வியாழன், 6 ஜூன், 2024

கேள்வி - பதில்

 கேள்வி, 


நிரு.. நீங்க காமக்கதைகள் எழுதினாலும், உங்க கதைகள்ள உளவியல் ரீதியா பெண்களை மட்டம் தட்டியும் அறிவைவிட உணர்ச்சியை மிகையாக கொண்டாடுபவர்களாகவும் சித்தரிக்கரிங்களே ஏன்?


பதில்,


சிம்ப்பிள் நண்பா. பெண்களை சாதனைப் பெண்மணிகளாக உயர்த்தியும், கொண்டாடியும் எழுத பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்காங்க. அதிலும் குறிப்பா ஒவ்வொரு பெண் எழுத்தாளரின் கடமையும் அதுவாகத்தான் இருக்கு.!


ஆனால் இங்கே ஓர் ஆணே எழுத்தாளனாகி கதை எழுதினாலும் ஆண்களை ஓர் எல்லைக்கு மேலாக உயர்வாவோ உளவியல் ரீதியாக உயர்த்தி எழுதவோ அவர்கள் தயாராக இல்லை. 


சமூகக் கட்டமைப்புக்கு உட்பட்டே கதை எழுதி அவர்கள் பெயர்பெற வேண்டியிருக்கிறது. அதுவே பத்திரிக்கை தர்மமாகவும் இருக்கிறது. 


குடிக்கும் ஆண்கள் மட்டமானவர்கள், இந்த சமூகத்தில் நடக்கும் அத்தனைக் குற்றங்களுக்கும் காரணம் குடிகார ஆண்களே.. என்பது போன்ற மாயையை உருவாக்கி கதை எழுதுகிறார்கள்.   


அப்படிப்பட்ட எழுத்தாளர்களை குறை சொல்வதோ, குடிக்காத ஆண் உத்தம புத்திரன் அல்ல என்று எழுதவோ நான் ஒருபோதும் தயாராக இல்லை. 


அதிலும் குறிப்பாக நான் எழுத்தாளன் இல்லை. வெறும் கதை சொல்லி.! அதில் பாதிக்கப்பட்ட ஓர் ஆணாக இருந்து என் பக்கத்துக் கோணத்தை கதையாகச் சொல்கிறேன். அவ்வளவுதான்.!


இதில் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் இல்லை. பெரும்பாலும் ஆண் பெண் உளவியல் மட்டுமே உண்டு. ஆனாலும் என்ன.. காமக்கதை என்பதால் ஆண் மேலாகவும் பெண் கீழாகவும் தெரிவார்கள். 


ஆண் மேலிருந்து இயங்குவதால் உயர்ந்தவனும் இல்லை, பெண் கீழிருந்து உள்வாங்குவதால் தாழ்ந்தவளும் இல்லை. 


என் எழுத்து பெரும்பாலும் சமகால ஆண், பெண் இணைவு, அல்லது குடும்ப வாழ்வியலில் இருக்கும் உளவியலை மையப்படுத்தியே இருக்கும். 


இதன் குறை என்னவென்றால் அதை நான் சொல்வது காமக்கதை வழியாக என்பது மட்டும்தான். 


மற்றபடி இதையே ஆன்மிக வழியில் சொன்னால் அது உயர்வாக மதிக்கப்படலாம், அல்லது பேசப்படலாம். ஆனால் அது, என் இயல்புக்கு மாறானதாகவோ, அல்லது கீழ்நிலை மக்களை இன்னும் கீழானவர்களாக எண்ண வைக்கவோ காரணமாக அமைந்து விடலாம். 


அதைச் செய்ய நான் விரும்பவில்லை. அதற்கு என் மன, அறிவும் ஒத்துழைக்கவில்லை.


ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது இந்திய அரசியல் சட்ட மாமேதைகளின் கூற்று. இன்றும் அதுதான் நடைமுறை. 


ஒரு. நிரபராதி தண்டிக்கபடுகிறானோ இல்லையோ, லட்சம் குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 


என் எழுத்தும் இந்த அடிப்படையிலேயே இருக்கும். இது என் பக்க நியாயம் மட்டும்தான். நீங்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயமில்லை.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!