வெள்ளி, 14 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -13

 வேலை முடிந்து, கூட்டத்தோடு கூட்டமாக வேனில் வரும்போது லாவண்யா.. அருகிலிருந்த மலரிடம் கேட்டாள்.

''நந்தா எப்படி இருக்கான்..?''


''என்ன திடீர்னு..?'' அவளைப் பார்த்துக் கேட்டாள் மலர்.


''ஏன்டி.. கேக்கக்கூடாதா..?''


''ஓ.. தாராளமா கேக்கலாம்..'' எனச் சிரித்தாள், ''நல்லாருக்கான்.. வேற என்ன தெரியனும்..?''


''வேறெல்லாம் ஒன்னுல்ல..! நீ எதுவும் சொல்ல வேண்டாம்..!'' என்றாள்.


 அவள் தோளில் தன் தோளை இடித்தாள்.

''நேத்துகூட உன்னப்பத்தி ஒன்னு கேட்டான்..''


''என்ன கேட்டான்..?'' ஆவலாகப் பார்த்தாள்.


''நீதான் ஒன்னும் சொல்ல வேண்டாம்ன..?''


தோழியின் தோளில் கை வைத்தாள்.

''ஆ.. சும்மா சொல்லுடி.. பிகு பண்ணாத..?''


''உன் பிரெண்டு யாரையாவது லவ் பண்றாளானு கேட்டான்..''


''என்னைவா..?''


''உன்னைத்தான்”


''அதுக்கு நீ என்ன சொன்ன..?''


''வேற என்ன..? இல்லேன்னுதான்..''


''எதுக்கு அப்படி கேட்டானாம்..?''


''தெரியலப்பா.. நான் கேட்டதுக்கு.. 'சும்மா' ன்னான்..!!''


சிரித்தவாறு ''சரி.. நானும் கேட்டேனு சொல்லு..'' என்றாள்.


''என்ன.. அவன் எவளையாவது லவ் பண்றானான்னா..?''


''சீ.. எரும..! அதில்லடி.. சும்மா விசாரிச்சதா சொல்லு..!!'' என்றாள்.


“என்னது புதுசாருக்கு?”


“அவன் என்னை கேக்கறப்போ நானும் கேக்கறதுதான மொறை”


“ஆக.. என்னை தூதுபோகச் சொல்ற?”


“ஏய்.. எரும. அவன் உன் தம்பிடி”


“இப்ப யாரு இல்லேன்னா?”


“நீயா ஏதாவது அர்த்தம் பண்ணிக்காத”


“நான் எந்த அர்த்தமும் பண்ணிக்கல. நீ கேசு.  அவன் திருடன். ரெண்டு பேருமே பிராடுக. அதை வெச்சு சொன்னேன்” என்றாள். 


லாவண்யா வாயை மூடிக் கொண்டாள்.


விழிமலர் வீட்டிற்குப் போனபோது அம்மா சமைத்துக் கொண்டிருந்தாள். ஹாலில் டிவி சத்தமாகப் பாடிக் கொண்டிருந்தது.


பேகைத் தூக்கி சோபாவில் வீசிவிட்டு.. அம்மாவின் பின்னால் போய் நின்றாள்.

''சாப்பாடு ஆச்சா..?''


''என்னடி இது வந்ததும்.. வராததுமா கேக்கற..?'' எனக் கேட்டாள் அம்மா.


''பசிக்குது..'' வயிற்றைத் தொட்டுக் கொண்டு சொன்னாள்.


''டீ இருக்கு பாரு.. ஊத்தி குடி..''


''தொட்டுக்க என்ன இருக்கு..?''


''விட்டு வெச்சாத்தான இருக்கும்.. சின்னதுக ரெண்டுமே முட்டிக்குது.. ஏதாவது வேணும்னா அசுவினிகிட்ட சொல்லியனுப்பு வாங்கிட்டு வருவா '' என்றாள்.


மலர் டீயை ஊற்றினாள்.

''எங்க அவங்க ரெண்டு பேரையுமே காணம்..?''


''இருந்துச்சுங்களே.. ரூம்ல பாத்தியா..? அசு...'' எனக் கத்திக் கூப்பிட்டாள் அம்மா.


பதில் இல்லை.


''எங்கயோ போய்ட்டா போலருக்கு..''


 டீயை ஊற்றி எடுத்துக் கொண்டு.. அவள் ஹாலுக்குப் போக... அறைக்குள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.


டீயை உறிஞ்சியபடி.. அறை வாயிலில் போய் நின்று எட்டிப் பார்த்தாள்.


அவளது தம்பியும் தங்கையும் தரையில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு.. கவிழ்ந்து படுத்துப் படித்துக் கொண்டிருந்தனர்.


அவர்களது பாடப்புத்தகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தொந்தரவு செய்யாமல்.. அவள் சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு டீயைக் குடித்தாள்.


டீ குடித்த பின்பு.. அறைக்குள் போனாள். 


 அவர்கள் இரண்டு பேரும் இன்னும் அதேபோலப் படித்துக் கொண்டிருக்க.. சத்தமில்லாமல் போய் அவர்களுக்குப் பின்னால் நின்று.. புத்தகத்தைப் பார்த்த மலர் திடுக்கிட்டாள்..!!


அரை நிர்வாணக் கோலத்தில்.. ஆணும்.. பெண்ணுமான.. ஓவியங்கள்..!!


காமசூத்ரா...!!


மலர் வந்திருப்பதை உணர்ந்து.. திரும்பி அவளைப் பார்த்தாள் அசுவினி.


அவள் கண்கள் மிரள.. சட்டெனத் துள்ளி எழுந்தாள்.

''அக்காடா...'' எனக் கத்தினாள்.


அவள் சொல்லும் முன்பே.. மலரைப் பார்த்துவிட்டான் மதி.


அவன் அப்படியே சட்டென உருண்டு.. புத்தகத்தை எடுத்து மறைத்தான்.


''என்னடா அது..?'' மலர் அவனை நோக்கி நகர்ந்தாள்.


பின்னால் மறைத்தான்.

''கதை புக்கு..''


''மரியாதையா குடுத்துரு..'' சுட்டு விரலை நீட்டி எச்சரித்தாள்.


''ம்கூம்..'' வெளியே ஓடப் பார்த்தான்.


''குடுறா..'' அவனைத் தடுத்துப் பிடித்தாள்.


 புத்தகத்தை அவளிடம் கொடுக்காமல் லாவகமாகக் கை மாற்றினான்.


அவள் அவனை வளைத்துப் பிடிக்க.. அவன் அவளிடம் மாட்டிக் கொண்டதும்.. புத்தகத்தை சட்டென அசுவினியிடம் வீசினான்.


''தூக்கிட்டு ஓடிருடி..'' எனக் கத்தினான்.


மலர் அவனை விட்டு.. தங்கையின் பக்கம் திரும்ப.. மதி அவளை நகர விடாமல் இழுத்துப் பிடித்துக் கோண்டான்.


''ஓடிருடி..'' மீண்டும் கத்தினான்.


அசுவினி புத்தகத்தை எடுத்துக் கொண்டு.. ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவிட்டாள்.


''ஏய்ய்.. வாடீ இங்க..'' விழிமலர் கத்தியதை அவள் மதிக்கவில்லை.


அவள் சட்டெனத் திரும்பி மதியைப் பிடித்துக் கொண்டாள்.


''ஏதுடா அந்த புக்கு..?''


''சொன்னா.. அடிப்ப...'' எனச் சிரித்தான்.


''சொல்லலேன்னா தோளவே உறிப்பேன்..'' அவன் காதைப் பிடித்தாள்.


''என்னைவிடு.. சொல்றேன்..'' திமிறினான்.


''சொன்னாத்தான் விடுவேன்..''


அவன் துள்ளித் திமிறினான்.


அவள் விடாமல் பிடித்துக் கொண்டாள்.

''சொல்லுடா..? ஏது அந்த புக்கு..?''


அவன் வசமாக தன் அக்காளிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்து..

'தூ..' என அவள் முகத்தில் அவனது எச்சிலைத் துப்பினான்.


இதை அவள் எதிர்பார்க்கவில்லை.


அவனை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் முகத்தைத் துடைக்கப் போக.. அவன் அவளது நெஞ்சில் கை வைத்து அவளைப் பின்னால் தள்ளிவிட்டு.. வெளியே ஓடினான்.


''தாயோலீ... கைல கெடைச்ச...'' எனக் கத்தினாள் மலர்.


அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே போய்ப் பார்த்தாள். 


இரண்டு பேருமே இல்லை.   ஓடிவிட்டார்கள்..!!


அந்த புத்தகத்தை துகிலன்தான் கொடுத்திருக்க வேண்டும் என்பது அவளுக்குப் புரிந்தது.. !!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பட்டு ரோஜாவின் ஈரமுத்தம் ?

நிருதி.. !! சொன்னது…

அது இனி இலவசமாக இல்லை

கருத்துரையிடுக