சம்பத் வீட்டை அடைந்த போது தெருவெல்லாம் இருள் சூழ்ந்திருந்தது. மின்சாரம் இல்லை. மேகம் கருக்கொண்டு மழை தூரத் தொடங்கியிருந்தது. சலசலவென சாக்கடை சத்தம்.
சிறிய வீடு. சிறிய காம்போண்ட்.
வீட்டின் முன்பாக பைக்கை நிறுத்தி இறங்கினான். தூரல் மழையில் நனைந்தபடி ஓடி கேட்டைத் திறந்து பைக்கைத் தள்ளிச் சென்று உள்ளே நிறுத்தினான்.
கேட்டைச் சாத்தவில்லை.
ஹெல்மெட்டைக் கழற்றி தலை முடியை உதறிக் கொண்டான்.
சட்டை மீது படிந்திருந்த மழைத் துளிகளை தட்டி விட்டுக்கொண்டான்.
காற்றோடு மழை கை கோர்த்துக் கொண்டிருந்தது.
சாவியை எடுத்து வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
வீட்டுக்குள் நன்றாக இருள் கவிந்திருந்தது. எங்கும் இருள்.
மொபைலை எடுத்து டார்ச்சை ஆன் செய்தான். டேபிள் அருகே நடந்து ஹெல்மெட்டை டேபிள் மீது வைத்தான்.
கதவைச் சாத்த திரும்பி வந்தபோது ஒரு பெண் எங்கிருந்தோ, தப் தப்பென செருப்புகள் சத்தமெழுப்ப ஓடிவந்து கேட்டைத் தாண்டி உள்ளே வந்தாள்.
அவள் வீட்டுக்குள் வரவில்லை. வீட்டுச் சுவர் ஓரமாக ஒதுங்கி நின்றாள்.
கதவு வழியாக வெளியே பாய்ந்த மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அவளைப் பார்த்தான்.
குண்டுப் பெண் அவள். முகம் தெரிந்தது. சற்று பெரிய தலை. உருவம்கூட பெரியதாகத்தான் இருந்தது. புடவை கட்டியிருந்தாள்.
பைக் நின்ற இடத்தை விட்டு நகர்ந்தாள். அவன் பார்வையிலிருந்து மறைந்தாள்.
லேசான திகைப்புடன் எட்டிப் பார்த்தான்.
அவள் ஜன்னல் அருகே நகர்ந்து சுவர் ஓரமாக ஒண்டி நின்றபோதுதான் மழைத் துளிகள் பெரியதாகியிருப்பதை கவனித்தான்.
அந்தப் பெண் கட்டியிருந்த புடவை நனைந்திருந்தது. தலைக்கு மேல் முந்தானையைப் போட்டு குடையாக்கியிருந்தாள். ஒதுங்கி நின்றபின்னர் கதவு வழியாக அவனை எட்டிப் பார்த்தாள்.
அவன் கதவைச் சாத்தவில்லை. ஜன்னலையும் லேசாக திறந்து வைத்தான். காற்று அவ்வளவு பலமாக இல்லை. உடம்பைச் சிலிர்க்கச் செய்யும் குளிர்ந்த காற்று வீசியது.
ஜன்னல் வழியாக இரண்டாம் முறையாக அந்த முகத்தைப் பார்த்தபோது, சற்று எளிதாகி இயல்பாக அந்தப் பெண்ணின் குண்டு முகத்தைப் பார்த்தான்.
இவ்வளவு நேரமாக அமைதியாகத் தூரிக் கொண்டிருந்த மழை இப்பொது படபடவென சத்தம் எழுப்பியது. கூடவே இடியோசை, பளிச்சென்று மின்னல்.
அந்தப் பெண்ணின் வாயிலிருந்து மெலிதான ஒரு பய ஒலி எழுந்தது.
அவள் சுவற்றோரமாக ஒண்டியிருந்தாலும் அவளால் நனையாமல் நிற்க முடியாது என்பதை உணர்ந்த சம்பத் அவள் பக்கமாக எட்டிப் பார்த்தான்.
அவள் புடவைத் தலைப்பால் உடம்பைப் போர்த்தி, இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்காக இறுக்கிக் கொண்டு உடம்பைக் குறுக்கிக் கொண்டிருந்தாள்.
அவள் மீது எழுந்த உணர்வு பரிவா அல்லது பாவமா? அல்லது பெண் என்கிற இச்சையா? அவனுக்கே புரியவில்லை. ஆனால் அவனுக்குள் ஏதோ ஓர் உணர்வு உண்டாகி அவளுக்கு பாதுகாப்பு அளிக்கத் தூண்டியது.
"பெரிய மழையா வரும் போலருக்கு" அவளைப் பார்த்துத்தான் சொன்னான்.
சத்தம் கேட்டு அந்தப் பெண் இவனை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.
மெலிதான குரலில் அவள் என்னவோ சொன்னபோது மீண்டும் இடி இடித்தது. இடிச் சத்தத்துக்கு நடுவில் அவள் குரல் தெளிவாகக் கேட்கவில்லை.
இருவரும் சில நொடிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவள் மீண்டும் ஏதாவது சொல்வாளோ என்று அவனும், அவன் ஏதாவது சொல்வானோ என்று அவளும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அப்படி எதுவும் நிகழவில்லை.
அவளை என்ன சொல்லி உள்ளே அழைப்பது என்கிற தயக்கம் அவனுக்கு நிறையவே இருந்தது.
‘மழைக்கு ஒதுங்க வந்திருக்கும் ஒரு பெண். முன்பின் அறிமுகமில்லாதவள். அவளை எப்படி உள்ளே அழைப்பது. நான் அழைக்கும் நோக்கத்தை அவள் தப்பாக கற்பிதம் செய்து கொண்டால் என்ன செய்வது? பெண்கள் எல்லாம் அப்படிச் சொல்லப்பட்டுத்தான் வளர்க்கப் பட்டிருக்கிறார்கள். தனியாக இருக்கும் ஆணிடம் பழகாதே. ஒரு பெண் தனியாகக் கிடைத்தால் அவளைக் கற்பழித்து விடுவான்’
ஆனால் சம்பத்துக்கு இப்போது அவளைக் கற்பழிக்கும் எண்ணம் இல்லை. அவளைப் பார்த்தால்.. பெண் என்கிற உணர்வு எழுகிறது. சிறிது ஆசை கூட வருகிறது. ஆனால் அது பலாத்காரம் செய்யும் அளவுக்கு இல்லை.
இந்தத் தெருவிலும், வேலை செய்யுமிடத்திலும் அவனிடம் நட்பாக, கிண்டலாகப் பேசிப் பழகும் பெண்களும் நிறையப் பேர் உண்டு.
அவர்களில் ஒருத்தியைக் கூட கற்பழிக்கும் எண்ணம் அவனுக்கு எழுந்ததே இல்லை.!
இப்போது அவளுக்கு உதவும் நோக்கில் அவளை உள்ளே அழைப்பதை அவள் தவறாகப் புரிந்து கொள்வாளோ என்கிற தயக்கம் அவனிடம் நிறையவே இருந்தது.
காற்று குபீரென வீச, மழைச் சாரல் சரேலென்று வந்து அவளைத் தாக்கியது.
சட்டெனக் குறுகி ஒண்டினாள்.
"அங்க நின்னாலும் நனைவீங்க" துணிந்து சொன்னான்.
உடம்பைக் குறுக்கிக் கொண்டு ஜன்னல் அருகே நெருங்கி வந்து நின்றாள்.
அவனிடம் அடைக்கலம் கிடைக்குமா என்பதைப்போல ஜன்னல் வழியாக இருள் கவிந்திருந்த வீட்டுக்குள் பார்த்தாள்.
வீட்டுக்குள் ஹாலில் மட்டும் எமர்ஜென்ஸி லைட் எரிந்து கொண்டிருந்தது.
“அங்கயே நின்னு நனையப் போறீங்களா?” நேராகவே கேட்டான்.
அதற்கு அவள் வாயைத் திறந்து பதில் சொல்லவில்லை. ஆனால், ‘இல்லை’ என்பதைப்போல தலையை ஆட்டினாள்.
"அப்ப.. உள்ள வந்து நில்லுங்க" லேசான தயக்கத்துக்குப்பின்தான் சொன்னான்.
தலையை ஆட்டிவிட்டு அங்கேயே நின்றாள்.
ஜன்னலில் இருந்து நகர்ந்து சென்றான், லேசாகத் திறந்திருந்த கதவை நன்றாகத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தான்.
தெரு இருண்டிருந்தது. மழை படபடவென சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. காற்று சரேல் சரேலென சாரலை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் பளிச் பளிச்சென மின்னிக் கொண்டிருந்தது.
மழை இன்னும் பலமாகப் பெய்யும் என்பதில் சந்தேகமில்லை.
அந்தப் பெண்ணும் நகர்ந்து கதவருகே வந்தாள்.
அவன் வழிவிட்டு ஒதுங்கினான்.
"உள்ள வாங்க"
செருப்பை வாசற்படியருகே கழற்றிவிட்டாள். ஒரு பக்கமாக உடம்பைத் திருப்பி உள்ளே வந்தாள்.
அவள் குண்டாக மட்டும் இல்லை. நல்ல உயரமாகவும் இருந்தாள். நாட்டுக் கட்டைதான். அவளின் உடல் தோற்றம்கூட கிராமத்துப் பெண்ணைத்தான் நினைவு படுத்தியது.
அவளிடம் அப்படி ஒன்றும் நாகரீகம் தெரியவில்லை.
உள்ளே வந்தபோது அவள் நன்றாக நனைந்திருப்பதை கவனித்தான். அவள் தலையிலிருந்த புடவைத் தலைப்பு வழியாக ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.
மழையில் நனைந்த பெண்ணின் புடவை வாசம் கலந்த பூ வாசனை அவனுக்குள் மெலிதான ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது.
அவள் உள்ளே வந்தபின் கதவைச் சாத்தி வைத்தான். தாளிடவில்லை.
விலகி பெட்ரூம் சென்று இரண்டு துண்டுகளை எடுத்து வந்தபோது முக்காடாகப் போட்டிருந்த புடவைத் தலைப்பை எடுத்துவிட்டு அதே புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
ஒரு துண்டை அவளிடம் கொடுத்தான்.
“தொடைச்சுக்குங்க”
"தேங்க்ஸ்ங்க" என்றாள். குரல் சற்று கனமாக இருந்தது.
துண்டை வாங்கி அவசரமாக ஈரம் துடைத்தாள்.
தாளிடாத கதவை விலக்கித் தள்ளிய காற்று சிலீரென வீசியது. சாரல் உள்ளேவரை அடித்தது.
சட்டென்று கதவைச் சாத்தி தாளிட்டுவிட்டு அவளைப் பார்த்தான்.
மார்பில் அவள் புடவை தளர்ந்திருந்தது. ரவிக்கையின் இணைவில் மெலிதான மார்புப் பிளவு பிதுங்கித் தெரிந்தது. கழுத்தில் தாலிக் கயிறும் செயினும் தெரிந்தது. இடுப்புப் பகுதியில் பிதுங்கிய மடிப்புத் தெரிந்தது.
அழகான பெண்தான். ஆனால் கொஞ்சம் குண்டான, உயரமான, அழகான பெண். கண்கள் பெரியது. மூக்கு பெரியது. உதடுகள் பெரியவை. கன்னங்கள் கொழுத்தவை. மார்புகள் பெரிய பெரிய பெரியவை.
முகம் துடைத்து நெற்றிப் பொட்டை சரி செய்துகொண்டு அவனைப் பார்த்தாள்.
அவள் பார்வையில் ஒரு நன்றி உணர்ச்சிதான் தெரிந்ததாக நினைத்தான். என்னைக் கற்பழிக்கப் போறியா? என்கிற கேள்வி தெரியவில்லை.!
‘நீ அழகா இருக்க. ஆனா கவலைப் படாத, உன்னைக் கற்பழிக்க மாட்டேன். எனக்கு நன்றி சொன்னா… அதை முத்தமா குடு. ஏன்னா.. பெண்ணே நீ அழகா இருக்க’
“டீ குடிக்கறீங்களா?” அவளைக் கேட்டான்.
“ம்ம்” மூக்கைத் தேய்த்துக்கொண்டு சம்மதமாக தலையை ஆட்டினாள்.
“தலையை நல்லா தொடைச்சுக்குங்க. ரொம்ப நனஞ்சுட்டிங்க” எனச் சொல்லிவிட்டு, ஒரு மெழுகுவர்த்தியை எடுத்துப் பற்ற வைத்து டேபிள் மீது நிறுத்திவிட்டு மொபைல் டார்ச்சை கையில் எடுத்துக்கொண்டு கிச்சனுக்குச் சென்றான்.
ஃப்ரிட்ஜில் பால் இருந்தது. பால் கவரை எடுத்து அடுப்பின் மீது வைத்துவிட்டு சிலிண்டரை ஆன் செய்து லைட்டரை எடுத்துக் கிளிக்கி அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு டீ பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தான்.
பால் கவரின் நுனியை பல்லால் கடித்து ஓபன் செய்து பாத்திரத்தில் ஊற்றினான்.
இருவருக்குத் தேவையான அளவு பாலை ஊற்றி அதில் கொஞ்சமாகத் தண்ணீர் கலந்தான்.
அடுப்பை வேகமாக எரிய விட்டு மீதமிருந்த பாலை மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு டீத்தூளை எடுத்தபோது சமையலறை வாயிலில் நிழலாடியது.
திரும்பிப் பார்த்தான்.
துண்டை புடவைக்கு மேலாக மார்பில் மறைத்துப் போட்டபடி நின்றிருந்தாள். அவள் தலைமுடி ஏகத்துக்கும் கலைந்து போயிருந்தது.
“என்னங்க ஏதாவது வேணுமா?” அவளைக் கேட்டான்.
ஒற்றை விரலைக் காட்டினாள்.
“பாத்ரூம்..”
சிரித்தபடி முன்னால் சென்று காட்டினான்.
“போய்ட்டு வாங்க. இந்தாங்க டார்ச்” மொபைலை எடுத்துக் கொடுத்தான்.
கனிந்த முகத்தில் நன்றிப் புன்னகையைக் காட்டிவிட்டு மொபைலை வாங்கிக் கொண்டு ஈரப் புடவை சரசரக்க நடந்து போனாள்.
அவள் அசைந்து செல்வதை சிறிது ஆர்வமிகுதியுடன் பார்த்தான்.
நிழல் கலந்த அந்த உருவத்தின் பின்னழகு மிகக் கவர்ச்சி.!
‘வேண்டாம். அவள் இன்னொரு ஆணின் மனைவி. பிள்ளைகள் கூட பெற்றிருக்கலாம்!’
திரும்பி அடுப்பின் முன் நின்று டீத்தூள் போட்டு சர்க்கரை போட்டு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டுப் போய் ஜன்னல் வழியாகப் பார்த்தான்.
மழையும் காற்றும் அதிகமாகியிருந்தது. அவ்வப்போது பளீர் பளீரென மின்னல் வெளிச்சமடித்துக் கொண்டிருந்தது.
ஜன்னல் வழியாக சாரல் காற்று வீசியது.
அவள் சில நிமிடங்கள் கழித்து வந்தாள். துண்டு தோளில் இருந்தது. புடவையை அவிழ்த்துக் கட்டியிருக்க வேண்டும். புடவையைத் திருத்தமாகக் கட்டியிருந்தாள். கலைந்த தலை முடியை ஒழுங்கு படுத்தியிருந்தாள்.
“வீட்ல யாருமில்லையா?” அவனைக் கேட்டாள். அவள் குரல் இப்போது கவர்ச்சியாக் கேட்டது.
“உங்களை தவிர.. நான் மட்டும்தான்” மெல்லிய குறும்புடன் சொன்னான்.
இடியோடு பளிச்சென்று மின்னியதை ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.
“மழை பெருசாத்தான் வருது” குண்டு மூக்கை தேய்த்துக்கொண்டே சொன்னாள்.
“நல்ல மழைதான்” அவனும் சொன்னான்.
“ஜன்னலையும் சாத்திருங்க. வீட்டுக்குள்ள தண்ணி வருது” அவளே சொன்னாள்.
ஜன்னல் கதவைச் சாத்திவிட்டு அவள் பக்கம் திரும்பினான். டார்ச் எரிந்து கொண்டிருந்த மொபைலை அவனிடம் கொடுத்தாள்.
“தனியாத்தான் இருக்கீங்களா?” அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
“ஒரு ஆள் இருந்தா.. அப்படித்தான் சொல்லுவாங்க. ஆனா இப்ப நான் தனியா இல்ல. என் கூட ஒரு அதி சுந்தர பெண் இருக்காங்க”
அவள் புன்னகைத்தாள். கொஞ்சம் எளிதாகி விட்டதைப் போலிருந்தது. கூடவே கொஞ்சம் நட்பாகவும்.
“ஒய்ப் இல்லையா?” அவனைக் கேட்டாள்.
“இல்ல”
மீண்டும் மூக்கைத் தேய்த்து விட்டு சர்க்கென உறிஞ்சிக் கொண்டாள்.
அவளுக்கு மூக்கில் புருபுருப்பு உண்டாகியிருக்க வேண்டும். ஜலதோசம் பிடிக்கப் போவதற்கான அறிகுறி. அடுத்தது தும்மல் போடலாம்.
தைலம் கொடுக்க வேண்டும். எங்கே வைத்தேன் அதை.?
“அப்பா அம்மா?” அவனைக் கேட்டாள்.
“இப்போதைக்கு அப்படி யாருமில்ல.”
“ஒய்ப்.. ஊருக்கு போயிருக்காங்களா?”
“ஒருவேளை ஒய்ப் இருந்தா.. எப்படினு தெரியல. ஆனா எனக்கு ஒய்ப்னு யாரும் இல்ல”
“ஓஓ.. ஸாரி”
“உங்களை மாதிரி.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல”
சிரித்தபோது அவள் கன்னங்கள் குழைந்தன.
“எனக்கு ஹஸ்பண்ட் இல்ல”
லேசான திகைப்புடன் அவள் கழுத்தைப் பார்த்தான். தாலி இருந்தது.
“கழுத்துல தாலி போட்றுக்கீங்க?”
“ஹஸ்பெண்ட் இல்லேன்னுதான் சொன்னேன். செத்துட்டாருனு சொல்லல”
“ஒ.. ஓ” சிரித்தான். “ஐ ம் ஸாரி”
அவளும் சிரித்தாள்.
"எனக்கு வேண்டியவங்க இங்க பக்கத்து ஊருல இருந்தாங்க. அவங்களை பாக்கலாம்னு.. ஒரு காரியமா தேடிட்டு வந்தேன். பாக்க முடியல. இப்ப அவங்க ஊரை விட்டே போய்ட்டாங்க போலருக்கு. யாரைக் கேட்டாலும் அப்படி யாரும் இங்க இல்லையேன்னுதான் சொல்றாங்க. அதனாலதான் எதுக்கும் இந்தப் பக்கம் விசாரிக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ள படபடனு மழை வந்துருச்சு. நனைஞ்சுட்டேன். கரண்ட் வேற இல்ல.. எங்க போறதுனு தெரியல.. அப்பதான்.. நல்லவேளை.. நீங்க ஹெல்ப் பண்ணீங்க"
"அப்படியா? யாரைத் தேடி வந்தீங்க?"
"ராகவி மதுசூதணன்னு பேரு. புருசன் பொண்டாட்டி. அவங்களுக்கு ஒரே பொண்ணு.. பேரு சாலினி. அவரு ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போய்ட்டிருந்தாரு"
அப்படி யாரையும் அவனுக்குத் தெரியாது.
“வீட்டு அட்ரஸ் தெரியலையா?”
