வியாழன், 18 ஜூலை, 2024

மென் மோகம் -4

 நிருதி வீட்டை அடைந்தபோது மழை ஓய்ந்து லேசாக குளிரத் தொடங்கியிருந்தது. காற்றின் ஈரம் அவனைச் சிலிர்க்கச் செய்தது.


வீட்டின் முன் மழைநீர் தேக்கம் இல்லாத இடமாகப் பார்த்து பைக்கை நிறுத்தியபோது வாசலில் இருக்கும் மழை ஈரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தபதபவென ஓடிவந்தான் அவனது அக்கா மகன். 


“டேய்.. டேய்” என்று கத்தினான் நிருதி. 


அவன் சடன் பிரேக்கிட்டதைப்போல நின்று கேட்டான். 

“என்ன மாமா”


“மழை ஈரம் டா.. விழுந்து தொலைக்கப் போறே”


“விழ மாட்டேன்”


“எங்க போற இப்ப?”


“கடைக்கு.. பிஸ்கெட் வாங்க” சொல்லிவிட்டு மீண்டும் தன் தபதப ஓட்டத்தை தொடங்கினான். 


“மெல்லப் போடா” கத்திச் சொன்னான்.


திறந்திருந்த கதவு வழியாக உள்ளே போய் கதவோரம் செருப்பைக் கழற்றிவிட்டபோது கவுன் போட்ட குட்டிப் பெண் தத்தக்கா பித்தக்கா என்று ஓடி வந்து அவன் பேகைப் பிடித்தது.


“குது மாஆமாஆ”


“குது மாமா இல்ல.. குடுங்க மாமா” சிரித்தபடி, தன் பேகைக் கழற்றி அவள் தோளில் மாட்டிவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றினான்.


வீட்டுக்குள் கரண்ட் இல்லை. 


டிவி பார்க்க வழியில்லாத அம்மா, அப்பா, அக்கா மூவரும் டீபாய் மீது வைக்கப்பட்டிருந்த அக்காவின் போனில், யூட்யூபில் இருக்கும் சீரியலின் கடந்த எபிசோடுகளை மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அக்காவைப் பார்த்து, “இது வேற பழக்கி விட்டுட்டியா?” என்றான். 


சிரித்த அக்கா, “கரண்ட் இல்ல. போய். ரெண்டு மணி நேரமாகுது” என்றாள். 


“மழை வந்தே ஒருமணி நேரம்கூட ஆகல”


தோளில் மாட்டிய பேகை தரையில் தேய்த்தபடி இழுத்துக் கொண்டு வந்த பேத்தியைப் பார்த்த அம்மா சிரித்து,

“என்னடா தங்கமயிலு அது? ஆபீஸ் போயிட்டு வரீயா?” எனக் கேட்டாள். 


குழந்தை தலையை ஆட்டிக்கொண்டு தன் அம்மாவிடம் போனது. 

“அம்மா தீ..”


“டீ வேணுமா உனக்கு?”


“எக்குல்ல மாமாகூ”


“உங்க மாமனுக்கு டீ வேணுமா?” அக்கா எழுந்தாள். “நனைஞ்சுட்டியாடா?”


“லேசா.. காத்து நல்லா ஜில்லுனு இருக்கு. வண்டில வந்ததுக்கு குளுருது”


ஹெல்மெட் போன் பர்ஸ் வண்டிச் சாவி எல்லாம் டேபிள் மீது வைத்து விட்டு சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு துண்டு எடுத்து ஈரம் துடைத்துக் கொண்டு பேண்ட்டைக் கழற்றி சார்ட்ஸ் போட்டுக்கொண்டபோது கடைக்குப் போன அக்கா பையன் செருப்புக்கள் சத்தமிட ஓடி வந்தான்.


நிருதி பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து அக்கா கொடுத்த டீயை வாங்கிக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தான்.


அக்கா, “மச்சான் போன் பண்ணாரு”


அவளைப் பார்த்தான்.


“எப்ப வரீங்கனு கேட்டாரு”


“என்ன சொன்ன?”


“தம்பி வந்தாத்தான் தெரியும்னு சொன்னேன்”


“ரெண்டு நாள் இருந்துட்டு போ”


“வந்தே ரெண்டு நாள் ஆச்சு”


“ஞாயித்துக்கெழமை வரை இரு. அவருக்கு சோத்துக்கா கவலை?”


“பையனும் புள்ளையும் இங்கருக்காங்கல்ல?”


“அவரை வேணா சனிக்கெழமை இங்க வரச் சொல்லு?”


“ஏன் பணம் ஆகலயா?”


“ஆகிரும் நாளைக்கு”


“சரி அவரையே வரச் சொல்றேன்”


“முடிஞ்சவரை வட்டியை குடுத்துர சொல்லு?”


“எவ்வளவு?”


“வழக்கம்போலதான். பிரெண்டுங்கறதால கொஞ்சம் கம்மியா தரான். அதை நான் கட்ட முடியாது. என் கடனே இன்னும் கட்டி முடியாம இருக்கு”


“சொல்லிர்றேன். அதெல்லாம் கொடுத்துருவாரு”


“வரப்ப அங்கருந்து வீட்டுக் கோழி ஒண்ணு புடிச்சுட்டு வரச் சொல்லு”


படுக்கைக்குப் போனபோது நிருதிக்கு கமலியின் நினைவு இயல்பாக வந்து போனது. 


அவளின் வட்ட முகம் கொண்ட குள்ள உருவமும் தடித்த உடலும் முந்தானைச் சரிவில் அவன் கண்ட நன்கு கொழுத்துருண்ட மென்மார்புகளும் அவன் மனக்கண்ணில் தோன்றி அவனைக் கிளர்ச்சியுற வைத்தது.


மழை, எவ்வளவு இனிய நினைவுகளைக் கொடுக்கிறது.. !!


மழை ஈரத்துடன் பார்த்து ரசித்த அவள் பெண்மையின் மீதான ஈர்ப்பு அவனுள் சலன அலையாக ஓடியது.  


அவள் திருமணமானவள் என்பது அவனுக்குத் தடையாக இருக்கவில்லை.


 அவள் மொபைல் நெம்பரை வாட்சப்பில் அடிக்கடி செக் பண்ணிக் கொண்டே இருந்தான். அவள் ஆன்லைனில் வரவே இல்லை.  


வாட்ஸப் டிபியில் அவளின் இரண்டு குழந்தைகளையும் இணைத்து ஒரு படத்தை வைத்திருந்தாள்.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக