வெள்ளி, 5 ஜனவரி, 2024

பட்டு ரோஜா -2

                   மாடி ரூம்.. !!


அழகாக இருந்தது. அவன் ஒருவனுக்குப் போதுமான அறை. ஆனால் கீழே இட நெருக்கடி காரணமாக... மாடியில் அவனது அறைக்கு எதிர் புறம் காமன் லெட்ரின் பாத்ரூம் கட்டியிருந்தார்கள். 


கீழே இரண்டு போர்ஷன்கள் இருந்தன.!


காலை.. !!


நந்தா மொட்டை மாடியில் நின்றிருந்தபோது மேலே வந்தாள் அந்தப் பெண்..! கீழ் வீட்டில் குடியிருக்கும் பெண்..!!


அவளின் கன்னங்கள் மட்டுமல்ல, உடம்பும் செழிப்பாகத்தான் இருந்தது. குண்டு கன்னம், குண்டுப் பெண். ஊட்டமான உடம்பு. மா நிறம். 


 ஆனால் பருவம் அவளது மேனியில் பளபளப்பையும்... அழகான எழில் வீக்கங்களையும் கொடுத்திருக்க... அவள் மீது... இயல்பாகவே அவனுக்குள் ஓர் ஆசை எழுந்தது.! 


அவனை நேராகப் பார்க்காமல், ஓரக் கண்ணால் பார்த்துப் போனாள் அந்தப் பெண்.! அவளது பருவ விழியின் அந்தப் பார்வைக்கு காந்த சக்தி மிக அதிகம் என எண்ணினான் நந்தா..!


'இவளோடும் பழகலாம் தப்பில்லை. கொஞ்சம் புஷ்டிக்கா இருந்தாலும் ஆளு நல்லாத்தான் இருக்கா'


அவன் வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தான். 


பாத்ரூம் கதவு திறக்கும் க்ரீச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.


அந்தப் பெண் ஈரக் கால்களுடன் வெளியே வந்தாள்.  ஒருநொடி அவனைப் பார்த்து கண்களைச் சுண்டிவிட்டு சட்டென பார்வையை மாற்றிக் கொண்டாள்.


அவள் பாத்ரூமை விட்டு வெளியே வரும்போது, எதற்கும் இருக்கட்டுமே என்பதைப் போல ஒரு, ''ஹாய்...'' சொல்லிப் புன்னகைத்தான்.


அவள் 'ஹாய் ' சொல்லவில்லை. 


மறுபடியும் கேட்டான் நந்தா.

'' ஹலோ... உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா.?''


''ரொம்ப அவசியமா..?'' கண்களில் மிளகாய் பொடியயைத் தூவியதுபோல முறைப்புடன் கேட்டாள்.


முகத்திலடித்தது போலிருந்தது அவனுக்கு. இருப்பினும்... இளம் பெண்களிடம் திட்டு வாங்குவது ஒன்றும் அவனுக்கு புதிதல்ல...!! 


அவள் நடந்து செல்வதையே பார்த்தான். அவள் நடையில் அவன் தன்னைப் பார்க்கிறான் என்கிற கவனம் தெரிந்தது. 


நாசூக்காய் நடக்கிறாளாம்.!


படியிறங்கும் முன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். 


அவன் பார்வையை திருப்பிக் கொள்ள நினைத்த நொடி அவளே திருப்பிக் கொண்டு போனாள்.. !!



☉ ☉ ☉




''ஹாய்..'' என்றதும்.. வழக்கம் போல மொபைலை நோண்டிக் கொண்டிருந்த கயல்விழி நிமிர்ந்து பார்த்தாள். 


அவளது ஈர இதழ்கள்.. உடனடியாக ஸ்னேகித்தன.

''ஹாய்..'' சொன்னபோது கன்னங்களில் ஒரு மாற்றம் தெரிந்தது.


''எப்பவும்.. மொபைல்தானா..?'' நந்தா கேட்டான்.


''அதுலென்ன தப்பு..?'' எனக் கேட்டாள்.


''தப்பே இல்லை.. யாரு.. பாய் பிரெண்டா..?''


''ஹெலோ.. வாட் டூ யூ மீன்..?''


''இல்ல.. மொபைல்ல.. சாட்.. யாருகூட.. னு.. கேட்டேன்..''


''ஏன்.. பாய் பிரெண்டாதான் இருக்கனுமா..?''


''யாரு சொன்னது..? ஓகே கூல்..!'' எனச் சிரித்தான்.


''வொர்க்கா..?'' சிரிக்காமல் கேட்டாள்.


''அப்படித்தான்..''


"அதென்ன அப்படித்தான்?"


"கிட்டத்தட்ட ஒர்க் மாதிரி.. பார்ட் டைம் ஜாப்"


''எங்க..?''


''கம்ப்யூட்டர் செண்டர்ல...''


''கம்ப்யூட்டர்.. செண்டரா..?'' புருவத்தை தூக்கினாள்.


''ஹலோ.. அத ஏன்.. ஒரு மாதிரி கேக்கறீங்க..?''


''நத்திங்...'' சிரித்தாள் ''மெயின் ஜாப்..?''


''சர்ச்சிங்..'' என்றான்.


அவனுடன் பேச ஆர்வம் எழுந்தபோது, பஸ் வந்தது. ஹாரன் ஒலி எழுப்பியது.


''ஓகே கயல்.. சி யூ.. லேட்டர்.. பை..'' எனச் சொல்லிவிட்டு ஒடிப் போய் பஸ் எடுக்கும் முன் ஏறிக் கொண்டான் நந்தா...!!


பட்டாம் பூச்சி ஒன்று அவளின் நெஞ்சைத் தொட்டுப் போனது போலிருந்தது. அவன் போன பின்னும் அவள் மனசு அவனைப் பற்றியே எண்ணமிடத் தொடங்கியது.. !!


'இது காதலா? சே..! அவன் அவ்ளோ நல்ல பையன்லாம் இல்லை. பாக்க.. ஆள் ஏதோ நல்லாருக்கான். மத்தபடி.. ஒத்து வராது. பிரெண்டு ஓகே!'




●●●●




 ரண்டு நாட்கள் கழித்து.. அதேபோல ஒரு காலை நேரம், மேலே வந்தாள்.. அந்தக் குண்டுப் பெண்.!


அவன் முகத்தில் அடித்தது போல பேசிய பிறகு.. நந்தா அவளுடன் பேசவில்லை. ஆனால் அவ்வப்போது ஒரு லுக் மட்டும் விடுவான்.!


''என் பேர் கேட்டிங்க.. இல்ல..?'' என்று இப்போது அவளே பேசினாள். 


கண்ணாடி போட்டிருந்தாள். வாயில் எதையோ மென்று கொண்டிருந்தாள்.


நந்தா.. லேசான வியப்புடன் அவளைப் பார்த்தான்.


''பரவால்ல.. தைரியமானவர்னு நெனச்சேன். ஆனா.. இப்படி பயந்துட்டிங்க..?'' எனச் சிரித்த.. அவள் சிரிப்பு.. நிச்சயமாக அவனை கேலி செய்தது.!


'வாரே வா..!' அவனுக்குள் மெல்லிய ஆணவச் சிலிர்ப்பு எழுந்தது.


"இல்லங்க.. நீங்க ரொம்ப நல்ல பொண்ணா தெரிஞ்சீங்க.. அதான் உங்ககூட நட்பு வெச்சிக்கலாம்னு ஒரு ஹாய் சொன்னேன். பட்.. உங்களுக்கு நட்பு புடிக்காது போலனு அதுக்கு பின்னால புரிஞ்சுகிட்டேன்"


"எனக்கு நட்பெல்லாம் புடிக்கும்" 


"அப்போ.. நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போலருக்கு. ஸாரி.."


"இட்ஸ் ஓகே.."


''சரி.. இப்ப சொல்லுங்க..! இந்த காந்தக் கண்ணழகியோட.. ஸ்வீட் நேம்..?'' அவளின் இடது கன்னத்தில் ஒரு பரு தன் சிவப்பு முத்திரையைப் பதித்திருந்தது.


பூரிப்பு வந்துவிட்டது. கன்னங்கள் மினுக்கச் சிரித்தாள். பின்.. சொன்னாள்.

 ''கமலி.. !!"


தன் பெயரை எவ்வளவு அழகாக உச்சரிக்க முடியுமோ அவ்வளவு அழகாகவே உச்சரித்தாள் அவள். அதற்கென அவள் தனிப் பயிற்சி எடுத்திருக்க வேண்டுமோ எனத் தோன்றியது.


இந்த இரண்டு நாளில் அவள் பெயர் மட்டுமல்ல.. இரண்டு போர்ஷன்களில் இருக்கும் அனைவரின் பெயர்.. வேலை.. எல்லாம் தெரிந்து கொண்டதோடு.. அவர்களுடன் ஒரு ''ஹாய் '' சொல்லும் பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டிருந்தான் நந்தா.!


''நைஸ்.. நேம்..!!'' என்றான், "பேர் மட்டுமில்லே.. கேர்ளும் நைஸ்தான்" பார்வையால் அவளை முழுதாக வருடினான்.

'' என்ன படிக்கறீங்க..?''


''செகண்ட் இயர்"


நைட்டியில் இருந்தாள் கமலி. அவளது பருவக் கதுப்பு மேடுகள்.. நைட்டிக்கு மேல்.. முகடாக எழுந்து நின்று  தன் இருப்பைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. கழுத்தில் சன்னமான ஒரு செயின் போட்டிருந்தாள்.


''ஒரே பொண்ணா..?'' அவன் பார்வை அவளை சில்மிசம் செய்தன.


''தம்பி இருக்கான்..!'' அவளிடம் வெட்கத்தின் சாயல் தென்பட்டது.


''அவரு என்ன படிக்கறாரு..?''


" டுலவ்த்"


''கான்வென்ட்டா..?''


''ம்கூம்..'' காதில் தொங்கிய கம்மல்கள் ஊசலாட வேகமாகத் தலையாட்டினாள் கமலி, ''கவர்ண்மெண்ட் ஸ்கூல்தான்.!  ஹையர் செகண்ட்ரி ஸ்கூல்..''


''பரவல்லயே.. தமிழ் வாழ்க...'' சிரித்துக் கொண்டே சொன்னான்.


''நீங்க தனியாவா இருக்கீங்க..?'' கண்ணாடிக்குள் இருந்த கண்கள் வழியாக அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


''நோ.. என் கூட இப்ப.. ஒரு சூப்பர் ஃபிகர் நின்னு பேசிட்டிருக்கு..''


"அலோ.. நான் ஒண்ணும் சூப்பர் ஃபிகர் இல்ல.. நார்மால் ஃபிகர் அவ்ளோதான்.."


"யாரோ தப்பா சொல்லிட்டாங்க உங்களுக்கு.. நீங்க அழகான பொண்ணுதான். என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஃபிகர"


அவளின் மூக்கு கூர்மை காட்டியது.


''சரி.. பட் நான் அத கேக்கல..! உங்க ரிலேஷன்லாம்..?''


''இருக்காங்க.. ஊர்ல..!''


''ஆ.. எங்கப்பா சொன்னாங்க..! நீங்க ஹவுஸ் ஓனருக்கு.. ரிலேஷன்னு..''


''அப்படியா சொன்னாரு..?''


''ஆமா.. ஏன்..?'' கண்களை சுருக்கிப் பார்த்தாள்.


'' என்னைவிட.. என் பிரெண்டு.. ஒருத்தன்.. அவன்தான்.. அவருக்கு ரொம்ப ரிலேஷன்..'' என்றான்.


அவள் புரியாமல் அவனைப் பார்க்க.. கண் சிமிட்டி..

''காலேஜ் போகல.?'' எனக் கேட்டான்.


''போகனும்..'' என்றுவிட்டு நினைவு வந்தவளைப்போல தடதடவெனப் படிகளில் இறங்கி ஓடினாள்.


'அவள் வந்ததே என்னைப் பார்க்கத்தானோ?'


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக