செவ்வாய், 14 நவம்பர், 2023

உன்னைச் சுடுமோ -8

 அந்த வார ஞாயிற்றுக் கிழமை, காலை ஒம்பது மணிக்கு நிருதி டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அவன் வீட்டுக்கு வந்தாள் கிருத்திகா. 


மெரூன் கலரில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் நெஞ்சில் சுருக்கென ஒரு முள் குத்துவதைப் போலிருந்தது. 


சோபாவில் உட்கார்ந்து காமெடிச் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த அவனை ஓரக் கண்ணால் ஒரு சைடு பார்வை பார்த்து இதழோரப் புன்னகை சிந்தியபடி கிரைண்டரில் மாவாட்டுவதில் பிஸியாக இருந்த அவன் மனைவியிடம் போய் பேசினாள்.


பத்து நிமிடங்கள் கழித்து அவனிடம் வந்தாள்.


“ப்ரீயா?” என்று சன்னமாக அவனைக் கேட்டாள்.


“…. ” அவன், அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை.


“அலோ.. அண்ணா.. உங்களைத்தான்” கொஞ்சம் அழுத்திச் சொன்னாள்.


டிவியில் இருந்து பார்வையை மாற்றி அவளைப் பார்த்தான். 


அவள் பார்வையில் லேசான முறைப்பு தெரிந்தது.


“என்ன?”


“இன்னிக்கு ப்ரீயானு கேட்டேன்”


“என்கிட்டயா கேக்குற?”


”பின்ன.. இங்க வேற யாரு இருக்கா?”


“என் கூடல்லாம் பேசுவியா நீ?”


“என்ன சினிமா டயலாக்கா?” டிவியைப் பார்த்து விட்டு “லஞ்ச் டைம் எங்கம்மா உங்களை எங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க” என்றாள்.


“எதுக்கு? ”


“அக்காகிட்ட சொல்லியிருக்கேன். கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. பை..” அவள் சொல்லி முடிக்கும் முன், அவன் மனைவி தொடை தெரிய தூக்கி சொருகிய ஈர நைட்டியுடன் வந்தாள்.


“என்னங்க.. இவளை இன்னிக்கு பொண்ணு பாக்க வராங்களாம்”


“என்னது..?” திகைத்தான். “பொண்ணு பாக்க வராங்களா?”


“இதுக்கு நீங்க ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க..? இவளை லவ் பண்றீங்களா என்ன?” என்று அவன் மனைவி கிண்டல் செய்து சிரித்தாள்.


“அக்கா…” என்று சிணுங்கினாள் கிருத்திகா. “இந்த சிடு மூஞ்சியை உங்களாலயே சகிக்க முடியலேனு சொல்றீங்க. இதுல நான் லவ் வேற பண்றேனா என்ன?”


“அடி.. நீ பண்ண மாட்டேனு தெரியும்டி. ஆனா இந்த மூஞ்சிக்கு உன் மேல ஏதாவது ஒரு பீல் இருந்தா.. ?”


”அடிப் பாவிகளா.. ஒரு சின்ன ஷாக் ரியாக்சனுக்கு இவ்வளவு விவாதமா?” என்றான்.


“அப்ப ஏன் ஷாக்கானீங்க?”


“இவளுக்கு ஏதோ ஜாதக தோசம். இப்ப கல்யாணம் பண்ணா ரெண்டு தாலி யோகம்ன்றதால லேட் மேரேஜ்தான் பண்ணனும்னு இதுதான் சொல்லுச்சு அது ஞாபகம் வந்துச்சு..”


“அப்படியாடி?”


“ஆமாக்கா.. எங்கம்மா எனக்கு ஜாதகம் பாத்துட்டு வந்து அப்படித்தான் சொன்னாங்க. ஆனா.. இன்னிக்கு என்னை பொண்ணு பாக்க வரவங்க அதை நம்பல. ஜாதகமே பாக்க வேண்டியதில்ல. எங்களுக்கு பொண்ணை புடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லிட்டாங்க” என்று சிரித்தபடி சொன்னாள் கிருத்திகா.


“அப்ப.. ஆல்ரெடி உன்னை பாத்துட்டாங்களா?” என்று நிருதி கேட்டான்.


“எங்க சொந்தக் காரங்கதான். அம்மாவை பாக்க ஆஸ்பத்திரி வந்தாங்க.. அங்க என்னை பாத்து அவங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.. அதான்.. இன்னிக்கு வீட்டுக்கு வராங்க..”


“ஓகே.. வாழ்த்துக்கள். ” என்றான்.


”தேங்க்ஸ்.. !!” என்று சிரித்தாள்.


மதிய நேரம் கிருத்திகாவைப் பெண் பார்க்க வந்தார்கள். நிருதிக்கு அங்கு போக விருப்பம் இல்லைதான். ஆனால் அவன் மனைவி அவனை வற்புறுத்தி அழைத்துப் போய் விட்டாள். 


மாப்பிள்ளை பையன் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். ஆனால் அவளை விட உயரம் கொஞ்சம் குறைவாக இருந்தான். லேசாக தொப்பை போட்டு குண்டாக இருந்தான்.


கிருத்திகா நன்றாக மேக்கப் செய்திருந்தாள். அவன் மனதில் ஏற்கனவே ஆசையைத் தூண்டி விட்டிருந்த அவளின் இளம் பருவ அங்க லாவண்யங்கள் இப்போது இன்னும் பல மடங்கு ஆசையை அவன் மனதில் பெருகச் செய்தது.


கண்களால் மாப்பிள்ளை பையனைக் காட்டி நிருதியுடம் கேட்டாள் கிருத்திகா.

‘மாப்பிள்ளை எப்படி? ‘


‘சூப்பர் ‘ என்று சிரிப்புடன் தலையாட்டினான்.


‘தேங்க்ஸ்’ என்று உதடுகளைச் சுழித்தாள்.


கிருத்திகாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது. திருமணப் பேச்சு வார்த்தை எல்லாம் நல்ல விதமாகவே நடந்து முடிந்தது. 


அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ஜோசியரிடம் போய் திருமண நாள் குறித்துக் கொள்வதென முடிவானது.. !!


அன்றிரவு எட்டு மணிக்கு நிருதி வெளியே போய் சரக்கடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது கிருத்திகா அவன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து அவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.


 மாப்பிள்ளை வந்து போனபின் அவன் மீதிருந்த அவள் கோபம் குறைந்து போயிருந்தது.


 அவன் பாத்ரூம் போய் முகம் கழுவி உடை மாற்றி வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்தான். கிருத்திகாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்.. !!


“அப்பறம் புதுப் பொண்ணு” என்றான்.


“சொல்லுங்க ணா?” லேசாய் நெளிந்தாள்.


“செட்டில்தான்”


தலையாட்டிச் சிரித்தாள். 

“மாப்பிள்ளை எப்படி இருக்கார்ணா?”


“ஜம்முனு இருக்கான். உனக்கேத்த ஜோடி” நெக்கலை மறைத்துச் சொன்னான்.


உடனே அவன் மனைவி குறுக்கிட்டாள்.

“நீங்க யாரை சொல்றீங்க?”


“மாப்பிள்ளை பையனடி”


“அவன் இவளுக்கு ஏத்த ஜோடியா?” அவன் மனைவி முறைத்தாள்.


“அப்புறம் இல்லையா?”


“உங்க கண்ணை தொறந்து நல்லா பாத்திங்களா அவனை? இவ ஹைட்டு என்ன.. அவன் ஹைட்டு என்ன? இவளை விட பையன் கூளை..”


“அப்படியா கிருத்தி?” கிருத்திகாவைச் சீண்டினான்.


“ஆமாண்ணா.. என்னை விட கொஞ்சம் ஹைட் கம்மிதான்” என்று சிரித்தபடி சொன்னாள்.


அவன் மனைவி, “அப்பறம் இவளை விட கொஞ்சம் குண்டா இருக்கான். இப்பவே லேசான தொப்பை..” என்று அடுக்கினாள்.


“ஏய் லூஸு.. அது எப்படி இருந்தா உனக்கென்ன? அவனை கட்டிட்டு வாழப் போறது கிருத்திகா. கட்டிக்க போறவளுக்கு புடிச்சிருக்கு. அது போதுமானது. தேவை இல்லாதத பேசி நீ அவ மனசையும் சேந்து கெடுக்காத”


“நான் கெடுக்கல. அவளேதான் இதெல்லாம் பீல் பண்ணி பேசினா?” என்றாள் அவன் மனைவி.


கிருத்திகாவைப் பார்த்தான். அவள் லேசான வெட்கத்துடன் தலையாட்டினாள்.


“ஏன்.. உனக்கு அவனை புடிக்கலியா?” எனக் கேட்டான்.


“புடிச்சிருக்குதான்.. சும்மா.. ஜோடிப் பொருத்தம் பத்திலாம் பேசிகிட்டிருந்தோம்”


“அப்ப உனக்கு ஓகே தான?”


“ம்ம்.. எனக்குலாம் ஓகேதான். வீட்டுக்கு ரெண்டாவது பையன். நல்ல வேலை. நல்ல சம்பளம். சொந்த வீடு.. ஆளும் பாக்க மோசமில்ல. கொஞ்சம் ஹைட் மட்டும் என்னை விட கம்மி அவ்வளவுதான். அப்படி அவங்க நெனச்சா என்னை கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க.. எங்க வீட்லயும் எல்லாருக்கும் ஓகேதான்”


“அப்ப லைப் செட்டில்தான்?”


”ம்ம்” தலையாட்டி “உங்கள மாதிரி குடிகார அண்ணா இல்ல” என்று சிரித்தாள்.


”ஆமா.. கல்யாணத்துக்கு முன்ன எல்லா பசங்களும் நல்லவனுகதான். கல்யாணம் ஆகட்டும். அப்பறம் பாரு..”


“எல்லாருமே உங்கள மாதிரி இருக்க மாட்டாங்க. அத தெரிஞ்சுக்கோங்க. இந்தக்கா செரியில்ல. உங்களை போனா போகுதுனு விட்டுட்டாங்க அதனாலதான் நீங்க இப்படி குடிச்சிட்டு சேட்டை பண்றீங்க.. நானாருந்தா வாய் வாயா தட்டியே குடியை நிறுத்தியிருப்பேன்”


“நீயி?”


“ஆம்மா..”


“வாயி வாயா தட்டி?”


“தட்றதா.. சூடு கூட வெப்பேன். வாயில..” என்று கிண்டல் சிரிப்பைக் காட்டினாள்.


அவன், அவள் உதட்டில் முத்தமிட்டது நினைவில் வந்து சட்டென ஒரு நொடி அவளைச் சிலிர்க்க வைத்தது. 


அந்த நொடி தன்னையும் மீறி அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.. !!

சனி, 11 நவம்பர், 2023

நீலவானப் பறவை -7

 விஜய் அங்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. அவன் தனது அறையில் தனது புதிய மொபைல் போனுடன் பெரும்பாலான நாட்களைக் கழித்தான்.


வருண் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய பிறகு, மாலையில் தான் அறையை விட்டு வெளியில் வருவான். ஆனந்தியின் முன்னிலையில் அவன் நிறைய வெட்கப்பட்டான். அதனால் அவளுடன் தனியாக இருப்பதைத் தவிர்த்தான். 


அவளும் அதை கவனித்தாள். ஒருவேளை அவனது வயதும், அந்த வயதுக்குரிய ஹார்மோன்களும் அதற்கு காரணமாக இருக்கும் என்று அவள் யூகித்தாள். இதை அவள் வருணிடமும் சொன்னாள்.


மெதுவாக அந்தக் குடும்பத்துடன் பழக ஆரம்பித்தான் விஜய். மொபைல் போன், லேப்டாப் பயன்படுத்துவதை வருண் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.


விஜயுடன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றனர். அவனது எலும்பு முறிவைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து காயங்களும் குணமடைந்திருந்தன.


அவனது கைக் கட்டை அகற்ற ஒரு மாதம் ஆகும் என்று மருத்துவர் கூறினார். அதுவரை அவன் இப்படியே இருக்க வேண்டும். 


இதைக் கேட்ட விஜய்க்கு கோபம் வந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்துவிட்டான்.!!


அன்று மாலை, வருண் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் விஜய் இல்லை. 


கதவைத் திறந்த அவன் மனைவி ஆனந்தி பளிச்சென இருந்தாள். 


காபி கொடுத்த அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்து அணைத்துக் கொண்டு விஜயைப் பற்றி கேட்டான். 

"அவன் எங்கே?"


 "அவன் பார்க்குக்கு போறேனு சொல்லிட்டு போனான்" என்றாள்.


"எப்படி இருக்கான்?"


"ரூமை விட்டு வெளியே வர்றதும் இல்ல. பேசுறதும் இல்ல. மனசளவுல ரொம்ப கஷ்டத்துல இருக்கான் போல"


"அவனால உனக்கு ஏதாவது சிரமமா?" மீண்டும் கேட்டான்.


"சே சே.. அதெல்லாம் ஒண்ணுமே இல்ல. உண்மைய சொன்னா அவன் என்கூட பேசினா எனக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்.. ஆனா எங்க.. அவன் என்னை கண்டாலே ஓடி ஒளிஞ்சிர்றான். ரொம்ப ஷை டைப்" என்று சிரித்தாள்.


அவள் கழுத்தில் கன்னத்தில் எல்லாம் தாராளமாக முத்தமிட்டு, 

"சரி.. நீ டிபன் பண்ணி வெய். நான் போய் அவன்கிட்ட ப்ரீயா பேசிட்டு வரேன்" எனச் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான். 



****


மாலை நேரச் சூரிய அஸ்தமனத்தில் பூங்கா அழகாகத் தெரிந்தது. குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்கார்ந்து அவர்களை வேடிக்கை பார்த்தார்கள்.


ஒரு மூலையில் இருந்த பெஞ்சில் விஜய் தனியாக அமர்ந்திருப்பதை வருண் கண்டான். 


அவன் கவலையுடன் காணப்பட்டான். தன்னை நோக்கி வந்த வருணைப் பார்த்த  அவனது புருவம் சுருங்கியது.


 வருண் அவனருகில் சென்று அமர்ந்தான்.

"என்ன விஷயம்?" மெல்லக் கேட்டான்.


ஒன்றுமில்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான். 


"சொல்லு, உனக்கு என்ன கஷ்டம்?"


சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, "நான் எதுவும் செய்யாம இருக்கறது என்னைக் கொல்லுது" என்றான் விஜய்.


"சரி.. உன் தகுதியை சொல்லு, உனக்கு ஏத்த வேலையை நான் தேடி தர்றேன். இந்த பெரிய கூட்டை விட்டு வெளிய வந்தா, நீ சரியாகிடுவ"


விஜய் தலை குனிந்து இருந்தான். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அதன் பிறகு மெதுவாகச் சொன்னான்.


"நான் படிச்சது பத்தாம் வகுப்பு மட்டும்தான்"


"அதுக்குப்பறம்?" வருண் கேட்டான். "ஆர்வமில்லையா? இல்ல புடிக்கலையா?"


"இல்லை, எனக்குப் படிக்கப் பிடிக்கும், பப்ளிக் எக்ஸாம்லயும் நல்லா மார்க் வாங்கினேன். என்ஜினீயரிங் காலேஜ்ல சேரணும்னு ஆசைப் பட்டேன். ஆனா அது எப்படி சாத்தியமாகும்னு எனக்கு தெரியல"


"அபபறம் என்ன நடந்துச்சு?"


சிறிது இடைவெளி விட்டு விஜய் தொடர்ந்தன்.

“நான் அனாதை இல்லத்துல பதினோராம் வகுப்பு படிக்கறப்ப அங்க இருக்குற அனாதை இல்ல நிர்வாகிகளோட கொடூரமான ஒரு முகம் எனக்கு தெரிஞ்சுது. ஆனா அந்த இல்லத்துக்கு நெறைய பணம் வந்துச்சு. என் ஆர் ஐ களோட அரசாங்க உதவி மையமும் உள்ளூர் வணிகர்களும் நெறைய பணம் குடுத்தாங்க. பெரும்பாலான பணம் அறங்காவலர்களாலதான் சேகரிக்கப்பட்டது. ஆனா அவங்க தேவைக்காக எங்க பணத்தை எடுத்து பயன்படுத்திட்டாங்க"


"........"


"நல்ல சாப்பாடு, உடை, புத்தகங்கள் கூட தரதில்ல. கண் முன்னாலேயே எஙக வாழ்க்கை அழிஞ்சிட்டிருந்துச்சு. இதுபத்தி நான் அவங்ககிட்டயே கேள்விகள் கேட்டேன். அவங்க என்னை அமைதியா இருனு எச்சரிக்கை பண்ணாங்க. ஆனா நான் அதையும் மீறி அவங்க போலித்தனத்த வெளி உலகுக்கு காட்டணும்னு முயற்சி பண்ணேன். அவங்க என்னை தண்டிக்க அவங்க ஆபீஸ்ல நான் பணத்தை திருடிட்டதா சொல்லி என்மேல போலீஸ்ல புகார் குடுத்துட்டாங்க. அதுக்கப்பறம் நான் அங்கருந்து தப்பிச்சு வந்துட்டேன்"


சிறிது இடைவெளிக்குப் பிறகு விஜய் மீண்டும் தொடர்ந்தான்.

"அதுக்கப்பறம்.. சாப்பாடு, தங்குமிடத்துக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதிகாலைல எழுந்து வீடுகளுக்கு செய்தித்தாள்கள் டெலிவரி செய்றது, ஹோட்டலில் சர்வர், பெட்ரோல் பங்க், கூரியர் பாய்னு பல வேலைகளைச் செஞ்சேன். அப்போத்தான் நான் உண்மையாவே இந்த உலகத்தை தெரிஞ்சுகிட்டேன். நிஜமாகவே மனுசங்க எல்லாம் பணத்துக்காகத்தான் ஓடினாங்க. பணத்துக்காக எதையும் செய்வாங்க. அன்பு, கருணை, விசுவாசம் எதுவும் இல்லை. கடைசியா அந்த லேத் தொழிற்சாலைக்கு வந்தேன்."


".........."


"நான் படிக்க விரும்பினேன். என் மேல் படிப்பை முடிச்சுட்டு சொந்தமா சிறுதொழில் தொடங்க நினைச்சேன். அதுக்கு எனக்கு பணம் தேவையா இருந்துச்சு. நான் கஷ்டப்பட்டு உழைச்சு பணத்தை சேத்தேன், அதே நேரத்தில என்னோட சக ஊழியர்கள் அவங்க சம்பாத்தியத்தை பொறுப்பில்லாத முறையில செலவழிச்சாங்க. ஆனா என் கையில் பணம் இருக்குனு தெறிஞ்சதும்...” என்று ஆழ்ந்த மூச்சை விட்டான்.


சில நொடிகள் அமைதி நிலவியது. பூங்கா மெல்ல மெல்லக் காலியாகிக் கொண்டிருந்தது. 


"ஸாரி" வருண் மௌனத்தைக் கலைத்து வருத்தத்துடன் கூறினான். சிந்தனையுடன் தன் தாடையை வருடினான்.


"சரி, இப்போ நீ முதல்ல ஹையர் செகண்ட்ரியை முடிக்க இந்த நேரத்தை பயன்படுத்திக்கோ. நீ நேரடியாக டுவல்த் படிக்கலாம். அதுக்கு நீ முதல்ல ஒரு டுட்டோரியல் செண்டர்ல சேரணும். அதை நான் பாத்துக்கறேன்", என்று உறுதியாகச் சொன்னான் வருண்.


விஜய் தலையை ஆட்டினான். 


"போலாமா?"


"ம்ம்"


"ரிலாக்ஸா இரு.. இது உன் வீடு.." என்றான் வருண்.. !!

விரும்பிப் படித்தவை.. !!