வியாழன், 30 மே, 2024

சாலையோரப் பூக்கள் -10

 நண்பனுக்கு கையசைத்து டாடா காட்டிவிட்டு.. லாவண்யாவுடன் நடந்தான் நந்தா.


அவளது தலை முடியை உலர்வதற்காக.. முதுகில் பரப்பிவிட்டிருந்தாள்.


''என்ன இது.. இப்படி பத்ரகாளி மாதிரி முடிய விரிச்சு போட்றுக்கீங்க..?'' எனக் கேட்டான் நந்தா.


''தலைக்கு குளிச்சேன்..'' எனச் சிரித்தாள்.


''வேலைக்கு போய்ட்டு வந்தாச்சா..?''


''ம்..ம்ம்..'' 


அவனை வீட்டிற்கு அழைத்துப் போய்.. ஒரு சேரை எடுத்துப் போட்டாள்,

 ''உக்காரு..'' என்று உள்ளே போய்.. அவள் அம்மாவிடம் தக்காளியைக் கொடுத்து, ''காபி வெய்மா.. மலரோட தம்பி வந்துருக்கான்..'' என்றாள்.


''எதுக்குடி..?'' அவனை எட்டிப் பார்த்தாள் அம்மா.


''ரோட்ல போய்ட்டிருந்தான்.. நான்தான் பேசி வெச்சு கூட்டிட்டு வந்தேன்..'' அம்மாவிடம் சொல்லிவிட்டு அவள் முன்னால் போக... அவளைத் தொடர்ந்து வந்த அம்மா நந்தாவிடம் பேசினாள்.


அவனிடம் சாதாரணமாகப் பேசிவிட்டு 'நிம்மி இன்னும் வரவில்லை' என்பதையும் ஒரு பாட்டம் பாடிவிட்டுப் போனாள்.


காபியை லாவண்யா எடுத்து வந்து கொடுத்தாள். நந்தா குடித்தான்.


மணி எட்டாக.. மீண்டும் லாவன்யாவின் அம்மா புலம்பினாள்.

''மணி எட்டாச்சுடி.. இன்னும் இவள காணம்..''


''அதுக்கு என்னை என்னமா பண்ண சொல்ற..?'' லாவண்யா எரிச்சலாகிக் கேட்டாள்.


''பஸ் ஸ்டாப்லயாவது போய் பாரேன்..''


''ஏன் அவளுக்கு வீடு தெரியாதா..? இங்க வராம பஸ் ஸ்டாப்லயே நின்றுவாளா..?'' அம்மாவைக் கேட்டாள் லாவண்யா.


''போடி.. போய் நின்னு பாத்துட்டாவது வாடி..'' அம்மா திட்டினாள்.


''நிம்மி எங்க போனா..?'' எனக் கேட்டான் நந்தா.


''காலேஜ்தான்பா போனா.. அஞ்சு அஞ்சரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவா.. ஆனா இன்னிக்கு என்னமோ இன்னும் காணம்..! எனக்கு மனசே செரியில்ல..!'' என்றாள் மிகவும் கவலையுடன்.


''பிரெண்டு வீட்டுக்கு ஏதாவது போயிருப்பா..! வந்துருவா.. அழுது பொலம்பாத..!'' என்றாள் லாவண்யா.


''நீ வீட்லயே இரு.. நான் போய் பஸ் ஸ்டாபல நிக்கறேன்..'' எனச் சொல்லிவிட்டு அம்மா கிளம்ப..


''உன்னோட பெரிய ரோதனைமா.. நானே போறேன்.. நீ வீட்லயே இரு..'' என்று எழுந்தாள்.


நந்தாவைப் பார்த்து.. ''நீ கூட போய்ட்டு வாப்பா..'' என்றாள் அம்மா.


''அது வேறயா..?'' எனச் சிரித்தாள் லாவண்யா.


நந்தா எழுந்தான்.


''அப்படியே போய்டாதப்பா.. வந்து சாப்பிட்டு போ..'' என அம்மா சொல்ல..


''சரிங்க.. நீங்க கவலப்படாம இருங்க..'' என்றுவிட்டு வெளியே போனான்..!


லாவண்யா தனது மொபைலை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் சொன்னாள்.

''அவ வேற போன்ல இருந்து கூப்பிட்டான்னா நான் பஸ் ஸ்டாப்ல நிக்கறேனு சொல்லு..'' 


நந்தாவை அழைத்துக் கொண்டு பேசிக்கொண்டே பஸ் ஸ்டாப் போனாள்.


பஸ் ஸ்டாப்பில் போய் நின்றார்கள். கொஞ்சம் தள்ளி ஆட்டோ ஸ்டேண்டில் இரண்டு ஆட்டோக்கள் நின்றிருந்தன.

டவுன் பஸ் வருவதும் போவதுமாக இருந்தது.

ஆனால் நிம்மியை மட்டும் காணோம்..!!


''நிம்மிகிட்ட போன் இல்லயா..?'' என்று கேட்டான் நந்தா.


''அவளுக்கு போன் இருக்கு.. ஆனா காலேஜ்க்கு கொண்டு போககூடாது..! பயப்படறவுக்கு ஒன்னும் இருக்காது..! எங்கம்மா தேவையில்லாம பயந்து சாகறா.. அவ பிரெண்டு வீடுகளுக்கு அடிக்கடி இந்த மாதிரி போவா..!!'' என்றாள்.


''பிரெண்டுக போன் நெம்பர் இருக்கா..?''


''என்கிட்ட இல்ல.. அவ செட்ல இருக்கும்..''


''அப்பறம் என்ன.. அதுல கூப்பிட்டு பாக்கலாமில்ல..?''


'' அதுல பேலன்ஸ் இல்ல..!''


''ஒரு பத்து ருபா கார்டு வாங்கி போட்டு பேச வேண்டியதுதான..?''


''பேசலாம்...'' என இழுத்தாள் ''நான் அவ்ளோ சீரியஸா எடுத்துக்கல.. வந்துருவா அவ..!''


''ஆனா உங்கம்மா பயந்து சாகறாங்களே...'' என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… லாவண்யாவின் கையில் இருந்த  போன் அடித்தது.


எடுத்துப் பார்த்தாள் புது எண்..!

''அலோ..?'' என்றாள்.


''ஏய் நாந்தான்டி..'' என்றாள் எதிர் முனையில் நிம்மி.


''எங்கடி இருக்க சனியனே..?'' எரிச்சலுடன் கேட்டாள் லாவண்யா.


''என் பிரெண்டு வீட்டுக்கு வந்தேன்.. லேட்டாகிருச்சுடி.. இப்பதான் அம்மாகிட்ட பேசினேன். நீ பஸ் ஸ்டாப்ல நிக்கறேனு சொன்னா..! நீ வீட்டுக்கு போ.. நான் பைக்ல வந்தர்றேன்..!''


''பைக்லயா.. யாருகூட..?''


''என் பிரெண்டோட தம்பி என்னை ட்ராப் பண்றேனு சொன்னான். இப்ப கெளம்பிட்டேன்..! அரை மணி நேரத்துல வந்துருவேன்.. நீ வீட்டுக்கு போ..'' என்றாள்.


''சீக்கிரம் வந்து தொலை.. உங்கம்மாளோட தொல்லை தாங்கல..'' என்றாள் லாவண்யா.

காலைக் கட் பண்ணிவிட்டு நந்தாவிடம் சொன்னாள்.

''பிரெண்டு வீட்டுலதான் இருக்கா.. அவ பைக்ல வராளாம்.. நாம போலாமா..?'!


''எங்க.. ?''


''எங்க வீட்டுக்கு..?''


''இல்ல.. நான் இப்படியே போறேன்..'' என்றான் நந்தா.


''ஏய் வா நந்தா.. என் வீட்ல போய் சாப்பிட்டு போ..'' அவன் கையைப் பிடித்தாள்.


''எனக்கு சாப்பாடெல்லாம் வேண்டாம்..''


''வேற என்ன வேணும்..?'' என அவள் சிரித்துக்கொண்டு கேட்க...


யோசிக்காமல் சொன்னான் நந்தா.

''நீங்க வேணும்..''


திகைத்தாள். ''ஏய்..? என்ன..? நானா..?''


''ஆமா.. '' என்றான் ''என்னமோ.. இப்ப உங்கள பாத்தப்பறம்.. எனக்கு.. உங்க மேல திடிர்னு ஒரு லவ்வாகிருச்சு..''


''லவ்வா..?'' புன்னகைத்தாள் ''என்ன திடிர்னு..?''


''நேத்து.. நாம ஹோட்டல்ல சாப்பிடறப்ப.. ஒன்னு  நடந்துச்சே.. அதுக்கப்பறம்... எனக்கு உங்க நெனப்பாவே இருக்கு..'' என்றவாறு.. அவள் கை விரல்களைக் கோர்த்துப் பிடிக்க...

அவளும்.. அவன் கைவிரலை இறுக்கினாள்.....!!!!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!