


''இந்த ஃபிட்டான.. டைட் ட்ரஸ்ல.. உன்ன பாக்க.. எனக்கு ரெண்டு கண்ணு பத்தாது போலருக்கு..! செக்ஸி ட்ரஸ்..!!''


''ஹை..'' அவளது வெட்கப் புன்னகை இன்னும் அதிகரித்தது.


''உன் கண்ணு.. அத விட.. உன்ன பாத்த மொத நாளே.. நான் விழுந்துட்டேன் தெரியுமா?''


''எங்க..?''


''உன்னோட.. இந்த.. அழகான.. கவர்ச்சியான.. ஐஸ்ல..''


'' ஐ..!!'' என வாயை லேசாகப் பிளந்து.. நுனி நாக்கை வெளியே நீட்டி.. அழகு காட்டினாள்.

''காமெடி பண்ணாதிங்க.. ஓகேவா..?''


மெதுவாக அவள் பக்கத்தில் நகர்ந்தான்.

"ஒன்னு சொல்லவா?"


"ம்ம்?"


''நான்னு இல்ல.. யாராருந்தாலும் உன்ன பாத்தா.. உன் கண்கள்ள விழுந்துருவாங்க.! அவ்ளோ.. செக்ஸி.. உன் ஐஸ்..!!'' சொல்லிக் கொண்டே அவளை நெருங்கிப் போய் அவளது கையைப் பிடித்தான்.


''இதுவரை அப்படி யாரும் விழலை.." என்று அழகாய் வெட்கப் பட்டாள். கையை மெதுவாக இழுத்தாள்.


அவள் கையை சற்றே அழுத்திப் பிடித்தான்.


"சரி.. நான் விழுந்துட்டேன்னு வெச்சுக்கோ.."


அவனைப் பார்த்தாள். கண்ணாடியைக் கழற்றி அவள் கண்களைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் கண்ணாடி இல்லாவிட்டால் அவளுக்கு பார்வை தெளிவாகாதோ என்று குழப்பமாக இருந்தது.


''யூ ஆர்.. ச்சோ.. ஸ்வீட் கேர்ள்.. கமலி..''


அவள் தடுமாறத் தொடங்கி விட்டாள். அவளது மார்பில் படபடப்புக் கூடி விட்டது. அவள் கண்களில் தெரிந்த.. அந்தக் காதல்....


அவள் கையை வருடினான். மெல்ல நகர்த்தினான். அவளின் மெல்லிய  விரல்களைப் பிரித்து.. அவள் விரல்களுடன்.. தனது விரல்களை இணைத்துப்  பின்னினான்.


அவளுக்குள் லேசான படபடப்பு. ஆனல் அவள் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.


'இவள் என்னைக் காதலிக்கிறாள்.. என் காதலுக்காக காத்திருக்கிறாள். இவள் சொல்வது போல இதுவரை எந்த ஆண்பிள்ளையும் இவளைக் காதலிக்கவில்லையோ?'


''காமலி..! நான்.. ஒன்னு.. சொல்லனும்..!''  அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.


''எ.. என்ன..?'' அவள் குரல் லேசாக நடுங்கியது.


''ஐ லவ்.... யூ...''


அவளிடமிருந்து பதில் இல்லை. அவள் தொண்டை  ஆடம்ஸ் ஒரு முறை ஏறி.. இறங்கியது. அவள் விழிகள் அவன் முகத்தில் ஆழமாகப் பதிந்து நின்றன.


அவனுக்கு சிறிது வியப்பாகவும் இருந்தது. இந்த தொடுகை.. இந்த வார்த்தைகளுக்கே இப்படி மயங்கிவிட்டாளே.. உருக உருகப் பேசினால் இன்னும் என்னதான் ஆவாள்?


 அவளை மிகக் கிட்டத்தில் நெருங்கினான். அவனது மூச்சுக் காற்று அவள் கன்னத்தில் உரச, அவள் மேல் லேசாக உராய்ந்தான்.


''நான்.. உன்ன.. ரொம்ப.. ரொம்ப.. விரும்பறேன்.. கமலி..! ஐ லவ் யூ.. ஸோ மச்..!!''


சட்டென அவள் கண்கள் மூடின. மீண்டும் ஒரு முறை அவள் தொண்டை ஏறி இறங்கியது. அவள் மார்பு வேக வேகமாக எழுந்தடங்கி மூச்சு வாங்கியது. அவள் கை வியர்க்கத் தொடங்கி விட்டது.


கண் மூடி தன் முன் படபடத்து நிற்கும் அந்த பருவக் குயிலின் முன்னழகை முழுதாகப் பார்த்து ரசித்தான். அவனுக்குள் ஆண்மைக் கிளர்ச்சி உண்டானது. 


அவள் கண் மூடி நிற்கும் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி..

'ப்ச்ச்ச் ' என அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான்.


அவள் உடல் சட்டென விறைத்தது. அவன் விரல்களைப் பிணைத்து அதை நெறித்தாள்.


"லவ் யூ லவ் யூ லவ் யூ.. பேபி.." கிசுகிசுத்தபடி அவளின் கன்னத்தில் மீண்டும் முத்தம் கொடுத்தான். 


அவள் அப்படியேதான் நின்றிருந்தாள். தயங்கவோ ஓடிவிடவோ இல்லை. 


அவனுக்குள் முழுமையாக கிளர்ந்து விட்டது. இதுபோல சந்தர்ப்பம் கிடைப்பது மிக அறிது. அவளை அள்ளிக்கொள்ள நினைத்தான். ஆனாலும் மிரட்சியடைய வைக்காமல் அவளிடம் தன் லீலைகளை நிகழ்த்த முடிவு செய்தான்.


அவளும் கண்களைத் திறக்கவில்லை. வேகமாக மூச்சு மட்டும் விட்டுக்கொண்டு ஆடாமல் அசையாமல் நின்றிருந்தாள்.


அவன் பிடித்திருந்த அவளது கையை எடுத்து புறங்கையில் முத்தமிட்டான். அடுத்தது அவளது முழங்கை அருகே முத்தமிட்டான். அடுத்த முத்தம் சட்டென அவள் கழுத்துக்குப் போனது.


கழுத்தில் முத்தமிட்டதும் சட்டெனக் கூசியவளாக சிலிர்த்துக் கொண்டாள். படக்கென கண்களைத் திறந்தாள். உடனே அவனை விட்டுதத் தள்ளிப் போய் சுவரோடு ஒட்டி நின்றாள்.


அவள் கையை அவன் விடவில்லை. அவளும் பிடுங்கிக் கொள்ளவில்லை. சில நொடிகள் தாமதித்து மீண்டும் அவளை நெருங்கிப் போனான். புத்தகக் கை வைத்து அவனை முன்னேற விடாமல் தடுத்தாள்.


"லவ் யூ ஸோ மச் கமலி.."


அவள் வெறுமனே அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அந்தப் பார்வை மிகவும் ஈர்த்தது.


சட்டெனப் பாய்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவள் கண்களை மூடினாள். பின்னந்தலையை சுவற்றுடன் இணைத்துக் கொண்டாள். அவன் விரலை நெறித்தாள். 


தனது நெஞ்சைத் தடுத்த அவள் கையை இன்னொரு கையில் பிடித்து மெதுவாக விலக்கியபடி மீண்டும் அவள் நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்தான்.


அவள் ஆட்சேபிக்கவில்லை. இன்னும் கொடு என்பதைப் போலத்தான் சொக்கிப் போய் நின்றிருந்தாள்.


அவனுக்கே மூச்சு விரைவாகிவிட்டது. உடம்பு சூடாகி லேசாக வியர்க்கத் தொடங்கி விட்டது.


மிக நெருங்கி அவளின் வலக் கன்னத்தில் முத்தமிட்டான். முகத்தை மறுபக்கம் திருப்பினாள். இடக் கன்னத்திலும் முத்தமிட்டான். 


"ஸ்வீட் கேர்ள்.. ரொம்ப அழகா இருக்க.. ரொம்ப மணமா இருக்க.." மெல்லச் சொல்லிக் கொண்டே அவளின் கன்னம், நெற்றி, மோவாய் எல்லாம் முத்தம் கொடுத்தான். 


வேகமாக வந்த அவளின் மூச்சுக் காற்றை முகர்ந்தபடி அவளின் மூக்கு நுனியில் முத்தமிட்டான். அதே வேகத்தில் கீழே இறக்கி, இணைந்து இறுகியிருந்த அவளது தடித்த உதடுகளிலும் அழுத்தமாக முத்தமிட்டான்.


உதட்டில் வாங்கிய முத்தத்தில் சிலிர்த்துப்போய் கண்களைத் திறந்தாள். அவன் முகத்தை கை வைத்துத் தடுத்து பின்னால் தள்ளி விட்டாள். 

 

''ஹேய்.. பேபி.. ஸ்வீட் பேபி.. லவ் யூ ஸோ மச் டார்லிங்"


நன்றாக வியர்த்திருந்தாள். அவளின் வியர்வை மணம் அவன் நாசிக்கு எட்டியது. 


அவன் கைகள் இன்னும் அவளை வேறெங்கும் தொடவில்லை. அவனுக்குத் தெரியும். எல்லை மீறித் தொட்டால் இந்த நொடியே துள்ளிக் கொண்டு ஓடிவிடுவாள். 


'பொறுமை.. பொறுமை..'


அவள் எச்சிலை விழுங்கியபடி விலகப் போனாள். விலக விட்டான். 


விரல்களை விடுவித்துக் கொண்டு கையிலிருந்த புத்தகத்தால் விசிறிக் கொண்டாள். துப்பட்டாவை எடுத்து மூக்குக்குக் கீழேயும் கழுத்திலும் துடைத்துவிட்டு நெற்றியிலும் கன்னத்திலும் துடைததுக் கொண்டாள். வாயைக் குவித்து உப்பென காற்றை ஊதிக் கொண்டாள்.


"உக்கார்றியா?"


"ம்கூம்.."


"தண்ணி?"


"ம்கூம்" மறுத்துத் தலையாட்டிய பின்தான் அவளுக்கே தன் நிலை புரிந்தது.


அவளுக்கு தொண்டை வறண்டிருந்தது. நாக்கு உலர்ந்திருந்தது. கண்டிப்பாக தண்ணீர் தேவை.


அவளே போய் தண்ணீர் எடுத்துக் குடித்தாள். ஆசுவாசமாக மூச்சு விட்டுக் கொண்டாள். 


அவனைப் பார்க்காமல் ஜன்னல் அருகே போய் நின்று வெளியே பார்த்தாள்.. !!


''ஹேய்.. கமலி.. லவ் யூ.. டியர்..!!'' அவள் பக்கத்தில் நெருங்கியவனை சட்டென தடுத்தபடி தள்ளிப் போனாள்.


''ஓகே.. ஓகே..!'' அவள் பக்கத்தில் தொடாமல் நின்றான்.


''ஹைய்யோ.. யாராவது பாத்தா.. ஜன்னல்ல தெரியும்.. அந்தப் பக்கம் போங்க.. ப்ளீஸ்..'' குரல் நடுங்கச் சொன்னாள்.


''ஓகே..! நீ என்ன லவ் பண்றதான.?'' பின்னால் நகர்ந்தான்.


''ம்.. ம்ம்..!!'' அவன் கண்களை ஒரு நொடி பார்த்துவிட்டு.. சட்டென தலை குனிந்தவள் உடனே திரும்பி நின்று.. ஜன்னல் வழியாக வெளியே பார்க்கத் தொடங்கினாள்..!


அந்தக் காதல் என்கிற வார்த்தை, அவள் இதுவரை உணர்ந்திராத ஓர் உணர்ச்சியைக் கொடுத்து,  அவளை படபடக்க வைத்துக் கொண்டிருந்தது.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!