செவ்வாய், 2 ஏப்ரல், 2024

சாலையோரப் பூக்கள் -2

 'காமசூத்ரா.'


இந்தப் பெயரை, கொஞ்சமேணும் படிப்பறிவுள்ள, வயது வந்த யாரும் அறியாமல் இருக்க முடியாது..! அந்த வகையில்.. விழிமலருக்கும் இந்தப் புத்தகம் பற்றித் தெரியும்..!!


ஆனால் இது பலான புத்தகம் அல்ல..! கொஞ்சம் பெரிய புத்தகம்.!


 அதன் அட்டைப் படத்தில்.. கோவில் கோபுரச் சுவரில் ஆணும் பெண்ணும்.. நிர்வாணமாக முத்தமிட  முயன்று கொண்டிருக்கும் சிற்பம் போடப்பட்டிருந்தது..!!


அதன் முதல் பக்கத்தை அவள் புரட்ட அவன் கையில் நான்கைந்து புத்தகங்களுடன் அவள் பக்கம் திரும்பி அவளின் கையில் இருந்த புத்தகங்களை இயல்பாகப் பார்த்தவாறு சொன்னான்.

''படிக்கறதா இருந்தா.. இத படிச்சுப் பாருங்க..! ஆனா உங்களுக்கு புடிக்கும்னு சொல்ல முடியாது..!''


''என்ன அது..?'' அவனைப் பார்த்தாள்.


''சுமாரா.. உங்க ரேஞ்சுக்கு ஒத்து வரக்கூடிய கதை..'' என்று அவன் கொடுத்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு.. தன் கையில் இருந்த புத்தகங்களை அவனிடம் கொடுத்தாள்.


''உங்க பொழுது போக்கே.. புக் படிக்கறதுதானா..?'' என்று அவனிடம் கேட்டாள்.


''ம்.. ம்ம்..! ஃப்ரியா இருக்கற டைம்ல.. அப்படியே படிக்கறதுதான்..!''


''அனேகமாக.. இதெல்லாம் படிச்சு முடிப்பனான்னு தெரியாது..! அப்படியே படிச்சாலும்.. இத முடிக்க.. எத்தனை மாசம் ஆகும்னும் சொல்ல முடியாது..!'' என்று புன்னகைத்தாள்.


''ஒன்னும் அவசரமில்ல.. பொருமையா படிங்க.. இங்க வெட்டியாதான் கெடக்கு..! உக்காருங்க..'' என்றான் மறுபடியும்.


''இல்ல.. பரவால்ல..'' மலர் மெதுவாக நகர்ந்து ஜன்னல் அருகில் போய் வெளியே பார்த்தாள்.


தெருவின் மூலையில், அவளது பெரிய தம்பி நந்தகோபன் வந்து கொண்டிருந்தான்.


 அவனைப் பார்த்து விட்டுத் திரும்பினாள்.

''சரிங்க.. நான் போறேன்..! புக்குலாம் படிச்சிட்டு தரேன்..!!''


''ஏங்க... வீட்ல யாரும் இல்லையா..?'' எனக் கேட்டான் துகிலன்.


''இல்ல.. இப்பதான் நந்து வரான்..!!'' என்றாள்.


அவனும் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டு.. 

''சரிங்க..!!'' என்றான்.


 ஒரு புன்னகை சிந்தி..

''பை..!!'' சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்..!!


☉ ☉ ☉


நந்தகோபன் எனும் நந்தா.. இன்னும் இளமை முறுக்கு ஏறாத.. இளம் வாலிபன்.!! அரும்பு மீசை.. குறும்புப் பார்வை.. எனப் பெண்களின் பின்னால் அலையும் வயது..!! 


வஞ்சணையின்றி.. உண்ணும் உணவில் ஊட்டம் பெற்று.. நல்ல வாட்டமாக இருந்தான்..!!


 வீட்டில் நுழைந்ததும்.. விழிமலரைப் பார்த்து,

''சோறு போடு..'' என்றுவிட்டு சட்டையைக் கழற்றி சோபாவில் போட்டான்.


அவனை முறைத்தாள் விழிமலர்.

''இப்பதான்டா எல்லாம் தொவைச்சு முடிச்சேன்..''


''அதுக்கு..?'' அவனது புருவம் உயர்ந்தது.


''இப்படி சோபால கழட்டி போடற..? பாரு..! தொவைக்கறவளுக்கில்ல தெரியும் கஷ்டம்..?''


''ஏ.. மூடிட்டு போ.. சோறு போட்டு கொண்டு வா..!!'' அவன் எரிச்சலோடு சொன்னான்.


''பரதேசி..!!'' என்று விட்டு.. கிச்சனுக்குப் போய்.. ஒரு தட்டில் உணவைப் போட்டுக் கொண்டு வந்தாள்.


சோபாவில் கால் பரப்பி உட்கார்ந்திருந்தவன் அவள் கொடுத்த உணவை வாங்கி அப்படியே சாப்பிடத் தொடங்கினான்.


''ஏன்டா.. பரதேசி.. கை கழுவிட்டு சாப்பிட்டா என்ன கொறைஞ்சா போவ..?'' என்றாள் விழிமலர்.


அவளை சட்டை பண்ணாமல் சாப்பிட்டான் நந்தா.


 அவனை முறைத்துப் பார்த்து விட்டு.. டிவியைப் போட்டாள் விழிமலர்.


''பேன.. போடு..'' எனக் கட்டளையிட்டான் நந்தா.


அதையும் போட்டு விட்டு அவன் பக்கத்தில் போய் சோபாவில்.. அவனை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

''எங்கடா போயிருந்த..?''


அவளுக்கு பதில் சொல்லாமல்.. அவன் டிவியைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான். 


சிறிது பொருத்து மீண்டும்..

''எங்காவது வேலைக்கு போலாமில்லடா..?'' என்றாள்.


அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான். 


சிரித்தாள்.

''என்னடா மொறைக்கற..?''


''சூத்த மூடிட்டு இரு..'' என்றான்.


''அது எனக்குத் தெரியும்..'' என்று டிவியைப் பார்த்தாள்.


அவனைக் கடுப்பேற்றினால்.. இதைவிட இன்னும் மோசமான வார்த்தைகள் எல்லாம் வரும்..! அக்கா என்றெல்லாம் பார்க்க மாட்டான்..!! 


ஆனாலும் அவனை வம்புக்கு இழுக்காமல் அவளால் இருக்க முடியவில்லை.


''திருடறியாமே..?'' எனக் கொஞ்சம் சரிந்து  அவனைப் பார்த்துக் கேட்டாள்.


''அதுக்கென்ன இப்ப..?'' உணவை அசை போட்டவாறே கேட்டான்.


''இதெல்லாம் ஒரு பொழப்பாடா.. திருடறது.. பிக் பாக்கெட் அடிக்கறது..??''


''நீ மட்டும் ரொம்ப ஓக்கியம்..'' என்றான் கடுகடு குரலில்.


இதற்கு மேல் அவனுடன் பேசினால்.. அவளது மரியாதை கெடும் என்பது அவளுக்குத் தெரிந்தது. 


இப்போது அவன் ஏதோ எரிச்சலில் இருக்கிறான். அதனால் அவனைச் சீண்டாமலிருப்பதே நல்லது.!


எட்டி சோபாவில் கிடந்த அவன் சட்டையை எடுத்து அதன் பாக்கெட்டில் கை விட்டாள். உள்ளே பீடியும் தீப்பெட்டியும்தான் இருந்தது..! 


அதை எடுத்துப் பார்த்து விட்டு உள்ளே வைத்துக் கொண்டே,

''ஓவரா தம்மடிக்காதடா.. அப்பறம் 'நான் முகேஷ் பேசறேன்.' ரேஞ்சுக்கு கேன்ஸர் வந்து செத்துப் போவ..'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.


''நான்தான்டி சாகறேன்..? உனக்கென்ன..?'' என்றான்.


''என்னடா.. இப்படிப் பேசற...'' என்றாள்.


''இதுல உனக்கென்ன நட்டம் வந்துச்சு..?''


''நீ என் தம்பிடா..!!'' அவன் தோளில் கைபோட்டாள்.


''ஓ... அப்படியா...?'' எனக் கேலியாகச் சிரித்தான்.


''போடா.. உனக்கு போய் இதெல்லாம் சொன்னேன் பாரு..''


''நானாவது பரவால்லடி.. கேன்ஸர்தான்..! ஆனா.. நீ..?'' எனப் பரிகாசமாகச் சிரித்தான்.


''எனக்கென்னடா..?'' அவனை ஏறிட்டாள்.


''கேன்ஸர் வந்து செத்தா.. அதுல பெருசா எந்த அசிங்கமும் இல்ல.. இப்பெல்லாம் நெறைய பொம்பளைங்களே கேன்ஸர்ல சாகறாங்க.. ஆனா.. எய்ட்ஸ் வந்து செத்தா நல்லாவா இருக்கும்..?? கொஞ்சம் யோசிச்சுப் பாரு..??'' என அவன் கேட்க..


''ஆ.. ச்சீ... மூடிட்டு திண்ணு..'' என்றாள் விழிமலர்…!!! 



 என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக