வியாழன், 11 ஜூலை, 2024

மென் மோகம் -3

 டாக்டரிடம் பையனைக் காட்டி, மருந்து தடவி கட்டுப்போட்டு, அவன் கத்தக் கத்த ஊசி போட்டு, மாத்திரை மருந்துகளை வாங்கிக்கொண்டு அவனைத் தூக்கிக் கொண்டு குடைபிடித்து நடந்தபோது கமலிக்கு அலுப்பாகத்தான் இருந்தது. 


‘நாளைக்கு லீவ் போட வேண்டியிருக்குமோ?’ என்று கவலையாகவும் இருந்தது. 


குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் போயவிட்டதே என்று மாமியார் மீது ஒரு பக்கம் கோபம் வந்தது.  ஆனால் மாமியார் இங்கிருப்பதைக் காட்டிலும் இல்லாமலிருப்பதே கொஞ்சம் சுதந்திரமாக இருப்பதை உணர்த்தியது.


என்ன செய்வது, ஒரு நல்லது இருந்தால் கூடவே ஒரு கெட்டதும் இருக்கிறதே.!


ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போனபோது சுத்தமாக மழை விட்டிருந்தது.


பையனைப் படுக்க வைத்து விட்டு புடவை ரவிக்கை எல்லாம் அவிழ்த்து உள்ளாடைகளைக் கூட கழற்றிப் போட்டுவிட்டு நைட்டியைப் போட்டுக்கொண்டு பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தபோது மிகுந்த ஆயாசமாக இருந்தது.


பெண்ணையும் கூட்டி வந்து பூஸ்ட் கலக்கிக் கொடுத்து தனக்கும் டீ வைத்துக் குடித்தாள்.


கணவனுக்கு போன் செய்தாள். 

“என்னங்க?”


“சொல்லு?”


“எத்தனை மணிக்கு வருவீங்க?”


“வழக்கம் போலதான். பத்தாகும். ஏன்?”


“உங்க பையன் என்ன பண்ணி வெச்சிருக்கான் தெரியுமா?”


“என்ன பண்ணான்?”


“கீழ விழுந்து காலை ஒடச்சு வெச்சிருக்கான். வந்து மழைல நனஞ்சிட்டே ஆஸ்பத்ரி கூட்டிட்டு போயிட்டு வந்தேன். உங்கம்மா இல்லாம எவ்வளவு சிரமம் பாத்திங்களா?”


“நல்லா சொல்லு? காலை ஒடச்சு வெச்சிருக்கானா?”


“கீழ விழுந்துருக்கான். புண்ணாகிருச்சு. பெருசா இல்ல. கட்டுப்போட்டு ஊசி போட்றுக்கேன். இப்பதான் பூஸ்ட் கலக்கி குடுத்தேன். தோசை சுட்டுக் குடுத்து மாத்திரை குடுத்து தூங்க வெக்கணும்”


“வேற ஒண்ணும் இல்லயே?”


“உங்கம்மாகிட்ட சொல்லுங்க. சீக்கிரம் வந்தா நல்லது. இல்லேன்னா எனக்குத்தான் கஷ்டம். லீவும் போட முடியாது. என்ன பண்ணுறதுனே புரியல”


“அவசியம்னா லீவ் போட்டுத்தான் ஆகணும். குழந்தைக நமக்கு முக்கியம். அப்பறம்தான் வேலை”


“தெரியும். இதைத்தான் சொல்விங்கனு.. சரி வாங்க பேசிக்கலாம். எனக்கு தலை வலிக்குது. நானும் கொஞ்ச நேரம் படுக்கறேன். சீக்கிரம் வாங்க”


மழை விட்டாலும் காற்றின் குளிர் இதமாகத்தான் இருந்தது. குழந்தைகளை பக்கத்தில் படுக்க வைத்து அவளும் படுத்துக் கொண்டாள்.. !!


அன்றிரவு, தன் தோழியுடன் பேசும்போது சொன்னாள் கமலி.


“பெருசா எதுவும் இல்லை. கட்டுப் போட்டு ஊசி போட்டு வலிக்காம இருக்க மாத்திரையும் ஆயின்மென்ட்டும் குடுத்தாங்க. இப்ப வலி தெரியலை. சாப்பிட்டு நல்லா தூங்கறான். நாளைக்கு எப்படினு தெரியல. பையனுக்கு நல்லாருந்தா ஸ்கூலுக்கு அனுப்பி விட்டுட்டு வேலைக்கு வந்துருவேன். வலிக்குதுன்னானா கஷ்டம். நான் இருந்தே ஆகணும். என்ன கொடுமை பாரு..  இப்ப பாத்து இந்த மாமியாக்காரி மக வீட்டுக்கு போய் தொலைஞ்சுட்டா..”


“சொல்லிட்டியா அவங்களுக்கு?”


“இல்ல. சொன்னா அவ்வளவுதான். அவங்க இல்லேன்னா நாங்கள்ளாம் வாழவே முடியாதுங்கற மாதிரி பேசுவாங்க”


“எப்போ வராங்களாம்?”


“தெரியல. ஒரு வாரமாவது ஆகும்னு நெனைக்கறேன்”


“இதைச் சொல்லி கொஞ்சம் முன்னயே வரச் சொல்லலாம்ல? தனியா நீ என்ன பண்ணுவே? ஒரு வாரம் லீவும் போட முடியாது”


“கஷ்டம்தான். அவருகிட்ட சொல்லி ஏதாவது செய்யணும்”


பேசி முடித்து, “சரி நான் தூங்கறேன். எதுன்னாலும் காலைல போன் பண்றேன்” என்றாள். 


“ஆமா கேக்க நெனைச்சேன். அவனோட பேரு கேட்டியா?”


“எவனோட பேரு?”


“அதான் நம்மளை ட்ராப் பண்ணானே.. ஆஸ்பத்ரில கொண்டு வந்து விட்டானு சொன்னியே.. அவன் பேரு”


சட்டென ஒரு நொடி தடுமாறிப் போனாள் கமலி.

“தெரியலயே.. பேரு கேக்கவே மறந்துட்டேன்.” 


பெயர் கேட்டுத் தெரிந்து கொண்டதை அவளிடம் சொல்ல இவளுக்கு ஏனோ மனசு வரவில்லை. பேருக்கே இப்படி, போன் நெம்பரைச் சொன்னால்…


“விடு நம்ம ஆபிஸ் லைன்ல போக வர இருக்கற ஆளுதான? மீட் பண்ணி பிரெண்டாக்கிக்கலாம். இப்படிப்பட்ட ஆளுங்க நட்பு நமக்கு பல நேரத்துல உதவியாக்கூட இருக்கும்” சிரித்தபடி சொன்னாள் தோழி.


“அட ச.. இதுலென்ன உதவி? இப்பல்லாம் உதவிங்கற பேர்ல தொல்லை பண்ற ஆளுங்கதான் அதிகம். அதும் எனக்கென்னவோ அவங்களுக்கு கல்யாணமாகியிருக்கும்னுதான் தோணுச்சு”


“கல்யாணம் ஆகியிருக்கும்ங்கறியா?”


“ஆமா. ஆளப் பாத்தா அப்படித்தான் தெரிஞ்சுது.”


“என்ன வயசிருக்கும்னு நெனைக்கற?”


“மொத மழைக்கு வந்து ஆபீஸ்ல நிக்கறப்ப பாத்தமே.. ஒரு முப்பது பக்கம் இருக்கலாம்”


“ஆனா என்னவோ எனக்கு கல்யாணம் ஆன மாதிரி தோணல”


“எப்படி சொல்ற?”


“கல்யாணமான ஆளுக பார்வை பேச்சு வேற மாதிரி இருக்கும்”


“கல்யாணம் ஆனமாதிரிதான். எனக்கு தோணுது. எதுக்கு வம்பு? பேசாம ஒதுங்கிக்க.. கண்டதெல்லாம் நெனைக்காத”


“அட சே.. நான் என்ன கண்டத நெனைச்சேன்? கல்யாணமாகத பசங்கன்னா கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து ஹெல்ப் பண்ணுவாங்க. அதான்.. மத்தபடி நீ சொல்ற மாதிரி கல்யாணம் ஆனவன்னா.. ரைட்தான். பாவம்.. அவனோட வாழ்க்கைல வெளையாடக் கூடாது”


“ஏன்.. உனக்கு இப்படி புத்தி போச்சு?”


“போடி.. இப்ப அப்படி என்ன சொல்லிட்டேன் நான்?”


“சரி சரி.. டென்ஷனாகாத விடு” சிரித்து, “மாமா கூட டூயட் பாடிட்டு படு”


“இன்னிக்கு டூயட் மட்டும் இல்ல”


“பின்ன?”


“மேட் பண்ணியே ஆகணும். இந்த மழைக்கும் அதுவும் செம மூடா இருக்கு”


“என்ஜாய்..”


“நீ என்ன செய்யப் போற?”


“ப்ச்..  அப்படி எந்த ஐடியாவும் இல்ல”


“சும்மா அலட்டிக்காம ஒரு மேட் போடு.. செம கிக்கா இருக்கும். மழை சீசன்தான் அதுக்கெல்லாம் ஏத்த சீசன்.. ஷ்ஷ்.. என்ன ஒரு க்ளைமேட்? செமையா என்ஜாய் பண்ணலாம்”


“நீ இப்பவே செம மூடுலதான் இருக்க போல?”


“ஆமா.. பெட்ல ட்ரெஸ்ஸே இல்லாம படுத்து செமையா என்ஜாய் பண்ணிட்டு அந்த சுகத்தோட அப்படியே கட்டிப் புடிச்சுப் படுத்து தூங்கனும்”


“செய்..”


சட்டென கட் பண்ணி விட்டாள் கமலி. தோழி சொன்னதைக் கேட்டு அவளுக்கும் மனசு தவிக்கத் தொடங்கியது. 


‘உனக்கு மட்டும்தான் புருஷன் இருக்கானா என்ன? போடி இவளே’


என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக