புதன், 4 டிசம்பர், 2024

வயசுக்கு வசந்த விழா

 


 'ஏ.. என்ன பயமா இருக்கா ?' அவனைக் கேட்டாள்


 'ம்கூம். ' தலையாட்டினான்.


 'அப்ப வா நடந்து..'


ஒரு சிறிய சந்துக்குள் அழைத்துப் போனாள்.


 இரண்டு பக்கமும் நெருக்கமான வீடுகள். அங்கே ஒரு பெரிய குப்பைத் தொட்டி இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு காலி மனை. கொஞ்சம் இடிந்து சிதிலமாகியிருந்தது. அதன் உள்ளே இருந்த பைப்பில் இருந்து நீர் ஒழுகிக் கொண்டிருந்தது. 


அந்த பைப் அருகே போய் கோணிப் பையை திறந்து உள்ளிருந்து ஒரு தண்ணீர் கேனை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.


 'இதுல தண்ணி புடிச்சு வெய்..' 


அவன் கை நீட்டி வாங்கினான். 


'இங்கயே இரு. நான் போய் வாங்கிட்டு வரேன்' என்று கோணிப் பையை கீழே வைத்து விட்டு எதிர் சந்துக்குள் புகுந்து மறைந்து காணாமல் போனாள் அவள்.


 நவ்கி பைப்பைப் பார்த்தான். தண்ணீர் சொட்டுச் சொட்டாக வந்து கொண்டிருந்தது. அதை ஓபன் பண்ண முடியாது. 


வாட்டர் கேன் மூடியை திறந்தான். கீழே குத்துகாலிட்டு உட்கார்ந்து தண்ணீர் பிடித்தான். வாட்டர் கேன் நீர் நிரம்ப நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.


 அது நிரம்பிய நேரம் அவள் கையில் ஒரு பார்சலுடன் அவனிடம் வந்தாள் அவள். ஒரு ஓரமாக உட்கார்ந்து,

 'வா..' என அழைத்தாள். 


தண்ணீர் கேனுடன் அவள் பக்கத்தில் போனான்.


 கீழே உட்கார்ந்திருந்த அவள் பொட்டலத்தைப் பிரித்தாள்.

 'உக்காரு !' என்றாள்.


 அவள் பார்சலைப் பிரிக்கும் போதே தெரிந்து விட்டது. அது குருமா வாசனை என்று. 


தயக்கத்துடன் உட்கார்ந்தான். நான்கு புரோட்டாக்கள் வாங்கி வந்திருந்தாள்.


 ' நானும் சாப்பிடல.. உனக்கு ரெண்டு எனக்கு ரெண்டு' இரண்டை தனியே பிரித்து எடுத்து இலையின் ஓரமாக வைத்தாள். 


'அப்படியே பிச்சு தின்னு.. இந்தா.. குருமா ஊத்திக்கோ..' அவள் குருமா ஊற்றி புரோட்டாவை அள்ளி வாய்க்குள் திணிக்கத் தொடங்கினாள். 


நவ்கி தயக்கத்தை உதறினான். அவன் பசி அவனையே தின்று கொண்டிருந்தது. அவனும் அதே வேலையை செய்தான். 


இரண்டு பேரும் ஒரே இலையில் எதிரெதிரே உட்கார்ந்து சாப்பிடும் போதுதான் கவனித்தான். 


அவள் போட்டிருந்தது ஆண்கள் அணியும் சட்டை. அந்த சட்டையில் மேல் பட்டன் இல்லாமல் இருந்தது. அவள் குனிந்து சாப்பிடும் போது அந்த இடம் விரிந்து.. அவளது முலை வீக்கத்தின்.. லேசான சதைப் பிதுங்கலை அவனுக்கு காட்டியது. உள்ளே அவள் உள்ளாடை என்று எதுவும் போடவில்லை போலும். 


இரண்டு நிமிடங்களுக்கு முன்பாகவே இலை காலியாகி விட்டது. அதை தின்று தண்ணீர் குடித்த போது பசி அடங்கி ஒரு நிறைவு வந்தது. தண்ணீர் குடித்து கை கழுவிக் கொண்டான்.


அவளும் ஏப்பம் விட்டுக் கொண்டு கேட்டாள்.

 'இன்னும் பசிக்குதா. ?' 


அவனுக்கு பசி இருந்தது. ஆனால் இதுவே தாயாளம். அவள் செய்த இந்த உதவியே போதுமானதாக இருந்தது.


 'ம்கூம்.' மறுத்து தலையாட்டினான். 


'இன்னும் வேணும்னா என்கிட்ட காசு இல்ல. பேப்பர் கொண்டு போய் போட்டாத்தான் காசு கெடைக்கும்' சிரித்தபடி சொன்னாள்.


சிரித்தபோது அவள் முகம் சற்றே கவர்ச்சியாகத் தெரிந்தது. அவளுக்கு பெரிய பற்கள்தான். ஆனால் அவைகளும் நன்றாகவே இருந்தது.


 'போதும் ' என்றான் கண்களில் நன்றியைக் காட்டி.


இலையைச் சுருட்டி குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் வீசினாள். அப்படியே சுவர் பக்கத்தில் போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனை கேட்டாள்.

 'உன் பேரு என்ன? '


 'நவ்கி..' 


'அப்படினா?'


'என் பேரு'


'அது என்ன.. நவ்விகி. ?' 


'நவ்விகி இல்ல.. நவ்கி..' முழுப் பெயரையும் சொல்ல நினைத்தான். ஆனால் இப்போது அது தேவையில்லை என்று தவிர்த்தான்.


 'என்ன பேரோ.. நவ்விகி.. குவ்விகின்னுட்டு.. எந்த ஊரு.. ?' லேசாக சிரித்தபடி கேட்டாள்.


' ..... ' சொன்னான். 


'அது எங்க இருக்கு?' 


'கோபிக்கு அந்தப் பக்கம்'


'இங்க எப்படி வந்த? '


அவன் சொல்லத் தயங்க... அவள் அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.

 'ராத்திரிக்கு என்ன செய்வ? ' 


புரியாமல் உதட்டை பிதுக்கினான். 


'என்கூட வந்தர்ரியா..?' அவளே கேட்டாள். 


சந்தேகம் வந்தாலும் அவளை நம்பினான். மெல்ல தலையாட்டி தன் சம்மதத்தை தெரிவித்தான்.


அவள் சிரித்தபடி எழுந்தாள். 

' இதுதான் என் தொழிலு.. என்கூட வா' 


கோணிப் பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு அவள் மீண்டும் நடக்கத் தொடங்க, பசியை மறந்து அவளை பின் தொடர்ந்தான் நவ்கி.



https://play.google.com/store/apps/details?id=com.niruti.books




இதன் இரண்டு பாகங்களும் இப்போது ஆப் பில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக