வியாழன், 26 செப்டம்பர், 2024

மென் மோகம்-14

 ஒரு மாதமே ஆகிவிட்டது. கமலி வாட்சப்பில் மீண்டும் வழக்கம்போல காதல் பாடல்களை ஸ்டேட்டஸாக வைத்துக் கொண்டிருந்தாள். 


ஒரு சில சந்தர்ப்பங்களில் நிருதி அதை பார்க்கவும் செய்தான். அவன் மனசு ஏனோ அவளை  அடிக்கடி நினைத்து வருந்தியது.. !!


அன்று பண்டிகை நாள். காலையில்  அவனுக்கு வாட்ஸப்பில் வாழ்த்து அனுப்பியிருந்தாள் கமலி. 


முதலில் அதைப் பார்த்ததும் அவனுக்கு வெறுப்புதான் வந்தது. 


அவளுக்கு பதில் அனுப்பக் கூடாது  என்றுதான் நினைத்தான். ஆனால் குளித்து சாப்பிட்டு ஓய்வில் இருந்தபோது மனசு அவளை நாடியது.


'தேங்க்ஸ்' என்று மட்டும் பதில்  அனுப்பினான். 


அன்று  இரவு பதினொரு மணிக்கு வாட்ஸப்பில் அவனுக்கு 'குட்நைட்' அனுப்பியிருந்தாள். 


அதை அவன் பார்த்தபோது பன்னிரெண்டு மணி. கொஞ்சம் யோசித்து பின்னர் அவனும்  ஒரு 'குட்நைட்' அனுப்பினான். 


சிறிது நேரம் கழித்து பதில் வந்தது. 


'இது a m'


மணி பார்த்தான். பன்னிரெண்டு  இருபது.


'குட் மார்னிங்' என்று அனுப்பினான்.


'வெரி குட் மார்னிங்' அவளும் உடனே அனுப்பினாள். 


அவன் அனுப்பவில்லை. 


அவளே கேட்டாள்.


'என்ன தூங்கலையா?'


'நோ'


'ஏன்?'


'சும்மா '


'ம்ம்'


காத்திருந்தான். நெஞ்சில் ஏதோ ஒரு கணம். அழுத்தம்.


இரண்டு நிமிடங்கள் ஆனது. 


'எப்படி போச்சு?' என்று கேட்டாள். 


'என்ன?'


'பண்டிகை'


'சூப்பர்'


'யார்கூட?'


'மை பிரெண்ட்ஸ்'


'ஜென்ட்ஸா?'


'கேர்ள்சும்'


'ஏன் தூங்கல?'


'சும்மாதான்'


'அது என்ன சும்மா?'


'..........'


'அலோ?'


'எஸ்?'


'ஆன்ஸரிங் மீ?'


'நான் ஏன் சொல்லணும்?'


'ஏன் சொல்லக் கூடாது?'


'புடிக்காதவகிட்ட எதுக்கு சொல்லணும்?'


'யாரு என்னை புடிக்காதா?'


'........'


'டேய்.. கேக்கறனில்ல?' உரிமையாய். 


அவனுக்கு கடுப்பானது.


'ஆமாடி. உன்ன புடிக்காது'


'ஹோ.. ஏன் புடிக்காது?"


'நீதான் பெரிய பருப்பாச்சே'


'பருப்புன்னா?'


'பெரிய இவ'


'கோபமா பேசாத. எனக்கும் கோபம் வரும்'


'உனக்கு  என்ன கோபம்?'


'உனக்கு மட்டும்  என்ன கோபம்?'


'நான் எத்தனை கெஞ்சினேன்?'


'எதுக்கு? '


'என்கிட்ட ரெண்டு வார்த்தை பேச மாட்டியானு?'


'இப்ப பேசறேன்ல?'


'நேர்ல பாத்தாலும் பாக்காதவளாட்ட போற? போன் பண்ணா கட் பண்ற? இப்ப என்ன திடீர்னு?'


'பாவமா இருந்துச்சு'


'தேவையில்லாம பாவப்டடாத'


'தப்புதான்.. இப்ப புரியது'


'புரியுதில்ல மூடிட்டு அடங்கு'


'ச்சீ போ' சட்டென  ஆப் லைன் போய் விட்டாள்.. !!


அவனுக்கு மேலும் கோபம் வந்தது. இரண்டு நிமிடங்கள் மனசு ஆற்றாமையுடன் குமைந்தது. 


அவனுக்கும் அவளைத் திட்ட வேண்டும் என்று கொதித்தது. கெட்ட வார்த்தை எழுதி அழித்தான்.


'போடி பருப்பு' என்று அனுப்பினான். 


அப்போதும் மனசு சமாதானம்  ஆகவில்லை.. !!


அரைமணி நேரம்  கழித்து  எடுத்துப் பார்த்தான். அவள் பார்த்திருந்தாள். ஆனால் பதில் இல்லை. 


ஒரு மணி நேரம் கழித்து அவன் கோபம் தணிந்து அவள் மீது ஒரு காதல் வந்தது. எல்லாம் மறந்து வாழ்த்து சொல்லி பேச வந்தவளுடன் சண்டை போட்டது தன் தவறு என்று தோன்றியது. சிறிது நேரத்தில் சரிதான் என்றும் தோன்றியது. குழப்பத்துடனே தூங்கிப் போனான்.. !!


மறுநாள் முழுக்க கமலியின் நினைவாகவே இருந்தது. அவள் என்னை நினைக்கவாவது செய்வாளா என்று யோசித்துக் கொண்டிருந்தான். 


மதியத்துக்கு மேல் 'சாரி' என்று மட்டும்  ஒரு மெசேஜ் அனுப்பினான். 


மாலையில்  அவனுக்கு பதில் வந்தது. 


'உன் சாரிய நீயே வெச்சிக்கோ'


இரவு அவளை ஆன்லைனில் பார்த்தபோது பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் சுய கவுரவம் தடுத்தது. அலுப்பில் தூங்கிப் போனான். 


பாத்ரூம் போக எழுந்தபோது மூன்று மணி. 


பாத்ரூம் போய் வந்து படுத்து போனை எடுத்துப் பார்த்தான். 


வாட்ஸப்பில் ஒரு கோப முகம் அனுப்பியிருந்தாள் கமலி. அவள் அதை பதினொரு மணிக்கு  அனுப்பியிருந்தாள். இப்போது ஆப்லைனில்தான் இருந்தாள். 


இப்போது அவனும்  அதையே திருப்பி  அனுப்பினான். ஆச்சரியமாக உடனே அவளிடமிருந்து இரண்டு கோப முகம் வந்தது. அவன் நான்கை அனுப்பினான். அவள் அனுப்பவில்லை. 


அவன்  எதிர் பார்த்துக் காத்து ஏமாந்து தூங்க முயன்ற நேரம் அவளிடமிருந்து மெசேஜ் வந்தது. 


'தூங்கலயா?'


'இல்ல'


'ஏன்?'


'சும்மா'


'ம்ம்'


'நீ தூங்கல?'


'இல்ல'


'ஏன்?'


'சும்மா'


'கிண்டலா?'


'ம்ம்'


'ஓகே நான் தூங்கப் போறேன்'


'ம்ம்'


'நீயும் தூங்கு'


'ப்ச்'


'ஏன்?'


'கொஞ்சம் மனசு சரியில்ல' என்ற அவள் சொன்னதைக் கேட்டு வியப்பானான்.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக