கிரிஜா தளர்வான நடையில் உள்ளே வந்தாள்.
அவள் முந்தானை இப்போது இன்னும் கீழே இறங்கி சரிந்த நிலைக்குப் போயிருந்தது. வலது மார்பு வடிவம் காட்டியது. தாலியும் கொடியும் பிணைந்த நிலையில் கழுத்தில் தொங்கி தனங்களுக்கு மேலாக ஊசலாடியது.
பேனைப் போட்டுவிட்டு கட்டிலை நெருங்கினாள்.
"நீ வரப்ப கடைலயா இருந்தான் அந்தாளு?"
"ஆமா.."
"சோறு திங்க வருவானா?"
"தெரியல.."
கட்டிலில் உட்கார்ந்து, தலையணைகளை அடுக்கி அதன் மேல் சாய்ந்தாள். கீழே தொங்கிய கால்களை எடுத்து கட்டிலில் நீட்டி வைத்தாள்.
"இப்படி பக்கத்துல உக்காந்து தேச்சு விட்டுட்டு போ.. நான் அப்படியே தூங்கிருவேன்"
"ரொம்ப வலிச்சுதுனா ஆஸ்பத்ரி போலாமில்ல?"
"அதெல்லாம் வேண்டாம். நீ தேயி"
மூடியைத் திறந்து ஐயோடெக்ஸை எடுத்தபடி அவளை நெருங்கி உட்கார்ந்தேன்.
அவள் என்னைப் பார்க்கவில்லை. கண்களை மூடிக்கொண்டாள்.
மூக்கில் மூக்குத்தி, காதில் கம்மல், கழுத்தில் தாலி, முந்தானைச் சரிவில் திமிறி எழுந்த அழகுகள், கொஞ்சம் தடித்து விரிந்த உதடுகள்.
உயரமாகத் தலையணை வைத்து கால்களை நீட்டி வைத்திருக்கும் அவளின் தோற்றத்தைப் பார்த்த என்னால் அவளை விகல்பமாகப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
பட்டுப்போன்ற அவள் கன்னத்தைத் தொட்டு மிருதுவாக வருடினேன்.
அடிபட்ட அவளின் கன்னத்துக்கு ஐயோடெக்ஸ் தடவும் போது என்னையும் மீறிய ஒரு மெல்லிய கிளர்ச்சியுணர்வு எழத்தான் செய்தது.
அவளின் அடிவாங்கிய ஆப்பிள் கன்னத்தை.. ஆசையோடும்.. மெலிதான மோகத்தோடும் தடவினேன்.
நான் தேய்த்ததில் அவளுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது போல் தோன்றியது.
என் கையைத் தடுத்துப் பிடித்து,
"போதும்டா.." என்றாள்.
"ஏன் கிரி..?"
"என் கன்னம்.. என்னத்துக்குடா ஆகறது.. இத்தனை நேரம் தேச்சா..?" கிண்டலாக ஒரு புன்னகை சிந்தினாள்.
"ஐயோடெக்ஸ்தானே தேய்க்கறேன்?"
"போதும்.. ரொம்ப வேண்டாம்.."
"சரி.. நான் கிளம்பறேன்"
"போறியா?"
"ஏன் கிரி?"
"எனக்கு மனசே செரியில்லடா.. என்னடா வாழ்க்கை இதுனு இருக்கு. வாழவே புடிக்கல. செத்துட்டாத்தான் நிம்மதிபோல"
"யேய்.. பிரச்சினை இல்லாத குடும்பம் எங்க இருக்கு? மனச விடாத கிரி.."
"ப்ச்.. போடா.." சட்டென கண் கலங்கினாள்.
"சரி நீ தூங்கு.. நான் கடைக்கு போறேன்"
"எங்க தூங்கறது?" முந்தானையால் மூக்கைத் துடைத்து உறிஞ்சிக் கொண்டாள்.
"ஏன்?"
"கண்ணை மூடினா கண்டதெல்லாம்ததான் நாபகம் வருது"
நான் பரிதாபமாக அவளைப் பார்த்தேன்.
“கண்டதுன்னா..?”
பெருமூச்சு விட்டாள்.
"சரி. நீ கதவை சாத்திட்டு போயிரு.. நான் இப்படியே தூங்கறேன்"
"கதவை வந்து தாழ் போட்டுக்க"
"ஏன்டா..?"
"எதுக்கும் ஒரு சேப்டிதான்.."
"என்னை வந்து எவனாவது ரேப் பண்ணிருவான்னு நெனைக்கறியா?"
“சொல்ல முடியாதுல்ல? எதுவும் நடக்கலாம்”
“ஆமா.. அப்படியே என்னைப் பாத்து மயங்கிப் போயித்தான்.. போவான்ல போக்கத்தவன்..”
"உனக்கு என்ன குறை? பாக்க ஆளு நல்லா கும்தலக்கவாதான் இருக்க.."
"இருக்கேன் மயிரு மாதிரி.. அதையம் மீறி வந்து எவனாவது என்னை ரேப் பண்ணி.. அதனாலயாவது எனக்கு குழந்தை ஆச்சுனா அது எனக்கு சந்தோசம்தான்டா.." கரகர குரலில் சொன்னாள்.
"ஏய் லூசு.. என்ன பேசுற நீ..?"
"பின்ன என்ன? ஒரு கொழந்தை இல்லாம எவ்வளவு மானக்கேடா இருக்கு? இப்படி ஒரு வாழ்க்கை வாழவே புடிக்கலடா.. ஒரே வெறுப்பா இருக்கு"
"ஏய்.. என்ன கிரி இது.. மறுபடியும்.."
"சரி.. நீ போ. நான் கதவை சாத்திக்கறேன்" கண்களில் தேங்கிய மெல்லிய நீர்த் தேக்கத்துடன் கண்களை மூடிக் கொண்டாள் கிரிஜா.
“கண்டதையும் நெனச்சு மனசை போட்டு குழப்பிக்காத” எனச் சொல்லிவிட்டு தளர்வான நடையில் வீட்டிலிருந்து கிளம்பினேன்.. !!
ஒரு பக்கம் ஆற்றாமை.. இன்னொரு பக்கம் இயலாமை என்கிற நிலையில் நான் இருப்பதாக எனக்குத் தோன்றியது.. !!
இதில் நான் யார் பக்கம் நிறபது? அல்லது எதற்காகப் பேசுவது? என்று ஒன்றும் புரியவில்லை.. !!
மதிய நேர வெயில் சுள்ளென்றிருந்தது. நடக்கும் போது மூச்சு வாங்கி லேசாக வியர்த்தது.
கீழே வரிசையாகக் கடைகள். டூ வீலர் ஒர்க்ஷாப், ஒரு ஸ்டேஷனரி மார்ட், ஒரு பேக்கரி, சீனுவின் எலக்ட்ரானிக்ஸ் என்று கீழே இருக்க, மேலே கம்ப்யூட்டர் சென்ட்டர், டெய்லர் கடை என்று இருந்தது.
கிரிஜாவின் கணவர் சீனு, கடையில் இருந்தார். போன் பேசிக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும் போனைக் கட் பண்ணிவிட்டுக் கேட்டார்.
"கிரி என்ன பண்றா?"
"படுத்துட்டிருக்கு"
"சாப்பிட செஞ்சாளா?"
"ம்ம்.. போய் சாப்பிட்டு வாங்க"
"இல்ல. வீட்டுக்கு போனா சண்டைதான் போடுவா. நிம்மதியா சாப்பிடக்கூட முடியாது." என்றவர் எழுந்து "ஹோட்டல்ல போய் சாப்பிட்டு வரேன். பாத்துக்க" என்றுவிட்டு கிளம்பிப் போனார்.
ஆயாசமாக இருந்தது. கணவன் மனைவி உறவு என்பது என்ன? அது ஏன் இப்படி இருக்கிறது? தாலி கட்டி ஒன்றாக வாழ்ந்தாலும் விட்டுக் கொடுத்தலோ புரிதலோ இல்லாமலே போய் விடுகிறதே. பிறகெதற்கு இந்த திருமண பந்தம்? அதற்கு என்னதான் அர்த்தம்.. ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக