சனி, 20 பிப்ரவரி, 2021

மனமே.. மனமே.. !!

 அவள் அழகாய் இருந்தாள். மிகவும் அழகாயிருந்தாள். அவள் கண்கள்.. கன்னங்கள்.. எதைச் சொல்ல எதை விட.. ? மிக மிக அழகாகப் பேசினாள். மிக மிக மிக அழகாக சிரித்தாள். அந்தச் சிரிப்பு.. அதுதான் அவள்.. !!


அவள்..

"எக்ஸ்க்யூஸ் மி" பின்னாலிருந்து அழைத்தான்.

கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்து முகம் திருப்பினாள். அவனை இயல்பாக ஏறிட்டன அவளின் கயல்விழிக் கண்கள். "எஸ்..?"

"எ.. எனக்கு ஒரு சந்தேகம்"

"கேளுங்க?"

"உங்களுக்கு இது புரியுதா பாருங்க" கடிதம் ஒன்றை நீட்டினான். தந்தக் கை நீட்டி வாங்கினாள்.

மெல்லிய படபடப்புடன் சொன்னான். "இப்பவே பதில் சொல்லணும்னு இல்லை. நாளைக்கு கூட நிதானமா யோசனை பண்ணிச் சொல்லலாம். உங்களுக்கு புரியலேன்னா உங்க பிரெண்ட்ஸ்கிட்ட காட்டுங்க. அபிப்ராயம் கேளுங்க. நாளைனு ஒரு நாள் இருக்கு. அப்ப சொன்னா போதும்"  எனச் சொல்லி விட்டு அவள் கடிதம் பிரிக்கும் முன் சட்டென அங்கிருந்து அகன்றான்.. !!


****


மறுநாள் அவளை அவன் மீண்டும் சந்தித்தான்.  "இப்ப என் சந்தேகத்தை தீத்துக்கலாம்னு நினைக்கறேன்"

"ம்ம்" அவள் உதட்டில் குறுநகை.

"நீங்க என்னை விரும்புவீங்களா மாட்டிங்களானு தினமும் என் மனசுல ஒரு மகாபாரதமே நடந்துட்டிருக்கு. உங்க பதில்?"

"இத நேத்தே கேட்டிருக்கலாம்"

".. லாம்.. பட் உங்களுக்கு யோசிக்க டைம் குடுக்கலியேனு நான் பீல் பண்ண கூடாது பாருங்க"

"ம்ம்.. பட் ஸாரி.. என்னால உங்களை லவ் பண்ண முடியாது"

"தேங்க் காட்" நெஞ்சில் கை வைத்துச் சொன்னவனை வியப்பாய் பார்த்தாள். 

"உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க. உங்க அழகுல மயங்கி உங்களை லவ் பண்ணிட்டு என் மனசு தவிச்ச தவிப்பு இருக்கே.. அது எனக்குத்தாங்க தெரியும். பாவங்க என் மனசு அது தவிச்ச தவிப்பு எனக்கே தாங்கல. இப்ப நீங்க என்னை விரும்பலேனு தெரிஞ்சு போச்சு. இனி அது அப்படி தவிக்க வேண்டியதில்ல. ரிலாக்ஸா இருக்கும். ரொம்ப நன்றிங்க. என்ன.. நீங்க லவ் பண்லேனு கொஞ்சம் பீல் பண்ணும். இட்ஸ் ஓகே. என் மனசை பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அது தேறிடும். அகெய்ன் மெனி மோர் தேங்க்ஸ்.. பை.. !!" அவளிடமிருந்து எந்த பதிலையும் எதிர் பாராமல் திரும்பி நடந்தான் அவன்.. !!


நவம்பர் 25, 2015.

என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !! 

மற்றும் சில சுவாரஸ்ய கதைகள் 

மகிழ் வதனி