“ரொம்ப காலாமாச்சுங்க அவங்களை பாத்து. பத்து வருசமே இருக்கும். அப்ப அவங்க குடுத்த அட்ரஸை தொலைச்சுட்டேன். போன் நெம்பரும் இல்ல. இப்ப அவங்களை பாத்தே ஆக வேண்டிய அவசியம் வந்துச்சு. அதான் தேடிப் பாக்கலாம்னு ஊர்லருந்து வந்தேன். கண்டுபிடிக்க முடியல”
“எந்த ஊரு நீங்க?”
அவள் சொல்லத் தயங்கினாள்.
“கட்டாயமில்ல. விருப்பமில்லேன்னா வேண்டாம்.” என்றான்.
“கொடிவேரி..” மெதுவாகச் சொன்னாள்.
“ஓஓ.. சத்தியா?”
“வந்துருக்கீங்களா?”
“கொடிவேரி வந்துருக்கேன். டேம்க்கு”
“கொடிவேரில பஸ் விட்டு எறங்கி கொஞ்சம் தள்ளிப் போனா.. இட்டேரி ஒண்ணு வரும். அது பக்கத்துலதான் இருக்கேன். இன்னொரு தடவை வந்தா வீட்டுக்கு வாங்க”
“கண்டிப்பா..”
“நீங்களே தனியா சாப்பாடெல்லாம் செஞ்சுக்கறீங்களா?”
“கிட்டத்தட்ட அப்படித்தாங்க. அதிகமா கடைலதான். எப்பவாவதுதான் வீட்ல”
புரிந்து கொண்டதைப் போல தலையை ஆட்டினாள். கலைந்த நெற்றி முடியை ஒதுக்கிக் கொண்டாள். கன்ன மேடுகளை தேய்த்துக் கொண்டாள்.
“இருங்க டீ என்னாச்சுனு பாப்பம்” என்றுவிட்டு கிச்சனுக்குப் போனான்.
பாத்திரத்தின் விளிம்புவரை டீத்தூள் நுரைத்துப் பொங்கியிருந்தது.
ஒரு ஸ்பூன் எடுத்து அதை வழித்து சரிசெய்தபோது அவளும் மெல்லடி வைத்து உள்ளே வந்தாள்.
“டீ மணக்குது” மூச்சுக் காற்றை இழுத்து விட்டுக் கொண்டு மெலிதான புன்னகையுடன் சொன்னாள்.
அவள் பேச்சும் செயலும் மிகவும் நட்புணர்வாக இருந்தது. அவளை அவனுக்கு மிகவும் பிடித்தது.
‘ஓய் குண்டுப் பெண்ணே’ என்று கூப்பிடத் தோன்றியது. ‘எனக்கு ஒரு முத்தம் குடுப்பியா?’ என்று கேட்கத் தோன்றியது.
இந்த மழைதான் என்னை இப்படி நினைக்க வைக்கிறது.!
“காரணம் டீ தூள்ங்க” அவள் முகம் பார்த்துச் சொன்னான்.
“டீ வெச்சு பழக்கமில்லேன்னா டீ மணக்காது”
“அப்படியா?” தினமும் டீ வேண்டும். வைத்துக் குடிப்பான்.
“அப்ப.. சமையலும் நல்லாதான் செய்வீங்க?” சற்று புகழ்ச்சியாகச் சொன்னாள்.
“சமையல்லாம் அடிக்கடி செய்ய மாட்டாங்க..”
“என்ன வேலைக்கு போறீங்க?”
“கம்பெனிங்க. எலக்ட்ரீசன்”
“நானும் ஒரு பக்கம் வேலைக்கு போறேன்” அவளே சொன்னாள்.
“என்ன வேலை?”
“கடைக்கு. பர்னிச்சர் ஷோ ரூம்” அருகில் வந்து டீயைப் பார்த்தாள்.
“டீ ஆகிருச்சு. நீங்க இந்தப் பக்கம் வாங்க. நான் வடிச்சு ஆத்தி தரேன்” என்றாள்.
அவள் உரிமையாகச் சொன்னதைக் கேட்டு அவன் ஒதுங்கிக் கொண்டான்.. !!
தொடர்ச்சி....
https://play.google.com/store/apps/details?id=com.niruti.books