நேராக பாருக்குப் போய் பியர் வாங்கி உட்கார்ந்தான் நிருதி. பாதி பியர் குடித்தபின் கிருத்திகாவிடமிருந்து போன் வந்தது.
சிறு ஆச்சரியத்துடன் எடுத்தான்.
“ஹலோ?”
“வீட்டுக்கு போயிட்டிங்களா?” அவள் குரல் இறுக்கமாகவே இருந்தது.
“ஏன்ப்பா?”
“எங்கருக்கீங்க? ஒரே சத்தமா இருக்கு?”
“வீட்ல போய் தூங்கணுமில்ல.. அதான் ஒரு பீரு அடிச்சிட்டு போய் நல்லா தூங்கிடலாம்னு”
“பீரா?”
“நல்லா தூக்கம் வரும். ஈவினிங்வரை நல்லா தூங்கலாம்.” இயல்பாகப் பேசினான்.
“ஏன் இப்படி பண்றீங்க? நல்ல ஆளுதானே நீங்க? ” அவள் குரல் சூடானது.
“……” அவன் பேசவில்லை.
“அலோ.. கேக்குதா?”
“கேக்குது. சொல்லு?”
“இன்னிக்கு நீங்க சுத்தமா செரியில்ல”
“அப்படியா?”
“ஏன் அப்படி செஞ்சீங்க..?”
“என்னது?”
“வீட்ல.. என்னை லிப் கிஸ்ஸடிச்சீங்க. அப்றம் இங்க வந்தும் சும்மா சும்மா என்னைவே பாத்துட்டிருந்தீங்க.. இப்ப பார்ல போய் உக்காந்துட்டு…”
“……….”
“சொல்லுங்க? ”
“என்ன சொல்றது?”
“இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? ”
“அதெல்லாம் உனக்கு புரியாது விடு”
“என்ன புரியாது?”
“என் பீலிங்”
“என்ன பீலிங்?”
“……….”
“ஆஸ்பத்ரினு கூட பாக்காம என்னை திங்கற மாதிரி பாத்திங்க”
“ஏய்.. இல்லப்பா.. நான் அப்படிலாம் பாக்கல”
“நீங்க பாத்திங்க. அதை நான் பாத்தேன்”
“…….”
“பாத்திங்கதான?”
உண்மையில் அவன் அப்படி எல்லாம் அவளைப் பார்க்கவில்லை. அவள் பேசமாட்டாளா என்கின எண்ணத்தில் சில தடவை அவள் முகத்தைப் பார்த்ததுதான். ஆனால் அதை வேறு விதமாகப் புரிந்துகொண்டு இப்போது அவன் மீது அபாண்டமாக ஒரு குற்றத்தைச் சுமத்துகிறாள்.
"இல்ல" என்றான்.
"பொய் சொல்லாதிங்க.. எனக்கு ரொம்ப நல்லா தெரியும். நீங்க என்னை ஒரு மாதிரியா பாத்திங்க"
"இல்லேனு சொல்றேனில்ல.."
"பொய் சொன்னா எனக்கு மசக் கோபம் வரும்"
அவனுக்கு கடுப்பானது. இனி என்ன சொன்னாலும் தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கிவர மாட்டாள் என்று தோன்றியது.
“சரி.. அப்படியே வெச்சுக்கோ” என்றான்.
“ஏன் அப்படி பாத்திங்க என்னை?"
“……..”
“அலோ.. சொல்லுங்க?”
"இது என்ன கேள்வி கிருத்து?"
"சொல்லுங்க.. எனக்கு காரணம் தெரியணும்"
"அதை சொன்னா இன்னும் சண்டைதான் போடுவ?"
"சொல்லலேன்னா இன்னும் கடுப்பாவேன்"
“ஓஓ.. சரி. நீ அழகாருந்த. செம அழகு. அதை ரசிச்சேன். போதுமா?” பொய் சொன்னான்.
“நல்லா சைட்டடிச்சீங்க”
இல்லவே இல்லை.
”ஆமா” என்றான்.
“லொள்ளா உங்களுக்கு. ?”
“ஹா ஹா..”
“அக்கா வரட்டும் சொல்றேன். உங்க ஹஸ்பெண்ட் என்னை இழுத்து வெச்சி கிஸ்ஸடிச்சிட்டாருனு”
“…………”
“அலோ.. ஸார்…”
“ம்ம்”
“சொல்லவா?"
“சொல்லிக்க”
“சொன்னா என்னாகும் தெரியும்ல?”
“என்னாகும்? ரெண்டு நாள் என் கூட சண்டை போடுவா. முடிஞ்சா ஊருல நாலு பேருகிட்ட சொல்லி ஊரைக் கூட்டுவா. அப்படி பண்ணா என் பேரு மட்டுமில்ல.. இதுல உன் பேரும் சேந்துதான் கெடும்”
“எத்தனை திமிரா பேசுறீங்க..?” சட்டென கடுப்பாகி கேட்டாள்.
“சொல்லித்தான் பாரேன். என்ன நடக்குதுனு? உனக்கு அவளை பத்தி சரியா தெரியாது. நீ என்னை சிக்க வெக்கறதா நெனச்சு சொன்னேன்னா.. அவ உன் பேரை நாறடிச்சிருவா. இதுல நான் எதுவும் பேச வேண்டியதே இல்ல. எல்லாம் அவளே பாத்துக்குவா”
“என்ன.. என்னை மெரட்டறீங்களா?”
“ஹ்ஹா.. உன்னை மெரட்டலப்பா.. உண்மையை சொல்றேன். என் பொண்டாட்டி எப்படிப் பட்டவனு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவ உன்னை தப்பா சொல்ல மாட்டா. ஆனா என்னை அசிங்கப் படுத்துறதா நெனைச்சு பண்ற காரியத்துல தன்னால உன் பேரும் சேந்து கெடும். நீயும், அவளும் வேணா உண்மையா பேசலாம். ஆனா இந்த ஊரு என்ன பேசும் தெரியுமா? நெருப்பில்லாம பொகையாதுனு பேசுவாங்க. ஊசி எடம் குடுக்காம நூலு நொலையாதும்பாங்க. எல்லாம் நடந்து முடிஞ்சு கடைசில மாட்டற மாதிரி ஆனதும் அந்த ஆளுமேல பழி போட்டுட்டானு பேசிக்குவாங்க. இப்ப சொல்லு.. இது நடக்காதுனு நெனைக்கறியா?”
“……….”
“நானாவது பரவால. கல்யாணம் ஆனவன். நான் அசிங்கப் பட்டாலும் எனக்கு ஒரு அழகான வயசு பொண்ணு கூட டச்சுன்னா அது ஒரு கெத்துதான். ஆனா உன்னை நெனைச்சு பாரு.. உன் ப்யூச்சர்தான் பாதிக்கும்”
“இப்ப என்ன சொல்ல வரீங்க,?” அவள் குரல் உள்ளே போயிருந்தது.
"நான் எப்போ உன்னை இழுத்து வெச்சு கிஸ்ஸடிச்சேன்?"
"பின்ன.. என்ன செஞ்சீங்களாம்?"
"லைட்டாதான் கிஸ் பண்ணேன். இழுத்து வெச்சு கிஸ்ஸடிக்கல"
"அலோ.. என்னை லிப் கிஸ் அடிச்சிங்க"
"ஆமா.. ஆனா அது லைட் கிஸ்தான்"
"அது உங்களுக்கு. எனக்கு கிஸ்தான். நான் ஒண்ணும் உங்க வொய்ப் கிடையாது.."
"ஆமா.."
"அப்புறம் எதுக்கு என்னை லிப் கிஸ் அடிச்சீங்க?"
"நீ ரொம்ப அழகாருந்த. உன் அழகு என்னை பைத்தியமாக்கி அந்த நேரத்துல என் கண்ணை கட்டிருச்சு. ஸாரி.."
"ஸாரி சொல்லிட்டா.. எல்லாம் சரியா போகுமா?"
"போகாதுதான்.."
"எனக்கு கோபம் கோபமா வருது"
"ஏய் ஸாரி…"
"பொல்லாத ஸாரி.. ஏன் அப்படி செஞ்சீங்க..?"
”ஐ மிஸ் யூ.. கிருத்து” சட்டென சொன்னான்.
திகைத்தாள். ”அலோ.. என்ன..?”
“டேக் கேர்.. பை” சட்டென காலைக் கட் பண்ணி விட்டு மீண்டும் பியரை எடுத்து தொண்டைக்குள் சரித்தான் நிருதி.. !!
உண்மையில் கிருத்திகா கலங்கிப் போனாள். அவள் மனசு பதட்டத்துடன் பதறிக் கொண்டிருந்தது. அவளின் நிலை அவளுக்கே புரியவில்லை. அந்த தப்பு அவனுடையது மட்டும் இல்லை. தனக்கும் அதில் பங்குண்டு என்றாலும் அவளால் அதை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
அவளுக்கு மனசு புழுங்கி உடம்பு வியர்த்தது. பெண்மை கொதித்து நாடி நரம்பெல்லாம் தளர்ந்தவளாக சில நிமிடங்கள் அமர்ந்து விட்டாள்.
உள்ளே என்னென்னவோ செய்தது. அது ஏன் என்றும் புரியவில்லை. இதற்கு முன் அவளுக்கு இப்படி ஒன்று நடந்ததும் இல்லை.
அவளது மனப் போராட்டம் அதிகமானது. அவனையே நினைக்கத் தோன்றியது. அவனுடன் சண்டை போடவேண்டும் போல ஒரு வேகம் வந்தது. அவனை நன்றாக திட்டித் தீர்த்தால்தான் தன் கோபம் அடங்கும் என்று நினைத்து மீண்டும் நிருதிக்கு கால் செய்தாள் கிருத்திகா.
ரிங் போய் எடுத்தான்.
“என்னப்பா?” எனக் கேட்டான்.
“என்ன சொன்னீங்க?” சிடுசிடுப்பாகக் கேட்டாள்.
“எப்ப?”
“லாஸ்ட்டா சொன்னீங்கள்ள?” அதே கோபம்.
“தெரியலப்பா.. என்ன சொன்னேன்?”
”லொள்ளா உங்களுக்கு? ”
“சே… இல்லப்பா”
“பின்ன.. என்ன சொன்னேன்னு என்னை கேக்கறீங்க?” வார்த்தை உஷ்ணமானது.
“நான் சொன்னது உனக்கு எப்படி தெரியும்? ” எனச் சிரித்தபடி கிண்டலாகக் கேட்டான்.
“என்கிட்டதான சொன்னீங்க?”
“அப்பறம் எதுக்கு மறுபடி என்ன சொன்னீங்னு என்னை கேக்கற? ஏன் உனக்கு தெரியாதா?”
அவளை மடக்குகிறான் என்று புரிந்தது. அவளுக்கு கோபம்தான் வந்தது.
“என்ன.. ஓவர் மப்பா?”
“இன்னும் அடிக்கவே இல்ல”
“அப்பறம்.. ஒரு மாதிரி பேசுறீங்க?”
“அது என் பீலிங்”
“என்ன பீலிங்?”
“விடு. உனக்கு அது புரியாது”
சட்டென அவள் மனதுக்குள் ஒரு ஆற்றாமை வந்தது.
"அலோ"
"என்ன கிருத்து?"
"என்ன பீலிங்?"
"ப்ச்.. விடுப்பா.. நீ சின்ன பொண்ணு.. உனக்கு எதுக்கு அதெல்லாம்"
“பரவால சொல்லுங்க” சற்றே குரலை இறக்கிக் கொண்டாள். "நான் ஒண்ணும் தெரியாத பாப்பா இல்ல"
“ப்ச்.. விடுப்பா..” மீண்டும் சொன்னான்.
எரிச்சலாக வந்தது.
“சரி. ஐ மிஸ் யூ னு சொன்னீங்கள்ள.. அதுக்கு என்ன அர்த்தம்? ”
“ஐ மிஸ் யூனுதான் அர்த்தம்” சட்டென சிரித்தான்.
“ஆஆ.. கடிக்காதிங்க.. நான் ஆல்ரெடி உங்க மேல மசக் கடுப்புல இருக்கேன்”
“ஓகே பை”
“இருங்க"
“என்ன? ”
“குடிக்காம வீட்டுக்கு போங்க”
“ஏன்?”
“நீங்க குடிக்கறது எனக்கு புடிக்கல”
“உனக்கு ஏன் புடிக்கணும்?”
“எனக்கு குடிக்கறவங்களை புடிக்காது”
“சரி.. உனக்கு புடிக்கலேன்னா நான் ஏன் குடிக்காம இருக்கணும்.? உனக்குத்தான் என்னை புடிக்காதே? உனக்கு புடிக்காத.. ஒரு கெட்டவனான நான் குடிச்சா என்ன குடிக்காட்டி என்ன.? எனக்கு குடிக்கறது புடிச்சிருக்கு. குடிக்கறேன். குடிச்சிட்டு போனாத்தான் நிம்மதியா தூங்குவேன்”
“என்னமோ பண்ணி தொலைங்க..”
“ஓகே தேங்க்ஸ்”
”அலோ..”
“ம்ம்?”
“அதுக்கு என்ன மீனிங்?”
“எதுக்கு? ”
“ஐ மிஸ் யூ சொன்னீங்கள்ள..?”
“ஐ மிஸ் யூ னுதான் அர்த்தம்ப்பா”
“வந்தன்னா தொலைச்சிருவேன் பாத்துக்கோங்க”.
“அப்படியா.. ? வாயேன்.. !! வந்து தொலையேன்.."
“என்ன.. என்னை லவ் பண்றீங்களா?” சட்டென அவள் குரல் மாறியது.
”அதுக்கு பேரு லவ்வா?”
“உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்டாட்டியும், ரெண்டு பசங்களும் இருக்காங்க.. ஞாபகமிருக்கா?”
“அப்படியா.. அய்யய்யோ… சொல்லவே இல்ல.”
“ச்சீ வெய்ங்க..” எரிச்சலாகி சட்டென காலை கட் பண்ணி விட்டாள் கிருத்திகா.. !!
அவளுக்கு ஏனோ மனசு மட்டும் இல்லாமல் கண்களும் கலங்கித் தவித்தது.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக