திங்கள், 17 ஜூன், 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -4

 


தன் ஸ்கூட்டியை எடுத்தபோது கமலி படபடத்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளம் பெரும் உவைகையை அடைந்திருந்தது. 


"வாங்க.."


"முன்னால போ.." 


அவளை முன்னால் விட்டுப் பின்தொடர்ந்தான். 


பத்து நிமிட பயணத்துக்குப் பின் மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து சென்ற ஒரு கிளைச் சாலையில் அழைத்துச் சென்றாள் கமலி. 


அது புதிதாக உருவான ஏரியா என்பது பார்த்தவுடனே தெரிந்தது. நிறைய புது வீடுகள் ஆகியிருந்தன.


''இப்ப அவரு இங்க பக்கத்துலதான் வேலை செய்றாரு. பாக்கறீங்களா?" வண்டியை மெதுவாக ஓட்டியபடி திரும்பி அவனைக் கேட்டாள் கமலி.


''எங்க?'' எனக் கேட்டான் நிருதி.


''பாக்கறீங்களா அவரை?'' 


அவன் யோசித்தான். 


'இவ என்கூட செக்ஸ் வெச்சிக்க என்னை கூட்டிட்டு போறா. இந்த நேரத்துல போய் அவ புருஷன  பாக்கறது அவ்வளவு நல்லாவா இருக்கும்? வேண்டாம்'


அவளே சொன்னாள்.


''வாங்க. அஞ்சு நிமிசம்கூட ஆகாது. உங்களை பாத்தாருனா அவரும் ரொம்ப சந்தோசப் படுவாரு"


"இல்ல.. இப்ப அது வேண்டாமே.."


"நீங்க குழப்பமா இருக்கீங்க.. வாங்க.. அவரைப் பாத்திங்கனா.. உங்க குழப்பம் தீந்துரும். அப்பதான் ரிலாக்ஸா இருப்பீங்க.. வாங்க.."


தயங்கி, ''அப்படியா.. சரி'' என்று தலையசைத்தான். 


அவள் மகிழ்ந்தாள். தன் ஸ்கூட்டியை ஒரு சந்துக்குள் திருப்பினாள். 


நிருதி அவளைப் பின் தொடர்ந்தான். 


சில நிமிடங்களில் ஓரம் கட்டி ஒரு சிறிய வீதிக்குள் நுழைந்து, புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த பெரிய கட்டிடத்தின் முன் நிறுத்தினாள்.  


அவனும் அவள் பக்கத்தில் நிறுத்தி அந்த பில்டிங்கைப் பார்த்தான். 


முக்கால்பாக கட்டிட வேலை முடிந்து உள்பக்க வேலை நடந்து கொண்டிருந்தது.


''இங்கயா?'' அவளைப் பார்த்தான்.


''ஆமா'' சிரித்து ''இருங்க வரேன்'' என்று விட்டு ஒரு சிறுமியின் துள்ளலுடன் அவளே இறங்கி நடந்து, வாயில் வழியாக உள்ளே சென்று மறைந்தாள்.


அவள் கணவன் கட்டிட வேலை செய்பவனாக இருக்கலாம் என்று நினைத்தான். 


அவளும் கட்டிட வேலைக்குச் சென்றவள் என்பதால் அந்த தொழில் சம்பந்தப்பட்டவனையே மணந்திருக்கலாம்.. !!


சில நிமிடங்கள் கழித்து வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் சொட்டை விழுந்து முடி நரைத்து, உயரம் குறைவாக உடல் பருத்து தொப்பையுடனிருந்த பெரியவர் ஒருவருடன் வெளியே வந்தாள் கமலி. 


அவளுடன் வந்த அவரைப் பார்த்ததும் திகைத்து நின்றான் நிருதி. 


அருகில் வந்து மலர்ந்த முகத்துடன் கமலி சொன்னாள். 


''இவருதான் என் வீட்டுக்காரரு''


திகைப்பிலிருந்தவனை அந்த வார்த்தை அதிரச் செய்தது.


''நல்லாருக்கீங்களா தம்பி?'' எனக் கேட்ட அந்த மேஸ்தியை அவனுக்கு முன்னமே தெரியும்.


 'இவரா இவள் கணவன்? என்ன கொடுமை இது?' திகைப்பில் விழிகளை விரித்தான்.


''நல்லாருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? ''


''நல்லாருக்கேன் தம்பி. கமலி சொல்லுச்சு உங்களை பத்தி.. ஆனா எனக்கு அது நீங்கதானு அப்ப தெரியல'' வாய் நிறைந்த புன்னகையுடன் சொன்னார்.


''அப்ப அவரை தெரியுமா உங்களுக்கு?'' என்று தன் கணவரைப் பார்த்து வியப்புடன் கண்களை விரித்துக் கேட்டாள் கமலி.


''அவங்க வீட்டை கட்டிக் குடுத்ததே நான்தானே. நல்லா தெரியும். ஆனா இவரு பேருதான் மறந்து போச்சு. அதனாலதான் நீ சொன்னது இவருதான்னு எனக்கு தெரியாமப் போச்சு'' என்றார். 


திகைப்பும் வியப்புமாக அவர்கள் அறிமுகத்துடன் பேசிக்கொண்டனர். கால் மணி நேரம் பேசியபின் அவர் சொன்னார். 


"கமலிக்கு நீங்கன்னா உசுருனு என்கிட்ட பல தடவை சொல்லியிருக்கு தம்பி. அது சின்ன புள்ளைல உங்களைத்தான் உசுரா லவ் பண்ணியிருக்கு. அந்த கதை எல்லாம் என்கிட்ட அடிக்கடி சொல்லும். ஆனா அந்த ஆளு நீங்கதானு எனக்கு தெரியாம போச்சு. சரி இப்பவாவது அது உங்களை மீட் பண்ணுச்சே.. அதுக்கு இப்பவே தலை கால் புரியல. உங்களை நல்லா கவனிக்கறேனு சொல்லுது. நடங்க வீட்டுக்கு போலாம்"


அவருக்கு எல்லாம் தெரியும் என்கிற உண்மையை விடவும் அவரின் பேச்சுதான் அவனை வியப்படைய வைத்தது. 


அவளின் அன்பையும், அவரின் அழைப்பையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. 


"நீங்க முன்னால நடங்க. நான் உள்ள சொல்லிட்டு வரேன். வேலை நடந்துட்டிருக்கு" எனச் சொன்னார்.


"வாங்க.. நாம வீட்டுக்கு போலாம்" என்றாள் கமலி.


அவனும் தலையசைத்தான். 


அவர்கள் வண்டிகளைக் கிளப்ப அவர் மீண்டும் உள்ளே போனார்.. !!


வீதியைத் தாண்டி வெளியே வந்து அவளுக்கு இணையாக வண்டியை ஓட்டியபடி சொன்னான் நிருதி.


"நெஜமா இதை நான் எதிர் பாக்கல கமலி"


சிரித்தாள். "இவரை முன்னாடியே உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியாது"


"இங்க இருக்கப்ப இருந்தே தெரியும. ஆமா.. இவர எப்படி நீ கல்யாணம் பண்ண?''


''வாங்க சொல்றேன்'' என்று சிரித்தாள்.


''இவருக்கு இன்னொரு குடும்பம் இருந்துச்சே?''


''இருக்கு.''


''இவரோட வயசும்...''


''எனக்கு அப்பா மாதிரி..''


"இத நான் கொஞ்சம்கூட எதிரே பாக்கல"


 உள்ளுக்குள் விதியை எண்ணி திகைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.. !!


கமலி சிறிய வீடு என்று சொன்னபோது அதை சாதாரணமாகத்தான் நினைத்தான் நிருதி. 


ஆனால் அதை நேரில் பார்த்த போதுதான் தெரிந்தது. அந்த வீடு அவனை பிரம்மிக்க வைத்தது. 


குட்டியாக இருந்தாலும் மொட்டை மாடியுடன் இருக்கும் ஒரு அழகான வீடு. முன்பக்கம் காம்பவுண்ட் சுவர் கட்டி அதனுள்ளே இரண்டு பக்கத்திலும் ரோஜா செடிகள் வைத்திருந்தாள். 


 அந்த வீட்டைப் பார்த்தவுடனே அது அவள் வீடுதானா என்று ஐயமெழுந்தது. வீட்டின் முன்பாக வலது பக்கத்தில் ஒரு சிறிய மளிகை கடை. கடை இப்போது பூட்டப்பட்டிருந்தது. 


 அவள் வண்டியை நிறுத்தி இறங்கிச் சென்று கேட்டைத் திறந்து மீண்டும் வண்டியை எடுத்து உள்ளே கொண்டு போய் நிறுத்தினாள். 


ஓரமாக நிறுத்தித் திரும்பி கேட்டருகே வந்தாள். இடது கையைத் தூக்கி கேட் மீது வைத்தாள்.


"உள்ள வாங்க. வண்டிய உள்ளயே விட்றுங்க" என்றாள். 


முந்தானை ஒதுங்கி அவளின் இடதுபக்க முலை நன்றாகத் தெரிந்தது. அதன் எழு வீக்கம் அவனைச் சீண்டியெழ வைத்தது. 


முகம் கனியச் சிரித்து அவனை மீண்டும் அழைத்தாள்.


"வாங்க" அந்த அழைப்பின் குழைவில் முற்றான காதல் இருந்ததை உணர்ந்தான். 


தலையசைத்து விட்டு பைக்கை உள்ளே விட்டு நிறுத்தினான். 


கமலி முன்னால் சென்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்து மீண்டும் திரும்பி அவனை உள்ளழைத்தாள்.


"வாங்க.. உள்ள வாங்க.."


லேசான தயக்கத்துக்குப்பின் செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தான். 


வீட்டின் உள்ளமைப்பு மிகவும் அருமையாக இருந்தது. 


சின்ன வீடென்றாலும் நிறைய பணம் செலவழித்திருக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்தது.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!