சனி, 13 ஏப்ரல், 2024

சாலையோரப் பூக்கள் -3

 சாப்பிட்டு முடித்த நந்தா தட்டைக் கொண்டு போய் வைத்து விட்டு.. ஏப்பம் விட்டவாறே.. வந்து அவளை இடித்துக் கொண்டு உட்கார்ந்தான்.


 மெதுவாக  அவளது தோள்மேல் சாய்ந்து கேட்டான்.

''சினிமாக்கு போகலையா..?''


''காசு யாரு.. உங்கப்பனா தருவான்..?'' என எரிச்சலுடன் கேட்டாள் விழிமலர்.


''ஏன்.. நம்ம மாடி வீட்டு மச்சான் தரல..?'' எனச் சிரித்துக் கொண்டு கேட்டான்.


புரியாமல் அவனைப் பார்த்தாள்.

''மாடி வீட்டு மச்சானா..?''


''அந்த மூலைல வர்றப்பவே பாத்தேன். நீ ஜன்னல் பக்கத்துல நின்னுட்டுருந்தத..! கரெக்ட் பண்ணிட்டியா..?'' எனக் கண் சிமிட்டினான்.


''அட… ச்சீ... அடங்கு..'' என அவன் தலையில் அடித்தாள், ''சும்மா ரெண்டு வார்த்தை பேசினேன்..''


''ஓ.. இப்பதான் ஸ்டார்ட்டாகுதா..? ஓகே.. ஓகே..''


''ஏய்.. அடங்குடா தாய்லி..! சும்மா என்னை கடுப்பேத்தாத..!''


''ஓட்டு.. ஓட்டு.. நான் ஒன்னும் கண்டுக்க மாட்டேன்..!'' எனச் சிரித்தான்.


விட்டால் இவன் இப்படியேதான் பேசிக் கொண்டிருப்பான். அதனால் அந்தப் பேச்சை அலட்சியப் படுத்தினாள்.


''சரி.. பணம் குடு..''


''எதுக்கு..?''


''சினிமா போறதுக்கு..''


''ஏன்.. உன்கிட்ட இல்ல..?''


''இல்ல... எனக்கு அடுத்த வாரம்தான் சம்பளம்..''


''எவ்ளோ வேணும்..?''


''ஐநூறு..!!'' ன


''மூடு..!!'' என்றான். உடனே, ''ஏதோ.. அம்பதோ நூறோ கேப்பேனு பாத்தா.. ஐநூறு ஆயிரம்னு கேட்டுட்டு..''


''அம்பது நூற வெச்சிட்டெல்லாம் ஒரு தியேட்டருக்கு போக முடியுமாடா..? நீ போய் பாரு.. அப்ப தெரியும்..!''


''அதுக்குன்னு.. ஐநூறு கேப்பியா..?''


''சரி.. ஐநூறு வேண்டாம்.. ஒரு நானூத்தி தொண்ணூறோ.. எம்பதோ குடு..!!'' எனச் சிரித்தாள்.


அவள் முதுகில் பட்டென அடித்தான்.

''போடி... ங்க.....''


''டேய்ய்ய்... குடுறா..! நான் சம்பளம் வாங்கி.. திருப்பி குடுத்தர்றேன்..! ஐநூறு குடு..!!'' அவள் சட்டென கூலாகிக் கேட்டாள்.


''நாளைக்கு தரேன்...'' என்றான்.


''இன்னிக்குத்தான்டா எனக்கு லீவு...! இன்னிக்குத்தான் சினிமா போக முடியும்..!!''


''என்ன படத்துக்கு போற..?''


'' ஏதோ ஒன்னு...!!''


''அவளும் வராளா..?''


''எவ..?''


'' உன் பிரெண்டு..?''


''எந்த பிரெண்டு..?''


''ஏய்.. லூசு.. அவதான்டீ.. உன் பிரெண்டு காக்கா மூக்கி..'' என அவன் சொல்ல.. பக் கெனச் சிரித்தாள் விழிமலர்.


''காக்கா மூக்கியா..?''


''ஆமா.. அவ மூக்கு வேற எப்படி இருக்குது..? பெட்டையா.. நீட்டமா.. ஆமா.. அவளுக்கு ஏன்டி மூக்கு அப்படி இருக்கு..?''


''அதுக்கு அவ என்னடா பண்ணுவா..? அதெல்லாம் பொறக்கறப்பவே.. இருக்கறது..!''


''அது.. என்னமோ.. அவள பாத்தா எனக்கு.. அவ மூக்கு மேலதான் கண்ணு போகும்..!!''


''ச்ச.. நீ பாக்க.. அவ ஒடம்புல எத்தனை எடம் இருக்கு..? அவ மூக்க மட்டும் ஏன்டா பாத்து.. அவள திட்ற..? மத்தபடி அவளுக்கு வேற என்னடா கொறைச்சல்..?''


''அய்யே... ஆளும்.. அவளும்..! சரி மூக்க விடு.. கண்ணாவது கொஞ்சம் லுக்கா இருக்கா.? அதும் இல்ல..! சின்ன கண்ணு..! வாயி.. அவ்வளவு அழகு போ..! அட்லீஸ்ட் ஒரு பொண்ண பாத்தா.. கிஸ்ஸடிக்கற லெவலுக்காவது தோணனும்..! இவ ஒதட்ட பாத்தா.. அந்த ஆசையும் வராது..! அப்பறம் மத்தபடியெல்லாம்.....''


''போ… டா..! நீ என்னமோ.. ரொம்பத்தான் அவள கலாய்க்கற..! அவ என்ன அவ்ளோ மோசமாவாடா இருக்கா..? அவ பின்னாலயும் எத்தனை பசங்க சுத்தறானுக தெரியுமா..?''


''அவனுக சுத்தறது ஒன்னும் அவ அழகுல மயங்கியா இருக்காது..''


''எதுவோ.. ஒரு பொண்ணு பின்னால பசங்க சுத்தினா.. அவ கெத்துதான்..!!''


''க்கும்..! மெச்சிக்கோ..! கழுதைக்கு பாவாடை கட்டியுட்டாலே.. பசங்க அத தூக்கி பாப்பானுக..! இவளுக்கு அது.. பொறப்புலயே இருக்கு..! அப்பறம் அலைய மாட்டானுகளா..?'' அவன் விட்டுக் கொடுப்பதாக இல்லை.


''அடப்பாவி..!!'' என்றாள், ''இப்ப ஏன்டா.. அவள இந்த ரேஞ்சுக்கு வார்ற..? உன்ன ஏதாவது பகைச்சுட்டாளா..? அப்படி இருந்தா என்கிட்ட சொல்லியிருப்பாளே..?''


''அதெல்லாம் ஒன்னும் இல்ல..'' எனச் சிரித்தான், ''அவள பாத்தா எனக்கு சிரிப்பாதான் இருக்கு..! அவ என்ன  நல்லாவாடி இருக்கா..? எனக்கு தெரிஞ்சு அவகிட்ட உருப்படியா இருக்கற ஒரே மேட்டர்.. அவ வாய்ஸ்தான்..! போன்ல பேசறப்ப அவ வாய்ஸ் கேக்க நல்லாருக்கு..! மத்தபடி.....''


''போ.. டா..! அவளுக்கு ஸ்ட்ரக்சர்லாம்.. அட்டகாசமா இருக்கும்..! என்ன அந்த மூக்கு ஒன்னுதான் அவ அழக கெடுக்குது .! அப்படியும் சொல்ல முடியாது.. அவகிட்ட நெறைய பேருக்கு புடிச்சதே.. அவ மூக்குதான்னு சொல்றத நானே கேட்றுக்கேன்..!''


''நெக்கல் பண்ணிருப்பானுக..!!''


''போ… டா...! சரி.. அவள விடு..! சினிமா எப்ப போலாம்..?'' என விசயத்துக்கு வந்தாள் விழிமலர்.


''அதுக்குத்தான் கேட்டேன்.. அவளும் வராளானு..?'' ஒரு பக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்து.. அவனது ஒரு காலைத் தூக்கி.. அவளது மடிமீது போட்டான்.


''நான் கூப்பிட்டா வந்துருவா..? ஏன்.. அவ வேண்டாமா..? பாவண்டா.. அவ..! அவள ரொம்ப ஓட்டாத..!'' அவனது காலை.. லேசாக நகர்த்தி வைத்தாள்.


''சரி.. சரி.. அவளயும் கூட்டிட்டு வரியா..?''


''எனக்கு அவ வந்தா நல்லாருக்குன்டா..! கூப்பிட்டுக்கலாம்.. நல்லா கம்பனி குடுப்பாடா..? ஜாலியா.. சிரிச்சு பேசிட்டே படம் பாக்கலாம்..!''


''சரீ... கூப்பிட்டுக்கோ..'' என்றான் ''ஆனா.. அவளுக்கெல்லாம் நான் செலவு பண்ண மாட்டேன்..!''


''அதெல்லாம் அவளே பண்ணிக்குவா..! நீ ஒன்னும் பண்ண வேண்டாம்..! எப்ப போலாம்..?''


''ஈவினிங் ஷோ...?''


''ம்..ம்ம். .! சரி..!!'' என்றாள் விழிமலர்..!!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக