செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம் பூ -4

 அன்று சீனு அண்ணாவும் கொஞ்சம் மூடு அப் செட்டாகவேதான் இருந்தார்.


மத்தியானம் உணவுக்கு முன்பாக என்னைக் கேட்டார்.  


"வீட்டுக்கு போறியா இல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறியா?"


"வீட்ல போய் பாக்கறேன்"


"போய் பாரு.."


"....”


"இருந்தான்னா.. எதையாவது சொல்லி சமாளிக்க பாரு.."


இந்த ஆள் அடிப்பானாம், அவள் அழுவாளாம், இவர்களுக்கிடையில் நான்தான் சமாதானம் செய்து வைக்க வேண்டுமாம். என்ன கொடுமை,?


இருய்யா ஒரு நாள் உன் மண்டையைப் பொளக்கறேன்.


நான் தலையை ஆட்டிவிட்டுக் கிளம்பினேன்.


 நான் வீட்டுக்கு போனபோது கதவு திறந்தேதான் இருந்தது. உள்ளே போனேன். 


 கிரிஜா ஊருக்குப் போகவில்லை. வீட்டில்தான் இருந்தாள். டிவி ஓடவில்லை.


 கட்டிலில் படுத்துக் கிடந்தாள். அவள் தலையைக்கூட வாரவில்லை. அதே புடவை. கீழே கால்கள் தெரிய புடவை ஒதுங்கி அலங்கோலமாகத் தெரிந்தாள்.


"கிரி" அறை வாயிலில் நின்று மெல்லக் கூப்பிட்டேன்.


படுத்துக் கிடந்தவள் முகத்தைத் திருப்பி என்னைப் பார்த்தாள். அவள் முகம் இறுகியிருந்தது.


"ஒடம்புக்கு முடியலியா?"


அவள் ஒன்றும் பேசவில்லை.


"சாப்பிட என்ன செஞ்ச?" எனக் கேட்டேன்.


"உன் பிரச்சினை உனக்கு..?" என்று ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள். 

"எவ வாழ்க்கை எப்படி போனா உனக்கென்ன..? நேரா நேரத்துக்கு கொட்டிகிட்டா போதும். அதுதான் வேணும் உனக்கு இல்ல?"


கட்டிலின் கீழே காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்தவள் தோளில் கிடந்த முந்தானை சரிந்து விழ.. கைகளைத் தூக்கி கலைந்திருந்த முடியை அள்ளிக் கொண்டை போட்டாள்.


"உன்மேல எனக்கு அக்கறை இல்லேனு நெனச்சியா?" மெல்லக் கேட்டேன்.


"ஆமா.. அக்கறை வெச்சே.. பெரிய அக்கறை.."


"நான் பேசறது பெருசில்லை கிரி.. இது உன் பர்ஸ்னல் வாழ்க்கை. ஒரு லிமிட்டுக்கு மேல அதுல நான் தலையிட முடியாது"


முந்தானையை சரிசெய்தபடி எழுந்தாள். ஆனாலும் ஒருபக்க வீக்கம் மறையாமலே இருந்தது.


"நீ தலையும் உட வேண்டாம் காலும் உட வேண்டாம். இது என் தலைவிதி.. இதை நான்தான் அனுபவிச்சாகணும்"


அவள் பாட்டுக்கு புலம்பிக்கொண்டே எழுந்து பாத்ரூம் போனாள். 


நான் திரும்பிப் போய் டிவியைப் போட்டுவிட்டு ஹாலில் உட்கார்ந்தேன். 


கிரிஜா முகம் கழுவி தலைமுடியை கோதிக் கொண்டே வந்தாள். முந்தானை இன்னும் விலகிய நிலையிலேயே இருந்தது. அவள் மார்பு இப்போது வேறு பரிமாணம் காட்டியது. கொஞ்சம் இடுப்பு தெரிந்தது.


"அந்தாளு என்ன பண்றான்?"


"கடைல இரு‌க்காரு"


"காலைல ஹோட்டல்ல கொட்டியிருப்பீங்களே?"


சிரித்தேன். 


"பின்ன.. பசியோட எப்படி தொழில் பண்றது?"


"இப்ப மட்டும் எதுக்கு வீட்டுக்கு வந்த.. ஹோட்டல்லயே போய் கொட்டிக்க வேண்டியதுதான?"


"ரெண்டு நேரம் மூணு நேரம்னு ஹோட்டல்ல சாப்பிட்டா கட்டுபடியாகாது. அது ஒடம்புக்கும் நல்லதில்ல”


"பேசறதெல்லாம் நல்லா வக்கணையா பேசு.."


கிச்சனுக்குள் போய் பாத்திரங்களை உருட்டினாள். அதே நேரம் அவளது போன் அடித்தது. 


“கிரி போன்”


“யார்னு பாரு” 


“அத்தை”


“எடுத்துப் பேசு”


அவள் போனை எடுத்தேன். 

“ஹலோ.. அத்தை”


“யாரு நிருவா?”


“ஆமாங்த்த.. நான்தான்”


“அவ என்ன பண்றா?”


“கிச்சன்ல சாப்பாடு போடப் போயிருக்கு”


“நீ சாப்டியா?”


“இல்லத்த.. இப்பதான் வந்தேன்”


“காலைல அந்தாளு பாப்பாள அடிச்சானாமே?”


“ஆ.. ஆமாத்த”


“நீ என்ன வேடிக்கை பாத்துட்டா இருந்த? ஏன்டா உன்னை எதுக்கு கூட வெச்சிருக்கறது?”


“அத்தை.. நான் என்ன பண்றது.? இது அவங்க குடும்பப் பிரச்சினை. கொழந்தை இல்லைங்கறதுதான் அவங்க பிரச்சினை”


“அப்போ.. அந்தாளு இன்னொருத்தியை வெச்சிருக்கலேனு சொல்றியா?”


“அதப் பத்தி எனக்கு சரியா தெரியலத்த. மொத ஏதோ பழக்கம் இருந்திருக்கு போல.. ஆனா இப்ப எப்படினு தெரியல. தெரியாம நாம எப்படித்த பேசறது?”


“அப்ப நேத்து ராத்திரி அந்தாளு எங்க போனானாம்?”


“அது தெரியலத்த..”


“ஆமா நான் அப்படித்தான் போவேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோனு பாப்பாகிட்டயே சொன்னானாமே?”


“எனக்கு அது தெரியலத்த.. இவங்க போட்ட சத்தம் கேட்டுத்தான் நானே முழிச்சேன்”


கிரிஜா உணவுத் தட்டுடன் வந்தாள்.  

“ஆமா கிழிச்சான் இவன். இவன்கிட்ட போயி நீ எதுக்கு இதெல்லாம் பேசிட்டிருக்க? கேட்டா பச்ச மண்ணு மாதிரி பேசுவான்” போனில் கத்திச் சொல்லி தட்டைக் கீழே வைத்து விட்டு என் கையிலிருந்த போனை வாங்கிக் கொண்டாள்.


நான் கீழே உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினேன்.


அவள் தன் தாயிடம் நடந்த சண்டையை மீண்டும் ஒருமுறை விவரித்துக் கொண்டிருந்தாள். 


என்னைப் பார்த்தபோது,

“நீ சாப்பிட்டியா?" எனக் கேட்டேன்.


தலையை ஆட்டினாள்.


பேசிக் கொண்டே சோர்வாக சோபாவில் சாய்ந்து கொண்டாள். முந்தானையை அலட்சியமாகவே விட்டிருந்தாள். இடுப்பும் வயிறும்கூட தெரிந்தது.


நான் டிவியைப் பார்த்த படி சாப்பிட்டேன். 


நான் சாப்பிட்டு முடித்தபோது தன் தாயுடன் பேசி முடித்துவிட்டு சோபாவில் சரிந்து படுத்திருந்தாள். புடவை மேலேறி கெண்டைக்கால் தெரிந்தது.


"ஒடம்புக்கு ஏதாவது முடியலியா கிரி?"


"ஒடம்புக்கு என்ன கேடு..?" என்றாள்.


" இப்ப சாப்படலியா..?"


"போடா.. ரொம்பத்தான் அக்கறை..? கேக்க வந்துட்டான் பெருசா.."


"நான் என்ன கிரி பண்றது..?"


"ஏன்டா.. காலைல அந்த ஆளு என்னை உன் கண்ணு முன்னாலதான அப்படி அடிச்சான்..? அத நீ பாத்துட்டுதான இருந்த.. ஒரு வார்த்தை கேட்டியா..?" அவள் குரல் சூடாக வந்தது.


"அ.. அது.. உன் குடும்பச் சண்டை கிரி.. அதுதான்.." என நான் இழுக்க..


"ஏன்டா.. அப்ப இந்த குடும்பத்துல நீ இல்லையா..?" என்று கேட்டாள்.


"இருந்தாலும் அவருகிட்டப் போயி.. நான் எப்படி.?"


"என் கன்னத்துல பாரு.. அந்த ஆளு காலைல அடிச்சது.. ரத்தமே கட்டிருச்சு.. நீயே தொட்டுப் பாரு.." என்றபடி எழுந்து உட்கார்ந்தாள். 


அவள் கன்னத்தைப் பார்த்தேன். அவள் சொல்வது பொய்யில்லை. முகம் கொஞ்சம் வீங்கியிருந்தது.


"பாத்தா தெரியாது.. தொட்டுப் பாரு" என்றாள்.


நான் அருகில் சென்று மெதுவாக அவள் கன்னத்தைத் தொட்டேன். அவள் கன்னம் ஒரு மாதிரியிருந்தது.


"ஆமா கிரி.. கந்திருச்சு.." என்றேன்.


"அவ்ளோதானாடா?"


"வேறென்ன சொல்ல கிரி?"


"கோபம் வரலயா?"


"கோபம் வருதுதான்.. ஆனா.. உங்க விவகாரம் கொழந்தை சம்மந்தமானது ஆச்சே.. அதுல நான் என்ன பேச முடியும்?"


முறைத்தாள். "அதுக்கு..? அந்தாளு என்னை அடிச்சா.. ஏன் எதுக்குனு கேக்கக்கூட மாட்டியா?"


"என்னை பாத்ததும்தான் அவரு உன்னை அடிக்கறதை நிப்பாட்டிட்டு ஒடனே போயிட்டாரே.. அது என்மேல இருக்கற பயம்தானே..?"


பெருமூச்சு விட்டாள்.

“உன்னையெல்லாம் ஒரு ஆளுனு நானும் வெச்சிட்டிருக்கேனே..” திட்டினாள்.


நான் அவளைப் பார்த்தபடி சிரிக்க,

 "கொஞ்சம் தேச்சு விடு வா." என்றாள்.


"என்ன்ன..?"


"என் கன்னத்துல கொஞ்சம் ஐயோடெக்ஸ் போட்டு தேச்சு விடுடா.. வலிக்குது"


"சரி.. எங்க இருக்கு?"


"ரூம்ல.. கட்டல் மேல கிடக்கும் பாரு" என்றாள். 


நான் அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளின் படுக்கை அறைக்குள் நுழைந்தேன். 


பெட், தலையணை, போர்வை எல்லாம் ஒழுங்கின்றி கலைந்து கிடந்தது. பேன் ஓடவில்லை.


நான் தலையணை பக்கத்தில் இருந்த ஐயோடெக்ஸை கையில் எடுக்க, எனக்குப் பின்னாலிருந்து சொன்னாள்.


"இருடா.. நானே வரேன். படுக்கணும்"



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக